விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil

Contents
 1. விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil :
 2. 1: விரைவாக வெளியேறுகிறது / Errection Problem :
  1. (a) தாம்பத்தியம் ஆரம்பிக்கும் முன்பே விந்து வெளியேறுவது பிரச்சனையா ?
  2. (b) உறவு ஆரம்பித்த 2 நிமிடத்தில் விந்து வெளியேறுவது சரியா ?
  3. (c) ஆரம்பித்த 5 நிமிடத்தில் விந்து வெளியேறுவது :
 3. 2 : அதிக நேரம் உறவு கொள்ள முடியவில்லையா ?
 4. 3: ஆண்களின் உறுப்பு நீளம் குறைவாக உள்ளதா ?
 5. 4 : உறுப்பினை எப்படி பெரிதாக்குவது ?
 6. பெண்ணை திருப்திப்படுத்த உறுப்பின் நீளம் என்ன ?
 7. 5 : விறைப்பு தன்மை குறைவாக உள்ளதா?
 8. 6 : பெரிதாக்க என்ன உணவு உண்ணலாம் ?
 9. 7 : சுயமான இன்பம் சரியா ? தவறா ?
 10. 8 : உற்பத்தி பெருக்குவது எப்படி?
 11. 9 : 50 வயது மேல் உறவு கொள்ளலாமா?
 12. 10 : என்ன மருந்துகள் எடுக்கலாம் :

விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil :

வணக்கம், இந்த பதிவு முற்றிலும் ஆண்களுக்காக இருக்க போகிறது. திருமணம் ஆன ஆண்களும், பெண்களும், இல்லை திருமணம் ஆகப் போகும் ஆண்கள் மற்றும் பெண்கள் கூட  இதை பார்த்து படித்து பயன் பெறலாம்.

ஏன் என்றால், Errection Problem என்பது ஏற்படும் பல பிரச்சனையில் முக்கியமானதாக இன்று பெரும் மன ரீதியாக பெரிய குழப்பங்களும், பெரிய மன உளைச்சல் ஆன ஒரு விஷயம் என்ன என்பதை இப்போது ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1) ஆண்கள் தாம்பத்தியம் ஈடுபடும் போது விந்து விரைவாக வெளியேறுகிறது.

2) அதிக நேரம் உறவில் ஈடுபட முடியவில்லை.

3) நீளம் குறைவாக உள்ளது.

4) உறுப்பை எப்படி பெரிதாக்குவது.

5) விறைப்பு தன்மை குறைவாக உள்ளது. அல்லது விறைப்பு தன்மை இல்லாமல் இருப்பது.

6) உறுப்பினை பெரிதாக்க என்ன உணவு உண்ணலாம்.

7) சுயமான இன்பம் சரியா ? இல்லை தவறா ?

8) உற்பத்தி பெருக்குவது எப்படி?

9) 50 வயது மேல் உறவு கொள்ளலாமா?

10) என்ன உணவுகள் அல்லது மருந்துகள் எடுக்கலாம்.

இப்படி, இன்றைய காலத்தில் அதிக பேராலும், குறிப்பாக 16 வயது முதல் தேடலில் இறங்கும் பலராலும் வயது 60 ஆனாலும் சந்தேகத்தில் குடும்பம் நடத்தும் பேர்கள் தான் 90 சதவீதம் ஆண்கள் அல்லது பெண்கள்.

இதனால், இந்த பதிவில் உங்களுக்கு பல விஷயங்களை பற்றி மேலே உள்ள 11 விஷயங்கள் பற்றியும், உண்மைகளும், தீர்வுகளும், பற்றி பல விஷயங்கள் பார்க்க போகிறோம். பார்த்து படித்து தெரிந்து கொண்டு தாம்பத்திய உறவில் எந்த ஒரு பயமும், குழப்பங்களும் இல்லாமல் வாழுங்கள்.

1: விரைவாக வெளியேறுகிறது / Errection Problem :

விந்து விரைவாக வெளியேறுகிறது. இது சரியா? இல்லை தவறா? என்று பலருக்கும் பெரிய மன நோயாக உள்ளது. விந்து என்பது நமது உடலில் எச்சில் போல சுரக்க கூடிய ஒரு முக்கியமான விஷயம் ஆகும். விந்து விரைவாக வெளியேறுவதை, Errection Problem யை பொதுவாக 3 விதமாக பிரிக்கலாம்.

(a) உறவு ஆரம்பிக்கும் முன்பே விந்து வெளியேறுகிறது.

(b) உடலுறவு ஆரம்பித்த 1 முதல் 2 நிமிடங்களில் விந்து வெளியேறுவது.

(c) ஆரம்பித்த 5 முதல் 6 நிமிடங்களில் விந்து வெளியேறிவிடும்.

இதில் a,b,c என்பதை என்ன என்ன என்பதை இப்போது முதலில் பார்ப்போம்.

மேலும் படிக்க : கார் இன்சூரன்ஸ் பாலிசி வகைகள் | Types of car insurance policy in Tamil

(a) தாம்பத்தியம் ஆரம்பிக்கும் முன்பே விந்து வெளியேறுவது பிரச்சனையா ?

சில நேரங்களில், பிரச்சினை இல்லை, இந்த முறைகள் தொடர்ந்து வந்தால், அது பிரச்சினை ஆகும். என்ன என்றால், நாம் முதல் முறையாக நமது மனைவியிடம் உடலுறவு கொள்ள நினைத்து இருக்கும் வேளையில், மனைவியை பார்த்து கொண்டிருக்கும் வேளையில் உணர்ச்சிவசப்பட்டு சில நேரம் விந்து ஆனது வெளியேறிவிடும்.

இதுபோல், திருமணம் ஆன பின்பு, 1 முதல் இரண்டு முறை கூட நடக்கலாம். இதனால் பயம் கொள்ள தேவை இல்லை. ஏன் என்றால், நாம் உடலுறவு பற்றிய ஆசையில், அல்லது எதிர்பார்ப்பில் இருந்து வந்த நிலையில் திருமணம் செய்த பின்னர் சற்று அதிக அளவில் எதிர்பார்ப்பு மற்றும் சிறிய பயம் காரணமாக உடலுறவு கொள்ளும் முன்பே விந்து வெளியேறிவிடும்.

ஆனால், 1 முதல் 2 முறை உங்கள் மனைவியை நீங்கள் புரியவைத்து விடலாம். முதலில் இப்படி இருக்கும் என்று. அடுத்த முறை நீங்கள் தயாராகி விட வேண்டும். இதற்கு முக்கிய காரணம் நீங்கள் உங்கள் மனதை பெரிதாக உணர்சிவசம் ஆகாமல் தயாராவது ஆகும். உங்கள் மனைவி தான் என்று சாதாரண நிலையில் உறவு கொள்ளும் மனநிலை கொண்டு வர வேண்டும்.

(b) உறவு ஆரம்பித்த 2 நிமிடத்தில் விந்து வெளியேறுவது சரியா ?

இதுவும், முதலில் சொன்னது போல உங்கள் எண்ணங்களை, சாதாரனமாக வைத்து கொள்ள வேண்டும். உடலுறவின் சந்தோசம் இருக்கலாம். அந்த உணர்ச்சி வசப்படுத்தல் கட்டுபடுத்த வேண்டும். எந்த வித ஆபாச வீடியோக்கள் வருவதை போல ஈடுபட நினைப்பது தவறு.

(c) ஆரம்பித்த 5 நிமிடத்தில் விந்து வெளியேறுவது :

உங்களுக்கு இப்போது ஒரு முக்கியமான விஷயம் கூறுகிறேன். ஒரு சாதாரணமான அதிகமான ஆரோக்கியம் கொண்ட ஒவ்வொரு ஆணும் அதிகபட்சமான நேரம் என்று உடலுறவு கொள்ளும் நேரம் என்பது என்ன என்றால், 5 நிமிடம் முதல் 6 நிமிடம் மட்டுமே ஆகும்.

இந்த 5 முதல் 6 நிமிடம் என்பதே உண்மையான ஒரு விஷயம். சிலர் பெருமைக்கு சொல்லும் பொய்களாலும், நாம் சில ஆபாச வீடியோக்கள் பார்த்து மனதளவில் நாம் நினைக்கும் ஒரு முக்கியமான விஷயம் 30 நிமிடம், 1 மணி நேரம் என்ற எல்லாம் உடலுறவு கொள்ள முடியும் என்பதாகும்.

இதனால், உங்கள் மன நிலையை தான் மாற்ற வேண்டும். இப்போது பலருக்கும் பெரு மூச்சு வரலாம். ஏன் என்றால் 5 முதல் 6 நிமிடம் உடலுறவு கொண்டாலும் அதை பொறுமையாக பதட்டம் இல்லாமல் ஈடுபடுங்கள். மேலும் உடலுறவு என்பது ஆணுறுப்பு மற்றும் பெண் உறுப்பு மட்டும் இணைவது என்பது தவறான ஒரு எண்ணம்.

உடம்பில், ஒருவர் ஒருவர் புரிந்து, ரசித்து, ஒவ்வொரு தொடுதல், ஒவ்வொரு புரிதலும், அன்பும், அரவணைப்பும், ஆகும். இதன் மூலம் கொண்டு நீங்கள் உடலுறவு கொண்டு வந்தால், யாரும் பயம் கொள்ள தேவை இல்லை.

Read Also : விந்துவை அடக்கலாமா ? அடிக்கடி வெளியேற்றலாமா ?

2 : அதிக நேரம் உறவு கொள்ள முடியவில்லையா ?

இதற்கு உங்களுக்கு மேலே சொன்னது போல, அதிக நேர உடலுறவு கொள்ளும் நேரம் என்பது சாதாரணமாக ஆரோக்கியமான நிலையில் உள்ள ஒரு ஆண் மகனால், 5 முதல் 6 நிமிடங்கள் ஆகும். இதனால் நீங்கள் 5 நிமிடம் என்பதை மனதில் நினைத்து கொண்டே உறவு வைக்கவும் கூடாது.

நீங்கள் எதையும் யோசிக்காமல் உறவு வைத்தால், சில நேரம் 6 முதல் 10 நிமிடம் கூட உறவு வைக்க வாய்ப்பு இருக்கலாம். ஆனால் 5 நிமிடம் உறவில் விந்து வெளியேறுவது என்பது சாதாரணமான ஆரோக்கியமான விஷயம் ஆகும். இதனால் கவலை தேவை இல்லை. மேல் விளையாட்டுகளில் அதிக நேரம் ஒதுக்குவது நல்லது.

3: ஆண்களின் உறுப்பு நீளம் குறைவாக உள்ளதா ?

ஆண்களின் உறுப்பு என்பது, ஆரோக்கியமான ஒரு நல்ல ஆண்களுக்கு இருக்கும் உறுப்பின் நீளம் என்பது, குறைந்தபட்ச நீளம் என்பது 4 இன்ச முதல் 5.5 இன்ச என்ற வீதம் ஆகும்.

இந்த 4 இன்ச் முதல் 5.5 இன்ச என்பது நமது நாட்டில் உள்ள மக்களை பொறுத்தவரை இதுவே சாதாரணமாக எல்லோருக்கும் இருக்கும் ஆண்குறியின் நீளம் ஆகும். இது புரியாமல் நமது உறுப்பின் அளவு சிறிதாக உள்ளது என்று எண்ணி, பலரும் மன அழுத்தம் அடைகின்றனர்.

சிலர் உடல் அமைப்பை பொருத்து, ஆண்குறி சற்று அளவுகளில் முன்னும் பின்னும் இருக்கும். நல்ல விறைப்பு தன்மையுடன் வைத்து கொண்டால் போதுமானது.

4 : உறுப்பினை எப்படி பெரிதாக்குவது ?

ஆண் உறுப்பு என்பது இயற்கையாக ஒரு வளர்ச்சிக்கு பின்னர், நாம் பெரிதாக்குவது, என்பது பெரும்பாலும் வேலைக்கு ஆகாது. மேலும் இது தேவை இல்லாத ஒன்றும் கூட. ஏன் என்றால் நாம் சொன்னபடி 4 முதல் 5 இன்ச வீதம் ஒரு ஆண்குறி இருந்தால் போதுமானது. அப்படி பார்த்தால் எல்லாருக்கும் இந்த அளவுகளில் ஆண்குறி இருக்கும்.

ஒரு சிலருக்கு மட்டும் சாதாரண நிலையில் 2 முதல் 3 இன்ச என்றும் விறைப்பு தன்மையுடன் இருக்கும் போது 3 முதல் 4 இன்ச வீதம் கூட சிலருக்கு மட்டும் இருக்கலாம். ஆனால் இது குறைபாடு இல்லை. ஒருவர் ஒருவர் உடல் வாகு பொறுத்து மாறுபடும். இதனால் பயம் கொள்ள தேவை இல்லை.

Read Also : 5 Best Foods For Motility and Sperm Count in Tamil | விந்தனுவுக்கு 5 உணவுகள்

பெண்ணை திருப்திப்படுத்த உறுப்பின் நீளம் என்ன ?

ஓர் பெண்ணை, உங்கள் மனைவியை திருப்திப்படுத்த உங்கள் மனைவியின் பெண் உறுப்பு பகுதியில் வைத்து உடலுறவு கொள்ள, 3 முதல் 3.5 இன்ச அளவு ஒரு ஆண்குறி இருந்தால் அதுவே போதுமானதாகும். உட்சகட்டம் அடைய செய்து. திருப்திப்படுத்த முடியும்.

5 : விறைப்பு தன்மை குறைவாக உள்ளதா?

ஆண்களின் விறைப்பு தன்மை என்பது முதலில், நம் மனம் மற்றும் எண்ணம் சார்ந்த ஒன்று ஆகும். நாம் எந்த அளவு ஈடுபாடு கொண்டு இருக்கிறோமோ அந்த அளவுக்கு உங்களுக்கு விறைப்பு தன்மை இருக்கும்.

மேலும் நாம் சிறு வயதில் செய்த சில தவறான செயலகளால், கைப்பழக்கம் போன்ற விஷயங்களால், நமது ஆண் உறுப்பு பகுதியில் நரம்பு மண்டலம் சற்று பாதிக்க பட்டு இருக்கலாம். இதனால் கூட சில நேரம் விறைப்பு தன்மை குறைவாக இருப்பது, அல்லது இல்லாமல் இருப்பதும் ஆகும்.

இப்படி இருந்தால், விறைப்பு தன்மை இல்லாமல் இருந்தால், மருத்துவர் அணுகுவது நல்லது. அல்லது சரியான உணவு முறைகள் பின்பற்றி, மேலும் கைப்பழக்கம், மற்றும் ஆபாச வீடியோக்கள் பார்ப்பது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். மேலும் இதுபோல செய்து பார்த்தாலே பாதி பிரச்சினை சரியாகும்.

மேற்கொண்டு விறைப்பு தன்மை இல்லாமல் இருந்தால், மருத்துவர் அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

6 : பெரிதாக்க என்ன உணவு உண்ணலாம் ?

அதிக கொழுப்பு உணவுகளை சற்று தவிர்த்து, உடற்பயிற்சிகள் போன்றவை மேற்கொள்வது நல்லது. மேலும் மாதுளை பழம், முருங்கைக்காய், முருங்கை விதை, முருங்கை பூ, போன்றவற்றை உணவில் சேர்த்து வரலாம். மேலும் அதிக பழங்கள், காய்கறிகள், போன்றவை உண்ணலாம்.

பேரிச்சைப்பழம், தேன், போன்ற பொருள்கள், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, போன்ற உணவுகள் உண்டு வந்தால் போதும். உங்களுக்கு குறைந்த விறைப்பு தன்மை, இருந்தால் விறைப்பு தன்மை முழுமை பெற்றால் கூட உங்களுக்கு ஆண்குறி பெரிதாக தெரியலாம்.

7 : சுயமான இன்பம் சரியா ? தவறா ?

சுயமாண இன்பம் என்பது, சிறு வயதில் நம்மை அறியாத வயதில் செய்திருப்பது சரி அல்லது தவறு என்று நாம் சொல்ல முடியாது. ஆனால் பொதுவாக சுய இன்பம் செய்வது தவறுகளை விளைவிக்கும்.

இதனால், உறுப்பின் நரம்பு மண்டலம் பாதிக்க கூடும். மேலும் உங்கள் மனநிலை, உடல்நிலை இதனால் பாதிக்கக்கூடும். இதனால் சுய இன்பம் செய்ய வேண்டாம்.

Read Also : மார்பு பகுதியில் வலி வந்தால் மாரடைப்புக்கான அறிகுறியா ? What is Heart Attack Symptoms in Tamil

8 : உற்பத்தி பெருக்குவது எப்படி?

நாம் சொன்னது போலவே, அதிக கொழுப்பு உணவுகளை சற்று தவிர்த்து, உடற்பயிற்சிகள் போன்றவை மேற்கொள்வது நல்லது. மேலும் மாதுளை பழம், முருங்கைக்காய், முருங்கை விதை, முருங்கை பூ, போன்றவற்றை உணவில் சேர்த்து வரலாம். மேலும் அதிக பழங்கள், காய்கறிகள், போன்றவை உண்ணலாம். பேரிச்சைப்பழம், போன்ற பொருள்கள், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு போன்ற பருப்பு வகை உணவுகள் உண்டு வந்தால் போதும். உங்களுக்கு விந்து எண்ணிக்கை அதிகரிக்கும். Errection Problem உம் சரியாகும்.

9 : 50 வயது மேல் உறவு கொள்ளலாமா?

கண்டிப்பாக, வயதுக்கும் உடலுறவுக்கும் சம்மந்தம் இல்லை. நாம் நாட்டில் தவறாக புரிதல் தான் காரணம். மேலும் வயது ஆக ஆக உடலுறவு வைத்தால், மனதை நல்ல நிலையில் வைத்து கொள்ள முடியும். மேலும் உங்கள் இதயம் நல்ல முறையில் இருக்கும்.

மேலும் உங்கள் உடலில் பல நல்ல விஷயங்கள் இருக்கும். இதனால் கண்டிப்பாக உடலுறவு கொள்ளலாம்.

10 : என்ன மருந்துகள் எடுக்கலாம் :

மருந்துகள் பொறுத்தவரை தவிர்ப்பது நல்லது. இதை தாண்டி தேவை பட்டால், மருத்துவர் அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

மேலும் இந்த தகவல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்றும் புரிந்து இருக்கும் என்றும், நினைக்கிறோம். இதை பயன்படுத்தி கொள்ளுங்கள். கண்டிப்பாக அனைவருக்கும் இந்த பதிவை அனுப்புங்கள். பயன் பெறுங்கள்.

Read Also : உணவுக்கு பின் மலம் களிப்பீர்களா ? உப்புசத்தால் ஏற்படும் நோய்கள் என்ன ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *