உணவுக்கு பின் மலம் களிப்பீர்களா ? உப்புசத்தால் ஏற்படும் நோய்கள் என்ன ?

Contents
  1. உணவுக்கு பின் மலம் களிப்பீர்களா ? உப்புசத்தால் ஏற்படும் நோய்கள் என்ன ?
  2. நீங்கள் உண்ட உணவு செரிமானம் நடக்கிறதா ?
  3. செரிமானம் இரண்டு வகையில் வெளியேறும் :
  4. வயிறு உப்புசத்து இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள் :
    1. (1) மாவுப்பொருட்கள் :
    2. (2) Junk Foods / பதப்படுத்தும் உணவுகள் :
    3. (3) பால் :
    4. (4) உப்பு மற்றும் மசாலா பொருள் :
    5. (5) juice / ஜுஸ் குடிப்பது :
    6. (6) கிழங்கு வகைகள் :
    7. (7) குளிரூட்டப்பட்ட பொருள்கள் :
  5. வயிறு உப்புசத்து இருந்தால் உண்ண வேண்டிய உணவுகள் மற்றும் முறைகள் :
    1. (1) அரிசி பொருள் :
    2. (2) சீரகம் : சீர் + அகம் :
  6. தூக்கம் சரிவர இல்லையென்றால் செரிமானம் பாதிக்குமா ?
  7. தினமும் தண்ணீர் :
  8. உப்புசம் இருந்தால் சோர்வு ஏற்படுமா ?
  9. உணவுக்கு பின் மலம் கழிக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளதா ?

உணவுக்கு பின் மலம் களிப்பீர்களா ? உப்புசத்தால் ஏற்படும் நோய்கள் என்ன ?

வணக்கம், மக்களுக்கு வாழ்கையில் எதனை எடுத்தாலும் பிரச்சினைகள் தான் என்றாலும், உடல் ரீதியாக தான் அதிக அளவில் பிரச்சினைகள் வருகின்றன. அப்படி வரும் பல உடல் சார்ந்த பிரச்சனையில் ஒரு சிலருக்கு மட்டுமே ஆரம்ப காலத்தில், ஆரம்ப நிலையில் அந்த பிரச்சினை ஆனது பொதுவாக தெரிய வருகிறது.

இல்லையெனில் நாம் தெரிந்து கொள்கிறோம் என்று கூட சொல்லலாம். ஆனால் மற்றபடி பெரும்பாலும், நமது உடலில் ஒரு பிரச்சனை வந்து அந்த பிரச்சனையின் மூலம் உடலில் பல பிரச்சனை வந்த பிறகு தான் நாம் அதை தெரிந்து கொள்கிறோம்.

இதனால், நமது உடலில் ஏதேனும் ஒரு பிரச்சினை ஏற்பட்டால் கூட உடனே நாம் அதை உடனடியாக கவனித்து, நாமே சரி செய்வதோ, அல்லது மருத்துவர் மூலம் சரிசெய்து கொள்வது அவசியம்.

நீங்கள் உணவுக்கு பின் மலம் கழிக்கும் பழக்கம் உடையவராக உள்ளீர்களா ?, உங்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு, உங்கள் குடும்பம், அல்லது நண்பருக்கு வயிறு உப்புசத்து அதிகம் உள்ளதா? இந்த பதிவு மூலம் வயிறு உப்புசத்து இருந்தால் ஏற்படும் நோய்கள் பற்றியும். இதனை தடுக்கும் வழிமுறைகளையும், சரி செய்யும் முறைகள் பற்றியும் பார்க்க போகிறோம்.

நீங்கள் உண்ட உணவு செரிமானம் நடக்கிறதா ?

நீங்கள் தினமும் காலை வேளையில், மதய வேளையில், இரவு வேளையில் என நாம் உணவுகளை ஒருவருக்கொருவர், அவரவர் விருப்பம் உள்ள நேரத்தில் உணவுகளை உண்டு விடுகிறோம்.

இந்த மூன்று வேளையில் உண்ணும் உணவு இல்லாமல், இடையில் எதாவது நொறுக்கு தீனி எனப்படும் உணவுகள் எடுத்து கொள்கிறோம். ஆனால் நாம் நமது ஒரு ஒரு முறை உண்ணும் உணவு நம் உடலில் முறையாக செரிமானம் நடந்து விட்டதா? என்று கேட்டால் எல்லருக்கும் சந்தேகம் வரலாம்.

நாம் உண்ட உணவு செரிமானம் ஆகிவிட்டதா? என்று யோசித்தால் உங்களுக்கு வாய் வழியாக ஏப்பமாகவும், அல்லது உங்கள் ஆசனவாய் வழியாகவோ, காற்று பிரிய வேண்டும். இப்படி நடந்தால் உங்களுக்கு செரிமானம் ஒழுங்கான முறையில் நடக்கிறது என்று அர்த்தம்.

இதனால் செரிமானம் ஒழுங்காக நடக்காமல் நாம் அடுத்த வேலை உணவு உண்டால், உடலில் நமக்கு உப்புசத்து அதிகம் ஏற்பட்டு வயிறு உப்புசம், செரிமானம் பிரச்சனை, நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனை யில் ஆரம்பித்து, மேலும் பல பிரச்சனை உடலில் வந்து சேரும். இதனால் செரிமானம் ஒழுங்காக நடக்கிறதா? என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க : விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil

செரிமானம் இரண்டு வகையில் வெளியேறும் :

(a) செரிமானம் ஆனது நாம் ஒரு வேளை உண்ட உணவு செரிமானம் நடந்து ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரத்தில் இதுபோல உங்களுக்கு ஏப்பமாகவோ, அல்லது ஆசனவாய் வழியாகவோ வெளியேறும்.

இப்படி வெளியேறும் போது வாய் வழியே வெளியேறும் போது ஒன்று எந்த வித வாசனையும் இல்லாமல் வெறும் ஏப்பமாக மட்டும் காற்று வெளியேறினால், செரிமானம் நல்ல முறையில் நடந்து விட்டது என்று அர்த்தம்.

(b) நாம் ஒரு வேளை உண்ட உணவு பின், செரிமானம் ஆகிவிட்டதா என்று தெரியாமல் நாம் அடுத்த வேளை உணவு எடுக்கும் போது, ஏப்பாமாக காற்று வெளியேறும் போது நாம் உண்ண கூடிய உணவின் வாசனையை வந்தால், செரிமானம் அப்போது நடக்கிறது என்று அர்த்தம். இதனால் செரிமானம் நடந்து விட்டதா என்று தெரிந்து அடுத்த வேளை உணவு எடுக்க கற்று கொள்ளுங்கள்.

ஆகமொத்தம், ஏதோ ஒரு வகையில் நமக்கு ஒவ்வொரு முறை உண்ணும் உணவு செரிமானம் நடந்து, மீதமுள்ள வாயு ஆனது வெளியேற வேண்டும்.

வயிறு உப்புசத்து இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள் :

(1) மாவுப்பொருட்கள் :

வயிறு உங்களுக்கு உப்புசத்து அதிகம் ஏற்பட்டு, வயிறு பகுதியில் வாயு அதிகம் பிரச்சினை கொடுக்கும் வகையில் உங்களுக்கு இருந்தால், செரிமானம் ஒழுங்காக நடக்காமல், ஏப்பமும் ஒழுங்காக நடக்காமல், மேலும் பிரச்சினை கொடுக்க கூடும்.

இதனால் நீங்கள் சில உணவு வகையை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் மேலும் பிரச்சினை கொடுக்க கூடும். இதனால் தவிர்க்க வேண்டிய உணவுகள் இடத்தில் முதலில் இருப்பது, மாவு பொருள் ஆகும்.

இங்க மாவு பொருள் என்ன என்றால், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா, போன்ற பொருள், முக்கியமாக நாம் தினமும் இட்லி, தோசை, சாப்பிட்டு பழகி இருப்போம். ஆனால் இந்த செரிமானம் பிரச்சினை இருந்தால், உப்புசம் பிரச்சினை இருந்தால், வாரம் ஒருமுறை மட்டும் கொஞ்சமாக இட்லி, தோசை போன்று எடுத்து கொள்ளலாம். தினமும் சாப்பிடுவது நல்லது அல்ல.

மேலும் படிக்க : Kidney Failure Symptoms In Tamil – சிறுநீரக பாதிப்புக்கான 10 அறிகுறிகள்

(2) Junk Foods / பதப்படுத்தும் உணவுகள் :

பதப்படுத்தும் உணவுகளை உட்கொள்ள தவிர்த்து கொள்ள வேண்டும். Burger, பீசா, போன்ற பொருள், மேலும் உள்ள அனைத்து பொருட்கள் உண்பதை தவிர்த்தல் வேண்டும். ஏண் என்றால் அதிக மாவு கலந்த பொருளாக இருக்கும். அதிக எண்ணெய் கலந்து செய்த உணவாக இருக்கும். மேலும் பிரட், பேக்கிங் என்று சொல்லக்கூடிய பேக்கரி யில் செய்யும் பொருள் போன்ற பொருளையும் தவிர்க்க வேண்டும்.

(3) பால் :

செரிமானம் ஒழுங்காக நடக்காமல், வயிறு உப்புசத்து இருந்தால், பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். உப்புசத்து பிரச்சினை வயிறு பகுதியில் இருந்தால், வயிறு உப்புசம் ஆகி, வாயு அதிகமாக உங்கள் வயிறு பகுதியில் இருக்கும். உங்கள் வயிற்றை பெரிதாக்கி காட்டும்.

இப்படி இருக்கும் போது, உங்கள் வயிறு பகுதியில் இருக்கும் வாயு வெளியேறுவது, மிகவும் வலியோடும், அல்லது கடினமாகவும் இருக்கலாம். இதனால், வயிறு உப்புசத்து பிரச்சினை இருந்தால் பால் சேர்ப்பது நிறுத்த வேண்டும். இல்லை என்றால், மேற்கொண்டு பால் உங்கள் வயிறு பகுதியில் உப்புசம் அதிகம் ஆக்கும்.

(4) உப்பு மற்றும் மசாலா பொருள் :

ஏற்கனவே வயிறு உப்புசம் பிரச்சினை இருந்தால், செரிமான மண்டலம் ஒழுங்கான முறையில் வேலை செய்ய முடியவில்லை என்று அர்த்தம். அப்படி இருக்க, நாம் மேற்கொண்டு உப்பு கலந்த அல்லது உப்பில் ஊறவைத்த பொருள், மசாலா அதிகம் கொண்ட பொருள்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் மேற்கொண்டு உப்புசம் ஆகி செரிமானம் பாதிக்கும்.

(5) juice / ஜுஸ் குடிப்பது :

பொதுவாக எதாவது ஒரு ஜுஸ் தினம் ஒரு வேளை குடித்து வரலாம். உடம்பிற்கு நல்லது இந்த ஜுஸ். ஆனால், வயிறு உப்புசம் இருப்பதால் மேற்கொண்டு நாம் எந்த ஜுஸ் குடிப்பது மூலமும் நமக்கு நமது வயிறு பகுதியில், உப்புசம் ஏற்பட்டு புளிசை வாடை என்று சொல்லக்கூடிய வாடை வெளியேறும். இது உங்கள் உடம்பை மேலும் சிரமம் ஏற்படுத்தும்.

(6) கிழங்கு வகைகள் :

உருளை கிழங்கு, போன்று உள்ள எந்த வித கிழங்கு வகைகள் தவிர்ப்பது நல்லது. உங்களுக்கே தெரியும் கிழங்கு வகைகள், கடலை வகைகள் மேற்கொண்டு வாயுவை உண்டாக்கும். இதனால் கிழங்கு வகைகள் தவிர்க்க வேண்டும். அப்போது தான் இருக்கும் வாயுவை வெளியேற்றி, வயிறு பகுதியில் சரி செய்து, வயிறு உப்புசத்து பிரச்சனையை சரி செய்ய முடியும்.

(7) குளிரூட்டப்பட்ட பொருள்கள் :

குளிர்ச்சியான பொருள்கள் எடுப்பது தவிர்க்க வேண்டும். ஏண் என்றால், குளிர்ச்சி உள்ள பொருளில், அதிகம் வாயு இருக்கும். இது வாயு வை உங்கள் வயிறு பகுதியில் அதிகம் உருவாக்கும். இதன் காரணமாக குளிரூட்டப்பட்ட பொருளை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க : How to save our life from Heart Attack in Tamil | மாரடைப்பின் போது நமது உயிரை காப்பாற்றுவது எப்படி ?

வயிறு உப்புசத்து இருந்தால் உண்ண வேண்டிய உணவுகள் மற்றும் முறைகள் :

(1) அரிசி பொருள் :

உப்புசத்து பிரச்சினை இருந்தால், சாப்பாடு சாப்பிடலாம். ஆனால் சாப்பாட்டை எல்லாரும் உண்ணும் முறையில் உண்ண கூடாது. நன்றாக உங்க வயிறு உப்புசத்து பிரச்சினை சரியாகும் வரையில், நீங்கள் சாப்பாட்டை நன்றாக பிசைந்து எடுத்து குழைவாக உண்ணலாம்.

இப்படி குழைவாக உண்ணும் போது, உங்களுக்கு உப்புசத்து பிரச்சினை இருந்து, செரிமானம் ஆகாமல் பாதிப்பு இருந்தாலும், நாம் குழைவாக எடுப்பதால் விரைவாக செரிமானம் ஆகிவிடும். இதனால் மேற்கொண்டு செரிமானம் ஆகாமல் இருக்க வாய்ப்பு குறைவு.

(2) சீரகம் : சீர் + அகம் :

நாம் முன்னோர்கள், இந்த மாதிரி பிரச்சினைகள் பெரும்பாலும் அனுபவித்தது இல்லை. இருந்தாலும் நமக்கு ஏற்படும் இந்த உப்புசம், செரிமானம் பிரச்சினை எல்லாவற்றையும் முன்பே தெரிந்து, நமக்காக கொடுத்து வைத்த ஒரு பொக்கிஷம் தான் இந்த சீரகம்.

இதனால் தான் நம் முன்னோர்கள் நமக்கு சீர் + அகம் என்று நமக்கு கூறினர். இதனால் வயிறு பிரச்சினை, செரிமானம் பிரச்சினை, வயிறு உப்புசத்து பிரச்சினை இருந்தால், தினமும் 1/2 ஸ்பூன் முதல் 1 ஸ்பூன் வரை ஒரு டம்ளர் சூடு தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். கொதிக்க வைத்து குடிக்கலாம்.

இப்படி கொதிக்க வைத்து சுடுநீரில் சீரகம் கலந்து குடித்து வரலாம். எந்த வித வாயு பிரச்சினை இருக்காது. உப்புசம் இல்லாமல், செரிமானம் முறையாக நடந்து,இதனால் தான் நமது மக்கள் ரசம் என்ற ஒரு பொருளை சமையலில் சேர்த்தனர். சீரகம் சேர்த்து செரிமானம் பாதுகாக்க செய்தனர். இதனால் சீரகம் தினமும் சேர்த்து வாருங்கள், நீங்கள் ஆரோக்கியமாக வாழ வகை செய்யும்.

தூக்கம் சரிவர இல்லையென்றால் செரிமானம் பாதிக்குமா ?

ஆம், கண்டிப்பாக இன்றைக்கு நாம் செரிமானம் ஆகாமல், வயிறு உப்புசத்து பிரச்சினை இருப்பவர்கள் அனைவரையும் பார்த்தோம் என்றால், 90 சதவீதம் மக்கள் சரிவர தூக்கம் இல்லாமல், தூங்காமல் இருபவர்கலுக்கு ஆகும். இரவில் முக்கியமாக தாமதமாக தூங்குவது, முக்கியமான பிரச்சினை ஆகும்.

இரவில் தினமும் தாமதமாக தூங்கும் போது, செரிமானம் ஒழுங்கான முறையில் நடக்காமல் நின்றுவிடுகிறது. இதனால் உடலுக்கு சென்று சேரும் சத்துக்கள் ஆனது சென்று சேராமல், உணவுகள் வயிறு பகுதியில் தங்கி விடுகிறது. இது வயிறு பகுதியில் அதிகமான வாயு பிரச்சினை ஏற்பட்டு, வயிறு பகுதியில் உப்புசத்து பிரச்சினை உண்டாக்குகிறது.

தினமும் தண்ணீர் :

தினமும் அதிக அளவில், சராசரியாக 3 லிட்டர் அளவாவது தண்ணீர் குடிக்க வேண்டும். இது மேலும் உங்கள் செரிமான மண்டலம் மேம்படுத்தும். வாயு பிரச்சினை, இல்லாமல், வயிறு உப்புசத்து இல்லாமல் பாதுகாக்கும்.

மேலும் படிக்க : Lungs Detox In Tamil | நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி ?

உப்புசம் இருந்தால் சோர்வு ஏற்படுமா ?

ஆம், உப்புசத்து பிரச்சினை இருந்தால், கண்டிப்பாக அவர்களுக்கு, தூக்கம் சரிவர இல்லாமல் இருபவர்களாக இருக்கும் என்று நாம் இப்பொது கூறினோம்.

இந்த உப்புசத்து பிரச்சினை இருந்தால், செரிமானம் செய்ய முடியாமல், செரிமான மண்டலம் இயங்கும் போது அது செரிமானம் செய்ய தேவையான சத்துக்களை உணவிடம் இருந்து எடுக்க முடியாமல், நம்மிடம் இருந்து எடுக்கும். இதனால் நமது உடலில் உள்ள சத்துக்கள் தேவை இல்லாமல் எடுக்க பட்டு நமக்கு சோர்வு நிலையை உண்டாக்கும்.

உணவுக்கு பின் மலம் கழிக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளதா ?

நமக்கு வயிறு பகுதியில், உப்புசத்து பிரச்சினை ஏற்பட்டு, வயிறு உப்புசம் ஆகி, வாயுக்கள் உடலில் இருந்து வெளியேற்றம் அடையாமல், தங்கி விடுவதால், காலப்போக்கில் நமக்கே தெரியாமல், வயிறு முதல் நெஞ்சு வரை புண்கள் ஏற்படுகின்றன.

பின்னர் நெஞ்சு எரிச்சல், புளிச்ச ஏப்பம், செரிமானம் தன்மை இல்லாமல் ஆகி, கடைசியாக நமக்கு உண்ட உணவு செரிமானம் ஆகாமல் ஏற்படும் நிலை ஏற்படும். பின்பு நாம் உணவு உண்ட உடனே மலம் கழிக்கும் பழக்கம் ஏற்படுகிறது. இதனால் நாமும் இது பெரிய அளவில் ஆபத்தான விஷயம் என்று தெரியாமல், உணராமல், உணவுக்கு பின் மலம் கழிக்கும் பழக்கம் தொடர்ந்து வருகிறோம்.

இந்த பதிவு மூலம், வயிறு உப்புசம் எதனால் ஏற்படுகிறது, எப்படி ஏற்படுகிறது, இதன் காரணமாக ஏற்படும் பாதிப்புக்கள், இதை தடுக்க மேற்கொள்ளும் உணவுகளும், முறைகள் பற்றியும். உண்ண தவிர்க்க கூடிய உணவுகள் பற்றியும். என அனைத்தையும் பார்த்துள்ளோம்.

இந்த முறைகளை படித்து, புரிந்து நீங்களும் உங்கள் வாழ்வில், இது போன்ற பிரச்சினைகள் இல்லாமல், ஆரோக்கியம் உடன் வாழ வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

மேலும் படிக்க : கார் இன்சூரன்ஸ் பாலிசி வகைகள் | Types of car insurance policy in Tamil

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *