How to lose weight in 7 Days in Tamil | GM Diet in Tamil

How to lose weight in 7 Days in Tamil | GM Diet in Tamil :

Weight lose என்னும் உடற் எடையை குறைக்க வேண்டும், என்று அனைவரும் படாதப்பாடு பட்டு வருகின்றனர். நாம் உடல் எடையை எந்த அளவுக்கு அதிகப்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதே அளவுக்கு சற்று ஒரு படி மேலே உடற் எடையை குறைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

இந்த உடற் எடையை குறைக்க வேண்டும் என்று பலர், ஜிம்மிற்கு சென்று வருகின்றனர். பலர் நடப்பது, ஓடுவது, போன்ற விஷயங்கள் செய்கின்றனர். இதில் எதுவும் முடியாத சிலர், குறிப்பாக திருமணம் ஆன பெண்கள். உடற் எடையை குறைக்க படாதப்பாடு பட்டு வருகின்றனர்.

இதனால், இந்த பதிவு மூலம், வெறும் 7 நாட்களில், 3 kg முதல் 4 kg வரை உடற் எடையை குறைக்க என்ன உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும், என்று பார்க்க போகிறோம். முதல் நாள் முதல் ஏழாம் நாள் வரையில் என்ன சாப்பிடலாம், என்று பார்க்க போகிறோம்.

இந்த உணவு எடுக்கும் முறையின் பெயர், GM Diet என்று அழைப்பார்கள். General Diet என்றும் அழைப்பார்கள். இந்த முறையில் நாம் ஏழு நாட்கள் உணவு முறை கடைப்பிடித்தால், 3 முதல் 4 கிலோ வரை எளிமையாக குறைத்து விடலாம். பார்த்து பயன் பெறுங்கள்.

First Day / முதல் நாள் :

நாம் முதல் நாள் என்பதில் இருந்து மிகுந்த கவனத்துடன் இந்த உணவு முறைகளை கையாள வேண்டும். சில உடற் சம்மந்த கோளாறுகள் இருந்தால், இதை செய்யாமல் இருப்பது நல்லது.

மேலும் படிக்க : சுயஇன்பம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா? Does Masturbation cause infertility

காலை 7 மணிக்கு | Ginder Tea / இஞ்சி டீ :

காலையில் நாம் அதிகமான, மக்கள் டீ, காபி, என எதையாவது குடித்து பழக்கம் ஆகி, உடலை வீணாக்கி வைத்துள்ளனர். நாம் இதனால், இந்த இஞ்சி டீ மூலம் பல நன்மைகள் பெற முடியும். உடலில் பல மாற்றங்கள் நிகழும்.

இந்த இஞ்சி டீ, தயாரிக்க சிறிய அளவில் இஞ்சியை எடுத்து கொள்ளுங்கள். மேலும் இந்த இஞ்சியை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இப்படி கொதிக்க வைப்பதால், இஞ்சியில் உள்ள சத்துக்கள் அனைத்தும் இந்த கொதிக்கும் நீரில் சேர்ந்துவிடும்.

மேலும் இதனை, கொதித்த பின்னர், இறக்கி வைத்து, சற்று 1 நிமிடம் கழித்து, அப்படியே குடிக்கலாம். தேவைப்பட்டால் அறைப்பகுதி எலுமிச்சம் பழம் பிழிந்து விடலாம். இப்போது நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் இதை குடியுங்கள்.

காலை 9.30 மணிக்கு :

காலை 9.30 மணி அளவில், இரண்டு பழங்கள், மட்டும் எடுத்து கொள்ளலாம். ஒரு மாதுளை பழம் எடுத்து கொள்ளலாம். மற்றும் ஒரு சிறிய ஆப்பிள், அல்லது மூன்று நெல்லிக்காய் எடுத்து உண்ணுங்கள். இதை நீங்கள் காலை உணவாக எடுத்து கொள்ள போகிறீர்கள். பின்பு 15 நிமிடம் கழித்து 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

11.00 மணிக்கு :

காலையில், 11 மணி அளவில், நீங்கள் எடுத்து கொள்ள வேண்டியது என்ன என்றால், ஒரு ஆரஞ்சி பழம் எடுத்து கொள்ளுங்கள். மேலும் இரண்டு சிறிய அளவில் உள்ள அதாவது உங்கள் உள்ளங்கை அளவில், இரண்டு கொய்யாப்பழம், மற்றும் ஒரு ஆரஞ்சு பழம் எடுத்து உண்ணுங்கள். இதன் பிறகும் 15 – 20 நிமிடம் கழித்து 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மேலும் படிக்க : கார் இன்சூரன்ஸ் பாலிசி வகைகள் | Types of car insurance policy in Tamil

தண்ணீர் குடிக்க வேண்டும் :

இதே போல நீங்கள் உண்ண பின்னர், 30 நிமிடத்திற்குள் அரை லிடடர் தண்ணீர் குடியுங்கள். ஒவ்வொரு உணவு பின்னரும், இதே போல தண்ணீர் குடியுங்கள். மொத்தமாக ஒரு நாளில் நீங்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.

மதியம் 01:00 மணி :

முதல் நாள் மதிய உணவு என்ன என்றால், தர்பூசணி பழம் 200 கிராம் அளவில் வருமாறு எடுத்து கொள்ளவும். மேலும் 200 கிராம் அளவில் பப்பாளி பழம் எடுத்து கொள்ளவும். இதனை மதியத்திற்கு சாப்பிடலாம். மேலும் இது அதிக நீர் சத்து கொண்ட பழம் ஆகும்.

Evening 4:00 மணி அளவில் :

ஒரு டம்ளர் கிரீன் டீ தயாரித்து குடியுங்கள். இது நம்மை அளிக்க கூடியது. இது குடித்து விட்டு, ஒரு ஆரஞ்சு பழம், அல்லது ஒரு ஆப்பிள் எடுத்து சாப்பிடலாம்.

6:00 மணி நேரத்தில் :

சாய்ந்திரம் 6.00 மணிக்கு, ஒரு கொய்யாப்பழம், அல்லது இரண்டு கொய்யாப்பழம் எடுத்து கொள்ளலாம். உங்கள் வயிறு பசி எடுக்காமல் இருக்கும் விதமாகவும் இது அமையும்.

இரவு 9:00 மணிக்கு :

இரவு நேரத்தில், நீங்கள் ஒரு கலவையாக எடுத்து கொள்ளலாம். ஒரு கைப்பிடி அளவில், மாதுளைப்ப பழம், பப்பாளி பழம், தர்பூசணி மூன்றையும் சேர்த்து எடுத்து சாப்பிடலாம். இதன் மூலம் மூன்று சுவையுடன் சாப்பிடும் போது, நல்ல ஒரு சத்து கொடுப்பது போலவும் இருக்கும்.

மேலும் படிக்க : Exercise to Protect your Eyes From Phone in Tamil | ஃபோன் பார்ப்பதால் கண்களை பாதுகாக்கும் சில உடற்பயிற்சிகள்

Second Day / இரண்டாவது நாள் :

7:00 மணிக்கு :

இஞ்சி டீ, முதல் நாள் செய்தது போல, சுட வைத்து தண்ணீரில், சுட வைத்து குடியுங்கள்.

9:00 மணி காலை :

இரண்டு அல்லது மூன்று சிறிய உருளை கிழங்கு, எடுத்து அதை வேகவைத்து உண்ணுங்கள். இது கொஞ்சம் கார்போஹைட்ரேட் சத்துக்கள் கொஞ்சம் கொடுக்கும்.

11:40 மணி நேரத்தில் :

ஒரு சிறிய வெள்ளரிக்காய், மற்றும் ஒன்று அல்லது இரண்டு கேரட் எடுத்து உண்ணுங்கள்.

02:00 மணிக்கு :

கால் கைப்பிடி அளவு பச்சை பட்டாணி, ஒரு கேரட், ஒரு கைப்பிடி அளவு முட்டைகோஸ், மற்றும் வெங்காயம் கால் கை அளவு, எடுத்து ஒரு வாணலியில் போட்டு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவைத்து, பின்னர் இறக்கி சூப் ஆக சாப்பிடுங்கள். தேவைபட்டால் சிறிது மட்டும் உப்பு சேர்க்கலாம்.

சாயந்திரம் 4:00 மணி :

ஒரு டம்ளர் எடுத்து அதில், கிரீன் டீ செய்து, குடியுங்கள்.

Evening 6:00 மணிக்கு :

கேரட் ஒன்று, மற்றும் வெள்ளரிக்காய் ஒன்று எடுத்து நறுக்கி சாப்பிடுங்கள்.

இரவு நேரம் ;

இரண்டாம் நாள் இரவு உணவிற்கு, நீங்கள் மேலே சொன்ன சூப் செய்து இரவு சாப்பிடலாம். இந்த காய்கறிகள் வைத்து செய்த இந்த சூப் உடலை குறைக்க விரும்புவோருக்கு நல்லது.

Third Day / மூன்றாம் நாள் :

மூன்றாம் நாள் காலை, ஒரு டம்பரில் கிரீன் டீ, அல்லது இஞ்சி டீ தயாரித்து குடியுங்கள். மற்றும் காலை உணவாக ஒரு ஆப்பிள், மற்றும் ஒரு மாதுளை அல்லது ஒரு கை அளவு பப்பாளி பழம் சாப்பிடலாம்.

3 ஆம் நாள் 11 மணி அளவில், நீங்கள் அதே போல, கேரட், மற்றும் வெள்ளரிக்காய் சாப்பிடலாம். மேலும் மதிய உணவாக 1:40 மணி நேரத்தில் நீங்கள் நாம் இரண்டாம் நாள் சொன்னது போல, அதே சூப் செய்து குடியுங்கள்.

இதேபோல, 4 மணி அளவில்,ஒரு மாதுளை அல்லது இரண்டு சிறிய கொய்யாப்பழம் சாப்பிடுங்கள். மற்றும் 6:00 மணிக்கு ஒரு டம்ளர் சூடு தண்ணீர் அல்லது கிரீம் டீ குடியுங்கள். மேலும் இரவு உணவிற்கு ஒரு ஆப்பிள், ஒரு மாதுளை, மற்றும் ஒரு கைப்பிடி அளவு பப்பாளி, மற்றும் அரை கைப்பிடி அளவு வெள்ளரிக்காய் சாப்பிட்டு தண்ணீர் குடித்து தூங்குங்கள்.

மேலும் படிக்க : Kidney Failure Symptoms In Tamil – சிறுநீரக பாதிப்புக்கான 10 அறிகுறிகள்

Fourth Day / நான்காம் நாள் :

நான்காம் நாள், உங்களுக்கு எழிதில் புரியும், சாப்பிடவும் எழிது. காலை, மதியம், இரவு மூண்டு வேலையும் 2 வாழைப்பழம் ஒரு டம்ளர் கொழுப்பு குறைவான பால் எடுத்து கொள்ளுங்கள். இதை நேரத்திற்கு இரண்டு வாழைப்பழம் ஒரு டம்ளர் பால் குடித்தால் சரியாகிவிடும்.

இது இல்லாமல், காலை மற்றும் சாயந்திரம் நேரத்தில் ஒரு டம்ளர் கிரீன் டீ குடிக்கலாம்.இப்போது நீங்கள் நான்கு நாட்கள் வரை எளிமையாக உடல் எடையை குறைக்க தெரிந்து இருப்பீர்கள்.

Fifth Day / ஐந்தாம் நாள் :

ஐந்தாம் நாளில், காலை ஒரு டம்ளர் தண்ணீர் சூடாக குடியுங்கள், மேலும் காலை உணவு தக்காளி, மற்றும் வெள்ளரிக்காய் நறுக்கி சாப்பிடுங்கள். மேலும் காலை உணவிற்கு தக்காளி,பீட்ரூட், பூண்டு சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, சூப் எடுத்து குடியுங்கள்.

மதிய உணவிற்கு, தக்காளி வெங்காயம், பூண்டு, சேர்த்து சிறிது பணீர் சேர்த்து சாப்பிடலாம். மேலும் evening நேரத்தில், ஒரு டம்ளர் கிரீன் டீ சேர்த்து குடியுங்கள். இரவில் நாம் சொன்னது போல், த்க்காளி சூப் செய்து குடியுங்கள்.

Sixth Day / ஆறாம் நாள் :

ஆறாம் நாள் காலையில், ஒரு டம்ளர் கிரீன் டீ, காலை உணவாக பட்டாணி, முட்டைகோஸ், கேரட், போன்ற காய்கறிகள் சேர்த்து செய்து உப்பு, மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து சாப்பிடுங்கள்.

மதிய வேலை 11.30 போல, நீங்கள் வெல்லைகாய், மற்றும் கேரட் சேர்த்து சாப்பிடுங்கள். மேலும் மதிய உணவாக 2 மணிக்கு நாம் ஐந்தாம் நாளில் சொன்னது போல, பனீர் சேர்த்து தக்காளி சேர்த்து உண்ணும் முறையில் உண்ண வேண்டும்.

Evening நேரத்தில்,4 மணிக்கு நாம் ஒரு வெள்ளரிக்காய், மற்றும் ஒரு கேரட், சாப்பிடுங்கள். மேலும் 6.00 மணிக்கு ஒரு டம்ளர் கிரீன் டீ குடியுங்கள். மேலும் இரவில், முட்டைகோஸ், கேரட், பச்சை பட்டாணி, பச்சை மிளகாயை ஒன்று சேர்த்து சூப் செய்து இரவு நேரத்தில் உணவாக எடுத்து சாப்பிடுங்கள்.

மேலும் படிக்க : 5 Best Foods For Motility and Sperm Count in Tamil | விந்தனுவுக்கு 5 உணவுகள்

Seventh Day / ஏலாம் நாள் :

ஏழாம் நாள் காலை உணவாக நாம் காலையில் ஒரு கிரீன் டீ குடியுங்கள், மேலும் காலை உணவாக 200 கிராம் தர்பூசணி, மற்றும் ஒரு கைப்பிடி அளவு பப்பாளி பழம் சாப்பிடலாம்.

மதிய உணவாக lunch இற்கு நீங்கள், பொரிக்காத மீன், அல்லது வெள்ளை சாதம் கூடவே காய்கறிகள், அல்லது பிரவுன் ரைஸ் என்று உள்ள அரிசியை சமைத்து சாப்பிடுங்கள்.

சாய்ந்திறம் ஒரு கிரீன் டீ, 4 மணிக்கு குடியுங்கள், 6 ஒரு மாதுளை பழம் அல்லது ஒரு கொய்யாபழம் சாப்பிடுங்கள். மேலும் இரவுக்கு Dinner- க்கு ஒரு 200 கிராம் தர்பூசணி, மற்றும் ஒரு கை அளவு பப்பாளி எடுத்துக்கொள்ளுங்கள்.

இரவிர்க்கு ஏழாவது நாளில், தேவைபட்டால் ஒரு கிரீன் டீ யும் குடியுங்கள். இப்போது உங்கள் 7 நாட்கள் உடலை குறைக்க உதவும் GM Diet எனப்படும். உணவு பழக்கம் எடுத்து வந்தோம். இதை செய்து பாருங்கள். மகிழ்ச்சி அடைவீர்கள்.மேலும் இதன் படி செய்து, பயனடையுங்கள்.

Notes :

இதை செய்யக்கூடாத நபர்கள் யார்  என்பதை பாருங்கள்.

a) கர்ப்பிணி பெண்கள் செய்ய கூடாது.

b) உடல் பாதிப்பு இருந்தால் செய்ய கூடாது.

c) சோர்வு போன்ற சில பாதிப்பு இருந்தால் செய்ய வேண்டாம்.

d) சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் பாதிப்பு இருந்தால் செய்ய வேண்டாம்.

மொத்தத்தில், உடல் பாதிப்பு இல்லாமல், நல்ல படியாக இருந்து, உடல் எடையை குறைக்க விரும்பும் அனைவரும் இந்த Diet முறையை கடைப்பிடிக்கலாம். மேலும் தேவைக்கு ஏற்ப இதை கடைபிடியுங்கள். பயன் பெறுங்கள்.நன்றி

மேலும் படிக்க : Top 10 Calorie Foods to Gain Weight in Tamil

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *