சுயஇன்பம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா? Does Masturbation cause infertility

சுயஇன்பம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா?

வணக்கம், இந்த பதிவு ஆண்மகனாக பிறந்த, அனைத்து ஆண்மகனுக்கும் பெரிதும் உதவும். ஏண் என்றால் இன்று உள்ள ஆண்களுக்கு அந்த காலம் போல உணவு பழக்கம், இல்லை. மேலும் சிறு வயதில் ஆரம்பித்து ஒருசிலர் குறிப்பிட்ட வயது வரை, சிலர் திருமணம் ஆகும் வரை கூட சுய இன்பம் செய்வது வழக்கமாக கொண்டு உள்ளனர்.

சிறு வயது முதலே சுயஇன்பம் செய்யும் ஆண்கள் 100 க்கு 90 பேர் மேல் இருக்கின்றனர். இதனால் பலருக்கும் சில வயது முதல் அவரது ஆணுறுப்பு சுய இன்பம் செய்ததால் சிறியதாக ஆகிவிட்டது. நரம்புகள் பலம் இல்லாமல் இருக்கிறதோ, சத்துக்கள் உடலில் குறைந்து விட்டது. மலட்டு தன்மை ஏற்பட்டு உள்ளதா? என்று

இப்படி பல பல சந்தேகமும், கவலையும் உள்ளது. இதனால், இந்த பதிவு மூலம், உங்களுக்கு சுய இன்பம் என்றால் என்ன? சுய இன்பம் செய்வதால் என்ன நம் உடலில் நடக்கும்? சத்துக்கள் குறையுமா? மலட்டுத்தன்மை ஏற்படுமா? என்று எல்லாம் பார்க்க போகிறோம். பார்த்து பயனடையுங்கள்.

சுய இன்பம் என்றால் என்ன ?

சுய இன்பம் என்பது என்ன என்றால், சுய இன்பம் என்பது, நாம் நினைப்பது போல இல்லை, பொதுவாக சுய இன்பம் என்பது நாம் நினைப்பது தவறு என்று நினைக்கிறோம். அது அப்படி இல்லை, சுய இன்பம் என்பது நாம் செய்கிறோம். பெரும்பாலும் எல்லா இடங்களிலும் எல்லா உயிரினமும் அதற்கு ஏற்ற வயது வந்தால், அதன் துணையுடன் உடலுறவு என்பதை கொள்ளும்.

நாம் மனிதர்கள் என்பதால் நமக்கு திருமண வயது என்பது, சில பல கடமைகள், என்று இப்படி பல விஷயங்கள் உள்ளது. நாம் திருமணம் ஆன பின்பு துணையுடன் உடலுறவு கொள்ளும் முறை உள்ளது. ஆனால் ஆண்கள் என்பவர்களும் பெண்களை போல வயதுக்கு வருவது என்பது உள்ளது.

இதனால், ஒவ்வொரு ஆணும் வயது வந்தவுடன், உடலுறவு கொள்ள துணை இல்லாததால், உணர்ச்சி ஏற்பட்டு தனக்கு தானே ஆணுறுப்பின் மூலம் சுய இன்பம் செய்து, சிறிது இன்பம் காணும் முறை தான் சுய இன்பம் எனப்படும்.

மேலும் படிக்க : கார் இன்சூரன்ஸ் பாலிசி வகைகள் | Types of car insurance policy in Tamil

சுய இன்பம் செய்தால் அசதி ஏற்படுமா?

இன்று, பல ஆண்கள் அதிகம் மனஉளைச்சல் ஏற்படுவதில் ஒரு முக்கியமான நேரம் என்பது சுய இன்பம் செய்து முடித்து விந்து வெளியேறிய பின்னர், Tired என்று அழைக்கபடும் அசதி ஏற்படும் போது, பெரிய மன அழுத்தம் ஏற்படுவதாகும்.

இந்த மன அழுத்தம் என்பது சுய இன்பம் செய்து விந்து வெளியேறிய பின்னர், நமக்கு அதிக சோர்வு ஏற்படுகிறது. இதனால் நமது உடலில் சத்துக்கள் வெளியேறி சத்துக்கள் இல்லாமல் அதிக அளவில் அசதி ஏற்படுகிறது என்று மன உளைச்சல் அடைகின்றனர்.

சுய இன்பம் காணும் போது மட்டும் அசதி ஏற்படும் என்று அனைவரும் நினைக்கிறோம். இது முற்றிலும் உண்மை இல்லை. தவறான விஷயம். சுய இன்பம் சரி அல்லது திருமணம் பின்னர் உடலுறவு செய்யும் போதும் சரி, அசதி என்பது சற்று ஏற்படும்.

நாம் பொதுவாக ஒன்றை நினைத்து பாருங்கள், நாம் ஏதாவது ஒரு வேளை செய்தால்,நமக்கு சோர்வு ஆகும். இல்லை ஏதாவது உடற்பயிற்சி, அல்லது விளையாட்டில் ஈடுபட்டாலும் நமக்கு உடல் அசதியாகும்.

ஏன் உங்கள் மனைவியுடன் உடல் உறவு கொண்டாலும் அசதி ஏற்படுகிறது. இதனால் அசதி என்பது உடல் உழைப்பால் ஏற்படுவது. இதனால் நீங்கள் சத்துக்கள் இழந்துவிட்டோம் என்று எண்ணி பயம் கொள்ள வேண்டாம்.

மேலும் படிக்க : Kidney Failure Symptoms In Tamil – சிறுநீரக பாதிப்புக்கான 10 அறிகுறிகள்

விதைப்பை என்றால் என்ன ?

விதைப்பை என்பது ஒவ்வொரு ஆணுக்கும், அவரது ஆணுறுப்பு பகுதிக்கு கீழே விந்து பை என்ற ஒரு இடம் இருக்கும். இந்த இடத்தில் தான் விந்துக்கள் ஒன்றுபட்டு உயிர்களாக விந்துவில் இருக்கும். விதைப்பை என்பது இந்த விந்து பையில் இரண்டு விதையாக இருக்கும்.

இந்த விதைப்பையில் தான், உயிர்களானது உருவாகும். உயிர்கள் உருவாக்கும் இந்த விதைப்பையில் இருந்து உயிர்கள் உருவாகி, பின்னர் இந்த உயிர்கள் ஆனது, விந்து நாளம் என்று சிறிய நாளங்கள் இருக்கும். இந்த விந்து நாளம் என்பது விதைப்பை மற்றும் விந்து பையுடன் உயிர்களை சேர்க்கும் வண்ணம் இயற்கையாக இருக்கும்.

இப்போது விதைப்பையில் உருவான உயிர்கள் ஆனது, விந்து நாளம் வழியாக விந்துப்பையில் வந்து சேரும். விதைப்பை என்பது உயிர்களை உருவாக்கும் வேலையை செய்கிறது. இது விதைப்பை ஆகும்.

விந்துப்பை என்றால் என்ன ?

விந்துப்பை என்பது விந்துப்பையில் தான் விந்து என்னும் நீரானது உருவாகிறது. இங்கே ஒரு சுரப்பி மூலம், விந்து என்னும் நீரானது உருவாகி வெறும் விந்து நீராக இருக்கும். மற்றும் விந்து நீரை சேமித்து வைக்கும்.

இப்போது விந்து பையில் விதைப்பையில் இருந்து உருவான உயிர்கள் ஆனது, விந்து நாளம் வழியாக விந்துப்பையில் வந்து சேருகின்றன. இப்போது விந்து நீரும், விந்துக்கு தேவையான உயிர்களும் சேருகின்றன. இங்கே உயிர் உள்ள விந்துக்கள் சேகரிக்க பட்டு விந்துவாக உள்ளது.

இரவில் விந்து வெளியேறுவதால் பிரச்சனையா ?

இரவில், நமது விந்து வெளியேறுவது கண்டு, பலரும் இதற்கும் பயம் கொள்வதுண்டு. நாம் முன்பு பார்த்து போல, நமது உடலில் விந்துவாணது உயிர் உள்ள விந்துவாக உருவாகுவது என்பது நமது நாக்கில் எச்சில் சுரப்பது போலதான். அதாவது நமக்கு வாழ்நாள் வரை எச்சில் எப்படி சுரந்து கொண்டு உள்ளதோ, அதே போல விந்துவும் சுரந்து கொண்டுதான் இருக்கும்.

சுரக்கும் விந்து ஆனது ஒரு அளவுக்கு நாம் உண்ணும் உணவில் இருந்து எடுக்கப்படும் சத்துக்கள் மூலம் மேலும் மேம்படும். மேலும் விந்து ஆனது விந்து பையில் சேகரிக்க முடிந்த அளவு சேகரிக்கும். அதற்கு மேல் சுரக்கும் விந்து ஆனது தானாக நமது உடலில், சில வகை உணர்ச்சியை தானாக தூண்டி விட்டு, தானாக இரவு நேரத்தில் வெளியேறும்.

மேலும், இரவில் இரத்த ஓட்டம் ஆணுறுப்பு பகுதியில், அதிகமாக செல்லும். இதனால் இரவு நேரத்தில், விந்து ஆனது வெளியேறும். இதனால் பயம் கொள்ள வேண்டாம். இது இயற்கையான முறையில் ஆரோக்கியமான முறையில் வெளியேறும் விஷயமாகும்.

மேலும் படிக்க : மார்பு பகுதியில் வலி வந்தால் மாரடைப்புக்கான அறிகுறியா ? What is Heart Attack Symptoms in Tamil

சுய இன்பத்தால் மலட்டுத்தன்மை ?

சுய இன்பம் செய்தால், ஆண்மை குறைவு ஏற்படுகிறது. நமக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது என்று எண்ணுவது தவறு. ஏண் என்றால் சுய இன்பம் என்பது சாதாரணமான, ஒவ்வோரு ஆணுக்கும் வரக்கூடிய ஒன்று தான். இதனால் சுய இன்பமே தவறு என்பது உண்மை இல்லை.

ஆனால், சுய இன்பம் செய்வது என்பதும் ஒரு அளவுக்கு தான் இருக்க வேண்டும். அங்கே தான் பலரும் தவறு செய்கின்றனர். சுய இன்பம் செய்வதற்கு யாரும் அடிமை ஆகமட்டும் கூடாது. எதுவுமே அளவுக்கு மீறினால் அமர்தமும் நஞ்சு என்று அனைவரும் சொல்வது போல சுய இன்பம் காண்பது என்பது மிகவும் அவசியமான ஒரு நேரத்தில் இருக்க வேண்டிய ஒன்று.

இந்த சுய இன்பம் காண்பதற்கு என்று நாம் அடிமை ஆகிரோமோ, அப்போது தான் நமது உடலில் உண்மையில் சில பிரச்சினைகள் உண்டாகிறது. சுய இன்பம் அதிகம், அடிக்கடி செய்வதால் சிலருக்கு அவரது ஆணுறுப்பு பகுதிக்கு செல்லும் நரம்புகள் மிகவும் மெலிதாக இருப்பதால், பாதிக்க கூடும்.

இதனால், ஆணுறுப்பு பகுதியில் நரம்புகள் பாதிப்பு இருந்தால், சற்று நமது உடலில் ஏதோ ஒன்று பெரிய மன அழுத்தம் ஏற்பட்டு முக பெரிய அளவில்  பிரச்சினைகள் என்று எண்ணி, கவலை கொள்கின்றனர். இது தேவை இல்லை, உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

மேலும் படிக்க : Health benefits of Shallots in Tamil | சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்கள்

சுய இன்பம் செய்யலாமா ?

சுய இன்பம் செய்வது தவிர்த்து, உரிய நேரத்தில் நமக்கு நல்ல உணவுகள், தூக்கம் நல்ல முறையில் எடுத்து வந்தால் தானாக சரியாக கூட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக சுய இன்பம் செய்தால், மலட்டுத்தன்மை ஏற்படுவது என்பது உண்மை இல்லை.

மேலும், அதை நாம் எந்த அளவில் செய்து வந்தோம் என்பதை பொருத்தும் இது அமையும். இதனால் முடிந்த அளவு சுய இன்பம் செய்யாமல் இருப்பது நல்லது. மீறி உங்களுக்கு சுய இன்பம் செய்வது இருந்தால், மாதம் ஒரு முறை செய்து கொள்ளலாம். மேலும் திருமணம் செய்து கொண்டவர்கள் சுய இன்பம் செய்யாமல் இருபது சரியாக இருக்கும்.

ஆண்கள் செய்ய கூடாதவை :

a) தினசரி அல்லது அடிக்கடி சுய இன்பம் செய்வது தவறு.

b) இறுக்கமான உடை, மற்றும் உள்ளாடை அணிவதை தவிர்க்க வேண்டும்.

c) துணைவி கூட இல்லாமல், வேறு யாரிடமும் உறவு வைப்பது கூடாது.

d) உறவு கொள்ளும் படங்கள் பார்பது கூடாது.

மேலும் படிக்க : Best 5 Drinks That Help You To Sleep Better | படுத்தவுடன் தூங்க என்ன செய்வது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *