Kidney Failure Symptoms In Tamil – சிறுநீரக பாதிப்புக்கான 10 அறிகுறிகள்

Contents
  1. Kidney Failure Symptoms In Tamil – சிறுநீரக பாதிப்புக்கான 10 அறிகுறிகள் :
  2. சிறுநீரக செயல் இழப்பு யாருக்கு வரலாம் :
  3. சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அறிகுறிகள் :
  4. 1 : உடம்பில் குளிர்ச்சி :
  5. 2 : இரத்த சோகை பிரச்சினை :
  6. 3 : உடலில் அதிகப்படியான சோர்வு நிலை :
  7. 4 : மூச்சி தினருதல் :
  8. 5 : சருமத்தில் அரிப்பு ஏற்படுதல் :
  9. 6 : கை மற்றும் கால்களில் வீக்கம் :
  10. 7 : தலை சுற்றுதல், மயக்கம், மற்றும் உடல் பலகீனம் :
  11. 8 : முகம் அதிகம் வீக்கம் ஏற்படுதல் :
  12. 9 : வாய் துர்நாற்றம் :
  13. 10 : முதுகு வலி மற்றும் சிறுநீரில் பிரச்சினை :
  14. சிறுநீரக செயல் இழப்பு தடுக்கும் உணவுகள் :
    1. (A) மஞ்சள் :
    2. (B) ஓமவல்லி இலை :
    3. (C) துளசி இலை :
    4. (D) வெங்காயம் :
    5. (E) பூசணிக்காய் :
    6. (F) பச்சை பட்டாணி :
    7. (G) வாழைத்தண்டு :
    8. (H) கேரட் :
    9. (I) முள்ளங்கி :
    10. (J) முட்டைகோஸ் :
    11. (K) பூண்டு :
    12. சிறுநீரக செயல் இழப்பு தடுக்கும் உணவுகளில் பலவகைகள் :

Kidney Failure Symptoms In Tamil – சிறுநீரக பாதிப்புக்கான 10 அறிகுறிகள் :

Kidney Failure எனப்படும் சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீரக செயல் இழப்பு என்பது இன்றளவும் இன்றைய காலகட்டத்தில், அதிக அளவில் அதிக மக்களுக்கு ஏற்படுகின்றது. சிறுநீரகம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று.

சிறுநீரகம் தான் நம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும், கழிவுகளை வெளியேற்றவும் பயன்படுகின்றது. இந்த கெட்ட களிவை வெளியேற்றும் பணி மட்டும் நம் உடம்பில் நடக்காமல் போனால் எண்ணற்ற நோய்கள் வந்து உயிரை பறிக்கும் அளவுக்கு கெடுதல் விளைவிக்க கூடியது ஆகும்.

இந்த Kidney Failure எனப்படும் சிறுநீரக செயல் இழப்பு ஆனது,உடனே ஏற்படுவது இல்லை, சிறிது காலங்கள் பாதிப்பாக ஆகி, பின்னர் நமக்கு தெரியாமல் இருந்து, சிறுநீரக செயல் இழப்பு ஆகின்றது. எனவே Kidney Failure எனப்படும் சிறுநீரக பாதிப்புகான ஆரம்பகால 10 அறிகுறிகள் பற்றியும், சிறுநீரக செயல் இழப்பை தடுக்கும் காய்கறி மற்றும் பழங்களை பற்றியும் பார்க்கலாம் வாங்க.

சிறுநீரக செயல் இழப்பு யாருக்கு வரலாம் :

a.) சிறுநீரக தொற்று இருப்பவர்களுக்கு ஏற்படலாம்.

b.) அடிக்கடி வலி நிவாரணி மாத்திரை உட்கொண்டு வரும் நபர்களுக்கு வரலாம்.

c.) இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு வரலாம்.

d.) வயதானவர்களுக்கு சிறுநீரக செயல் இழப்பு வரலாம்.

e.) தேவை இல்லா மருந்துகளை உட்கொண்டு வந்தால் வரலாம்.

f.) கிட்னி யில் கல் பிரச்சினை அடிக்கடி இருப்பவர்களுக்கு வரலாம்.

g.) சர்க்கரை நோய் அதிகம் இருப்பவர்களுக்கு வரலாம்.

h.) அதிக உடல் சூடு அதிகம் அடிக்கடி பிடிப்பவர்களுக்ககு வரலாம்.

பொதுவாக சிறுநீரகம் நமது உடலில் 3 விதமான ஹார்மோன்களை சுரக்கின்றன, அவை ரெனின், கால்சிட்ரியால், போன்றவை ஆகும். இந்த சிறுநீரகம் நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு சில நேரம் மாரடைப்பு, உடம்பு பக்ககவாதம் போன்றவை கூட வர வாய்ப்பு உண்டு. எனவே கவனமாக பரிசோதித்து கொள்ளவும்.

மேலும் படிக்க : Top 10 Healthy Foods For Heart in Tamil | Prevent Heart Attack in Tamil

சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அறிகுறிகள் :

1 : உடம்பில் குளிர்ச்சி :

நமது உடலில் அதிகம் அவ்வப்போது குளிர்ச்சியை உண்டாக்கும். நாம் அதிகம் அவ்வப்போது குளிர்ச்சியை உணர்வோம். நமக்கு தெரிந்தவர், தெரியாதவர் என அனைவரும் உடல் சாதாரண நிலையில் சாதாரண உடல் வெப்ப நிலையில் இருக்கும் போது, நமக்கு மட்டும் உடல் அதிக குளிர்ச்சியை தந்தால், நமது உடம்பு குளிர்ச்சியாக இருந்தால், சிறுநீரக பாதிப்பு அறிகுறியாக இருக்கலாம்.

2 : இரத்த சோகை பிரச்சினை :

பொதுவாக சிறுநீரகம் பாதிப்பு ஏற்படும் வகையில் இருக்கும் போது, இரத்த சோகை நோய் ஏற்படலாம். இந்த இரத்த சோகை நோய் இருபவர்ககு எந்நேரமும் அவரது உடம்பில் குளிர்ச்சியை எந்நேரமும் உணர முடியும். இதனால் இரத்த சோகை நோய் இருப்பவர்கள், சிறுநீரக பாதிப்பு அறிகுறியாக உள்ளதா ? என்பதை மருத்துவரிடம் சென்று ஆலோசித்து கொள்ள வேண்டும்.

3 : உடலில் அதிகப்படியான சோர்வு நிலை :

நமது உடலில் பொதுவாக சுறுசுறுப்பாக சோர்வு இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், நமது இரத்த சிவப்பு அணுக்கள் உருவாக்க கூடிய வேலையை இந்த சிறுநீரில் உள்ள சுரப்பியில் ஒரு சுரப்பி ஆனது ஏற்படுத்தும். நமது உடலில் எல்லா இடங்களிலும் இரத்த சிவப்பு அணுக்கள் சென்று சேர வேண்டும்.

நமது உடலில் அனைத்து பகுதிக்கும் ஆக்சிஜெனை எடுத்து செல்லும் வேலையை இந்த இரத்த சிவப்பு அணுக்கள் செய்கின்றது. நமது சிறுநீரகத்தில் பாதிப்பு அல்லது ஏதேனும் சிக்கல் இருந்தால், நம் உடலில் ஆக்சிஜெனை எடுத்து செல்லும் இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை குறைவாக ஆகி, இதனால் நமது உடலில் ஆக்சிஜனை எடுத்து செல்வது குறைந்து நமது உடம்பு எளிதாக சோர்வை சந்திக்கிறது.

4 : மூச்சி தினருதல் :

மூச்சி தினருதல் என்பது இன்றைய காலகட்டத்தில் மிக பெரிய பிரச்சனையாக உள்ளது. ஒல்லியான தேகம் உடையவர், குண்டாக தேகம் உடையவர், சிறியவர், பெரியவர் என பாராமல், அனைவருக்கும் இந்த மூச்சி தினருவது என்பது நடக்கிறது.

நாம் சிறிய அளவில் நடக்கும் போதோ, அல்லது நாம் ஏதேனும் வேலை செய்தாலோ, உடனடியாக நமது உடம்பு அதை ஏற்று கொள்ள முடியாதவாறு, நமக்கு மூச்சி திணறல் ஏற்பட்டால், அது சிறுநீரக செயலிழப்பு அறிகுறியாக இருக்கலாம். இந்த சிறுநீர் செயல் இழப்பு ஏற்படுவது போல இருந்தால், நமக்கு மூச்சி தினருவது, இரு வகையில் நடக்கலாம்.

(a) நமது சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை குறைய செய்து, இதன் மூலம் நமது உடலில் ஆக்சிஜன் எடுத்து செல்வது குறைய செய்வது மூலம். நமது உடல் சோர்வு ஆகி, இதன் மூலம் நமது உடலில் மூச்சி திணறல் ஏற்படும்.

(b) நுரையீரலில் அதிகப்படியான சளி தேங்கி இருப்பதால், இதன் மூலம் சிறிய வேலை செய்தாலே, அல்லது நடக்கும் பொது விரைவில், மூச்சு திணறல் ஏற்படும்.

மேலும் படிக்க : விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil

5 : சருமத்தில் அரிப்பு ஏற்படுதல் :

சருமத்தில் அரிப்பு ஏற்படுதல் என்பது, சிறுநீரக செயல் இழப்பு அறிகுறியாக இருக்கலாம். பொதுவாக நமது உடலில் சிறுநீரகம் ஒழுங்கான முறையில் வேலை செய்து வரும் நிலையில், நமது உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள நச்சு கழிவுகளை சரியாக பிரித்து எடுத்து சரியான முறையில் வெளியேற்றும்.

ஆனால் இந்த சிறுநீரகம் ஒழுங்கான முறையில் வேலை செய்யாமல் இருந்தால், இரத்தத்தில் உள்ள நச்சு கழிவுகளை ஒழுங்கான முறையில் பிரித்து எடுக்கும் வேலையை செய்யாது. இதனால் இரத்தத்தில் ஏற்பட்ட நச்சுக்கள் அங்கேயே தேங்கி சரும பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் சருமத்தில் அரிப்பு ஏற்படுதல், போன்ற பிரச்சினைகள் வரக்கூடும். எனவே சரும பிரச்சினை ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகவும்.

6 : கை மற்றும் கால்களில் வீக்கம் :

நமது உடலில் உள்ள கழிவுகள் நீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேறும். ஆனால் இந்த சிறுநீரக பாதிப்பு இருந்தால்,நமது உடலில் உள்ள கெட்ட நீர் ஆனது வெளியேற முடியாமல் ஆகி, உடலில் நீர் ஆனது கெட்ட நீர் ஆனது தேங்கும்.

இதனால் நீர் அதிகமாகி, நமது கை, கால்கள், மற்றும் உடம்பில் கூட வீக்கம் ஏற்பட்டு பெரிதாகும். இதனால் இப்படி கை, கால்களில், வீக்கம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

மேலும் படிக்க : 5 Best Foods For Motility and Sperm Count in Tamil | விந்தனுவுக்கு 5 உணவுகள்

7 : தலை சுற்றுதல், மயக்கம், மற்றும் உடல் பலகீனம் :

நமது உடலில் அனைத்து பகுதிக்கும், ஆக்சிஜன் எடுத்து செல்லும் விசயத்திற்கு இரத்த சிவப்பணுக்கள் உதவுகிறது. இந்த இரத்த சிவப்பு அணுக்கள் மூளைக்கு சரியாக செல்லாமல், இருப்பதால், நமது உடலில் அடிக்கடி தலை சுற்றுதல், மயக்கம் ஏற்படுதல், மற்றும் போக போக உடல் பலகீனம் ஏற்படும்.

இதனால், இந்த தலை சுற்றுதல், மயக்கம் ஏற்படுதல், மற்றும் உடல் அதிக பலகீனம் ஏற்படுதல், போன்றவை இருப்பவர்கள், உடனே மருத்துவரை சந்தித்து சிறிது ஆலோசனை பெறுவது நல்லது.

8 : முகம் அதிகம் வீக்கம் ஏற்படுதல் :

முன்பு பார்த்து போல, நமது உடலில் உள்ள கழிவுகள் நீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேறும். ஆனால் இந்த சிறுநீரக பாதிப்பு இருந்தால்,நமது உடலில் உள்ள கெட்ட நீர் ஆனது வெளியேற முடியாமல் ஆகி, உடலில் நீர் ஆனது கெட்ட நீர் ஆனது தேங்கும்.

இதனால் நீர் அதிகமாகி, நமது முகத்தில் வீக்கம் ஏற்பட்டு பெரிதாகும். இதனால் இப்படி நமது முகத்தில் திடீரென வீக்கம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இது சிறுநீரக பாதிப்பாக இருக்கலாம்.

9 : வாய் துர்நாற்றம் :

நாம் அன்று முதல் இன்று வரை, வாயை சுத்தமாக வைத்து கொள்ள தினமும் இரண்டு வேளை பல் துலக்கி வருகிறோம். காலை மற்றும் மாலை என இருவேளையும் பல் துலக்கி வந்தால் வாயும், உடம்பும், ஆரோக்கியமாக இருக்கும் என்பதால், இதை செய்து வருகிறோம்.

ஆனால் நாம் இரண்டு வேலை இல்லை, மூன்று வேளை பற்களை துலக்கினால் கூட நமது வாயில் இருந்து துர்நாற்றம் வந்தால், அது சிறுநீரக பாதிப்பு அறிகுறியாக இருக்கலாம். ஏனென்றால், நமது உடலில் இரத்தத்தில் உள்ள நச்சு கழிவுகளை சரியாக வெளியேற்றாமல் இருந்தால், நமது உடலில் கெட்ட கழிவுகள் தேங்கும்.

இதனால், நமது வாயில் எத்தனை முறை பல் துலகினாலும், நமது வாயில் இருந்து துர்நாற்றம் வீசும். இது சிறுநீரக செயல் இழப்பு பாதிப்புகான அறிகுறியாக இருக்கலாம். இப்படி ஏற்பட்டால், மருத்துவர் சந்தித்து, உங்கள் சந்தேகம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

மேலும் படிக்க : Lungs Detox In Tamil | நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி ?

10 : முதுகு வலி மற்றும் சிறுநீரில் பிரச்சினை :

நமக்கு முதுகில் அதாவது, அடி முதுகில் வலி வந்தால், அது சிறுநீரக கல் ஏற்படும் பாதிப்பாக இருக்கலாம். மேலும் இந்த வலி அடிவயிறு பகுதியில், இருபக்கமும் வலி ஏற்படும். இப்படி ஏற்பட்டால் அது சிறுநீரக பாதிப்பாக இருக்கலாம்.

மேலும் இந்த சிறுநீர் கழிக்கும் போது, முன்பு சிறுநீர் கழித்தது போல இல்லாமல், அடர் மஞ்சள் நிறத்தில், சிறுநீர் கழித்தல், மற்றும் சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் ஏற்படுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவை கூட சிறுநீரக பாதிப்பு அறிகுறியாக இருக்கலாம்.அல்லது செயல் இழப்பு அறிகுறியாக இருக்கலாம். இப்படி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

இதுவரை 10 சிறுநீரக செயல் இழப்பு அறிகுறிகள் பற்றி தெரிந்து கொண்டோம். இப்போது சிறுநீரக செயல் இழப்பு தடுக்கும் உணவுகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

சிறுநீரக செயல் இழப்பு தடுக்கும் உணவுகள் :

(A) மஞ்சள் :

மஞ்சள் ஆனது இரத்தத்தில் உள்ள கெட்ட கழிவை அழித்து வெளியேற்றி, சிறுநீரகம் செயல் இழப்பை தடுக்கும். மற்றும் செயல் இழக்கும் சிறுநீரகத்தை சரி செய்து ஒழுங்கான முறையில் இயங்க உதவிகரமாக இருக்கும்.

(B) ஓமவல்லி இலை :

ஓமம் அல்லது ஓமவல்லி இலயினை கொஞ்சம் எடுத்து அதை சிறு நீரில் கழுவி, பின்பு இந்த இலையை சிறு நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறியவுடன், குடித்து வரலாம். இதனால் சிறுநீரகம் ஒழுங்கான முறையில் இயங்கும்.

(C) துளசி இலை :

துளசி சாறு கொஞ்சம் எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரக செயல் இழப்பை தடுக்கலாம்.

(D) வெங்காயம் :

வெங்காயம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நமது உடலில் நன்மை உண்டாகும். மேலும் சிறுநீரக செயல் இழப்பை தடுக்கும் முக்கிய உணவு வெங்காயம் ஆகும்.

மேலும் படிக்க : Exercise to Protect your Eyes From Phone in Tamil | ஃபோன் பார்ப்பதால் கண்களை பாதுகாக்கும் சில உடற்பயிற்சிகள்

(E) பூசணிக்காய் :

பூசணிக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நமது உடலில் நன்மை உண்டாகும். மேலும் சிறுநீரக செயல் இழப்பை தடுக்கும்.

(F) பச்சை பட்டாணி :

பச்சை பட்டாணி சாப்பிட்டு வந்தால்,  சிறுநீரக செயல் இழப்பை தடுக்கும்.

(G) வாழைத்தண்டு :

வாழைத்தண்டு முடிந்தபோது சாப்பிட்டு வந்தால், நமது உடலில் நன்மை உண்டாகும். சிறுநீரக செயல் இழப்பை தடுக்கும்.

(H) கேரட் :

கேரட் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நமது உடலில் நன்மை உண்டாகும். உடலில் பல விசயத்திற்கு இந்த கேரட் நல்லது. மேலும் சிறுநீரக செயல் இழப்பை தடுக்கும்.

(I) முள்ளங்கி :

முள்ளங்கி கிடைக்கும் போது சாப்பிட்டு வந்தால், சிறுநீரக செயல் இழப்பை தடுக்கும்

(J) முட்டைகோஸ் :

முட்டைகோஸ் சாப்பிட்டு வந்தால், சிறுநீரக செயல் இழப்பை தடுக்கும்.

(K) பூண்டு :

பூண்டு சாப்பிட்டு வந்தால், சிறுநீரக செயல் இழப்பை தடுக்கும்.

சிறுநீரக செயல் இழப்பு தடுக்கும் உணவுகளில் பலவகைகள் :

(A) ஆப்பிள்.

(B) பேரிக்காய்.

(C) அன்னாசிப்பழம்.

(D) எலுமிச்சைபழம்.

(E) பிளம்ஸ்.

(F) அத்திப்பழம்.

(G) தர்பூசணி.

(H) திராட்சை.

(I) மாதுளைப்பழம்

இப்படி உங்களுக்கு கிடைக்கும் உணவுகளை அதிகம் எடுத்து வாருங்கள். கண்டிப்பாக உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக இருக்கும் வகையில், பார்த்து கொள்ளுங்கள். பயன் பெறுங்கள். மற்றவருக்கும் இதை பகிர்ந்து பயன்பெற செய்யுங்கள்.மீண்டும் அடுத்த பதிவில் பார்ப்போம். நன்றிகள் !

மேலும் படிக்க : Health benefits of Shallots in Tamil | சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்கள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *