- ஃபோன் பார்ப்பதால் கண்களை பாதுகாக்கும் உடற்பயிற்சிகள் :
- தொடர்ச்சியாக ஃபோன் பார்ப்பதால் வரும் பிரச்சினை :
- மொபைலை Blue Light வெளிச்சத்தில் வைக்கலாமா ?
- மொபைல் அல்லது கணினி தொடர்ந்து பார்க்கலாமா ?
- தலை அசைத்து உடற்பயிற்சி :
- கைகள் சூடும் கண்கள் பாதுகாப்பும் :
- கண்கள் அசைத்து உடற்பயிற்சி :
- கண்களை சுற்றி உள்ள புள்ளிகளை அழுத்தம் கொடுக்கும் உடற்பயிற்சி முறைகள் :
ஃபோன் பார்ப்பதால் கண்களை பாதுகாக்கும் உடற்பயிற்சிகள் :
இன்றைய காலத்தில் மொபைல் ஃபோன் இல்லாத மனிதர்கள் என்பவர்கள் இந்த உலகில் இல்லை என்று நாம் சொல்லலாம். ஆமாங்க இன்றைய காலத்தில் பிறந்த குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளியில் வந்த உடனே, மொபைல் ஃபோன் பார்க்க ஆரம்பித்து விடுகிரோம்.
இல்லையென்றாலும், நாமே முன்பு நிலா காட்டி சாப்பாடு ஊட்டிய காலம் போய் நாமே பிறந்த குழந்தைக்கு மொபைல் போன் காட்டி சாப்பாடு குடுக்க விரும்புகிறோம்.
குழந்தை பிறப்பு முதல் பிள்ளைகள் பள்ளி படிக்கும் போது, கல்லூரி படிக்கும் போது, வேலைக்கு சென்ற பின்னர், என அனைத்து வயதிலும், அனைத்து நேரமமும், நேரம் காலம் பார்க்காமல் வயது முதிர்ந்தவர்கள் வரை இரவு பகல் தெரியாமல் போய்விடும் அளவுக்கு ஃபோன் பார்ப்பது, பயன்படுத்துவது என ஆகிவிட்டது.
நமது உடலுக்கு தேவையான போதுமான உடற்பயிற்சி இல்லாமல் ஆகிவிட்டது. மேலும் விளையாட்டை கூட நாம் ஃபோன் மூலம் விளையாட ஆரம்பித்து விட்டோம். இதனால் உடல் உழைப்பும் இல்லை, உடற்பயிற்சியும் இல்லை. இதில் ஒரு முக்கியமான விஷயம் என்ன என்றால், நமது உடலில் அதிகம் பாதிக்கப்படுவது நமது கண்கள் தான்.
இதனால், நாம் இந்த பதிவின் மூலம், நமது கண்களை பற்றியும், கண்களை ஃபோன் பார்ப்பதன் ஏற்படும் ஆபத்துக்கு உடற்பயிற்சி பற்றியும் பார்க்கலாம்.
மேலும் படிக்க : What is Crypto currency ? | கிருப்டோ கரன்சி என்றால் என்ன ? | Tamil
தொடர்ச்சியாக ஃபோன் பார்ப்பதால் வரும் பிரச்சினை :
நாம் தொடர்ச்சியாக ஃபோன் பார்ப்பதால் வரும் பிரச்சினையில் ஒரு பிரச்சினை என்ன என்றால், Myopia என்று எல்லோராலும் இன்றைய காலத்தில் அதிகம் பேசப்படும் கிட்டப்பார்வை பிரச்சினை ஆகும்.
ஃபோன் பார்ப்பதால் மட்டும் இல்லை, கணினி, லேப்டாப், ஃபோன் இதில் எதை நாம் தொடர்ந்து பார்த்துகொண்டு வந்தாலும், உபயோகித்து வந்தாலும் இந்த Myopia என்று அழைக்கபடும் கிட்டப்பார்வை பிரச்சினை ஏற்படும்.
இந்த கிட்டப்பார்வை பிரச்சினை இந்த காலகட்டத்தில் யாரை அதிகம் தாக்குகின்றன, யார் கண்கள் இந்த கிட்டப்பார்வை பிரச்சனையால் பாதிக்கப்படுகிறது என்று நீங்கள் கேட்டால், அது குழந்தைகள் தான். குழந்தைகள் சிறு வயதில் கிட்டப்பார்வை பிரச்சினை ஏற்பட்டு கண்களில் கண்ணாடி அணியும் சூழ்நிலை இந்த தொடர்ச்சியாக ஃபோன், கணனி, போன்ற விஷயங்களை பார்ப்பதால் தான் ஏற்படுகிறது.
மேலும் படிக்க : விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil
மொபைலை Blue Light வெளிச்சத்தில் வைக்கலாமா ?
மொபைல் போன் யை, Blue Light வெளிச்சம் என்று சொல்லக்கூடிய Normal Mode இல் வைக்க கூடாது. ஏன் என்றால் மொபைலில் இருந்து வெளிபடக்கூடிய அந்த ப்ளூ நிற வெளிச்சம் தரக்கூடிய விசயம் ஆனது, நமது கண்களை எளிமையாக பாதிப்பு செய்கிறது.
இப்படி இருப்பதால், எப்படி ஃபோன் உபயோகபடுத்துவது என்று இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். அதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான், இந்த Dark Mode எனப்படும், விஷயமாகும். இதனால், நீங்கள் Dark Mode எனப்படும் விஷயத்தை நீங்கள் உங்கள் மொபைலில் ON செய்து வைத்து கொள்ளுங்கள்.
இதனால், உங்கள் கண்களில் பாதிப்பு ஏற்படாது என்று அர்த்தம் இல்லை. உங்கள் கண்களில் அதிக நேரம் உபயோகப்படுத்துவது மூலம் ஏற்படும் பாதிப்பு கொஞ்சம் குறையும். அதற்காக தான் இந்த Dark Mode எனப்படும் விஷயம் ON செய்து வைத்து பயன்படுத்துங்கள்.
மொபைல் அல்லது கணினி தொடர்ந்து பார்க்கலாமா ?
மொபைல் ஃபோன் ஆகட்டும், இல்லை நீங்கள் கணினியில் வேலைகள் செய்பவராக இருந்தால் கணினி ஆகட்டும், எதுவாக இருந்தாலும், நீங்கள் தொடர்ந்து 15 நிமிடம் முதல் 20 நிமிடம் மேல் பார்க்க கூடாது. அதே நேரம் நீங்கள் பார்க்கும் அந்த வேளையில் கண்களை அடிக்கடி திறந்து, மூடி, கண்களை சிமிட்டுதல், செய்து பார்க்க வேண்டும். பயன்படுத்த வேண்டும்.
அப்போது தான், உங்கள் கண்களில் ஈரம் ஏற்படும். பாதிப்பு சற்று குறையும்.மேலும் ஒவ்வொரு 15 முதல் 20 நிமிடம் கழித்து, நீங்கள் உங்கள் இருக்கையில் இருந்து முதலில் எழுந்து வெளிப்புற பகுதியை சற்று பார்க்க வேண்டும். அது எதுவாக இருந்தாலும் சரி, மேலும் அதிலும் முக்கியமாக பச்சை நிறத்தில் இருக்கும் பொருட்களை பார்த்தால் இன்னும் சிறந்தது.
பச்சை நிறம் என்றால், மரம், செடிகள், கொடிகள், இப்படி பார்க்க வேண்டும். ஏன் என்றால், பச்சை நிறம் ஒவ்வொரு 15-20 நிமிடம் ஒருமுறை வீதம் 20 முதல் 30 வினாடி என்று பார்க்க வேண்டும். இப்படி பார்த்து மீண்டும் ஃபோன் பார்பதோ, அல்லது வேலைகள் செய்வது செய்யலாம். மீண்டும் 15-20 நிமிடம் வேலை செய்து மீண்டும் 20-30 வினாடி பார்க்கலாம்.
இப்போது நாம் கண்களை பாதுகாக்கும் உடற்பயிற்சிகளை, உடற்பயிற்சி வகைகளை பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க : Top 10 Calorie Foods to Gain Weight in Tamil
தலை அசைத்து உடற்பயிற்சி :
தலையை, மெதுவாக மேலும், கீழும், இடது புறம், வலது புறம், என அனைத்து பக்கமும் மெதுவாக தினமும் 1 மணி நேர இடைவளிகளில் பண்ணுவது நல்லது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, நமது கண்களை இப்படி இடது, வலது, மேல், கீழ், என அனைத்து பக்கமும் அசைத்து உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உங்கள் களுத்து பகுதிக்கு நல்லது. உங்கள் தண்டுவட பகுதிக்கு நல்லது. உங்கள் தலைக்கும், உங்கள் கண்களில் ஓடும் நரம்புகளுக்கும், உங்கள் தலைக்கும் நல்லது ஆகும்.
மேலும் இந்த தலை அசைப்பு உடற்பயிற்சி என்பது, தினமும் காலை எழுந்தவுடன், இரவு தூங்கும் நேரத்திற்கு முன்பு, மற்றும் நமக்கு கிடைக்கும் நேரமெல்லாம் ஒரு நாளில் செய்யலாம். 1 மணி நேரத்திற்கு ஒரு முறை இப்படி 5 நிமிடம் செய்தால் நமக்கு மிகவும் நன்மை அளிக்கும். தேவை இல்லாத வழிகளும் தவிர்க்கலாம்.
கைகள் சூடும் கண்கள் பாதுகாப்பும் :
இந்த கைகள் சூடும், கண்கள் பாதுகாப்பும் என்றால், என்ன என்று நீங்கள் யோசிக்கலாம். இது இந்த முறை சீனா மற்றும் இன்னும் சில நாடுகளில் அடிக்கடி செய்யபடுகிறது. இந்த உடற்பயிற்சி முறையை சீனா வில் 1200 ஆண்டுகள் முன்பு, சன் சிங்கோ என்று அழைக்கப்படுபவர் இதனை தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்தார்.
இந்த முறை எப்படி செய்ய வேண்டும் என்றால், உங்கள் கைகள் இரண்டையும் கடவுளை வணங்குவது போல சேர்த்து வைத்து, நன்றாக இரண்டு கைகளையும் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நிமிடம் நன்றாக உங்கள் கைகளை தேய்த்து,
பின்னர் உங்கள் கைகளை எடுத்து உங்கள் கைகளில் Palm என்று அழைக்கபடும், உள்ளங்கை பகுதியின் கீழ் பகுதி உங்கள் கைகள் உரசிய சூட்டோடு உங்கள் கண்களை மூடி, கண்களின் மேல் வைக்க வேண்டும்.
கண்களின் மேல் வைத்த கையை, அந்த சூடு போகும் வரை, ஏறக்குறைய 20 விநாடிகள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பின்னர் மீண்டும் அதே மாறி உங்கள் கைகளை உரசி, ஒரு நிமிடம் உரசி மீண்டும் 20 விநாடிகள் உங்கள் கண்களின் மேல் அந்த சூட்டை வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து ஒரு நேரத்தில், 5 முறை செய்யலாம்.
ஒரு நாளைக்கு இதே போல் இரண்டு வேலை முதல் மூன்று வேளை கூட செய்யலாம். கண்டிப்பாக உங்களுக்கு நன்மை அளிக்கும். மேலும் இதனை இந்த முறையை அன்றாடம் சீனா வில் இன்றளவிலும் இந்த முறை நிறைய மக்களால் செய்யபடுகிறது. மேலும் சீனா வில், பல பள்ளிகளில், இன்றளவும் இதை சொல்லி கொடுத்து, அன்றாடம் சிறிது நேரம் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க : Home Remedies For Gas Problem In Tamil | வாயு பிரச்சனையை சரி செய்வது எப்படி ?
கண்கள் அசைத்து உடற்பயிற்சி :
உங்கள் கண்களை தினமும், காலை, மாலை, என இரண்டு வேலைகளும் நேராக அமர்ந்து, அல்லது நேராக நின்று கொண்டு, உங்கள் கண்களை மேற்புரமாக அசைக்க வேண்டும். கீழ்புறம் அசைக்க வேண்டும். இடது புறம் அசைக்க வேண்டும். வலது புறம் அசைக்க வேண்டும். இப்படி நான்கு பக்கமும் அசைக்க வேண்டும்.
இப்படி செய்யும் போது, ஒவ்வொரு புறம் பார்க்கும் போதும், உங்கள் கண்களை சிமிட்டி கொள்ளவும் வேண்டும். மேலும் இது போல செய்து கொண்டே, கண்களை வட்டமாக பார்பது போலவும் பார்க்க வேண்டும்.
இதை செய்யும் போது, உங்கள் கண்களை சிமிட்டியும், உங்கள் கண்களை மெதுவாகவும் அசைக்க வேண்டும். இப்படி செய்து வரும் உடற்பயிற்சியால் உங்கள் கண்களுக்கு நல்லது. மேலும் இதை ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் இரண்டு வேளை காலை மாலை என மட்டும் செய்தால் போதுமானது. Clock wise மற்றும் anti clock wise என்ற விகிதத்தில் செய்ய வேண்டும்.
கண்களை சுற்றி உள்ள புள்ளிகளை அழுத்தம் கொடுக்கும் உடற்பயிற்சி முறைகள் :
முதல் இரண்டு புள்ளிகள் :
முதல் இரண்டு புள்ளிகள், உங்கள் மூக்கின் மேற்பகுதியில், கண்களின் ஆரம்ப பகுதியில் இணையும் இடத்தில் தொட்டு பார்த்தால், அந்த இடத்தில் சிறிய பள்ளம் போல இருக்கும். அந்த இடத்தில் உங்கள் ஆள்காட்டி விரலை 45 டிகிரி என்ற விகிதத்தில் உங்கள் ஆள்காட்டி விரலை வைத்து மெதுவாக முறையாக அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த அழுத்தம் கொடுப்பது 30 நொடி முதல் 60 நொடி வரை மெதுவாக கொடுக்கலாம்.
மேலும் படிக்க : Top 10 Healthy Foods For Heart in Tamil | Prevent Heart Attack in Tamil
இரண்டாவது இரண்டு புள்ளிகள் :
உங்கள் கண்களின் மேல் நெற்றி நடு பகுதியில் இருந்து புறுவங்கள் ஆரம்பித்து, புருவ வளைவு பகுதி வரும் போது, உள்ள இடத்தில் தொட்டு பார்த்தால், அந்த இடத்தில் மெதுவாக இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் இரு புறுவங்கள் மேல் வைத்து மெதுவாக அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனை 30 நொடி முதல் 60 நொடி வரை செய்ய வேண்டும்.
மூன்றாவது இரண்டு புள்ளிகள் :
இரண்டு கண்களின் வலது புறம் ஓரத்தில், பொட்டுப்பகுதி என்று சொல்லக்கூடிய இடத்தின் அருகில், கண்களின் இமைகளின் ஓர பகுதியில், வலது புறம் ஓரத்தில் மெதுவாக அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை 30 நொடி முதல் 60 நொடி வரை செய்ய வேண்டும்.
நான்காவது இரண்டு புள்ளிகள் :
நான்காவது இரண்டு புள்ளிகள் என்பது, கண்களின் அடிப்புறத்தில் நடு பகுதியில், அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த நான்கு புள்ளியில் அழுத்தும் முறை படிக்கும் போது உங்களுக்கு எந்த இடம் என்று கண்டிப்பாக புரியும்.
ஒவ்வொரு கண்களை சுற்றியும் நான்கு புள்ளிகள் உள்ளன. இந்த முறை அக்குபஞ்சர் புள்ளிகள் அழுத்தம் கொடுத்து வருவதால், உங்கள் கண்களின் தன்மை மேம்படும்.
மேலும் இதனால், மிகவும் நன்மை கிடைக்கும். மேலும் இதுபோன்ற கண்களை மொபைல் ஃபோன் பார்ப்பது, கணினி பார்ப்பது, விஷயங்களில் இந்த உடற்பயிற்சிகளை செய்து வாருங்கள். உங்களுக்கு உங்கள் கண்களுக்கு சற்று இந்த உடற்பயிற்சி மூலம் உங்கள் பாதிப்பு இல்லாமல் பார்த்து கொள்ள முடியும். இதனால் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
மேலும் படிக்க : மார்பு பகுதியில் வலி வந்தால் மாரடைப்புக்கான அறிகுறியா ? What is Heart Attack Symptoms in Tamil