- Brain Detox in Tamil | மூளை கழிவுகளை சுத்தப்படுத்துவது எப்படி ?
- Symptoms / மூளை செயல்பாடு சரியில்லாத போது ஏற்படும் மறைமுக அறிகுறிகள் :
- (1) Lethargic / மந்தமான நிலை :
- (2) Feeling Tired / சோர்வு நிலை :
- (3) Sleeplessness / தூக்கமின்மை :
- (4) Headache / அடிக்கடி தலைவலி :
- (5) Experiencing Absent-minded / நியாமகமரதி :
- மூளையின் செயல்பாடு குறைய காரணம் :
- மூளையை கட்டுபாட்டில் வைப்பது எப்படி ?
Brain Detox in Tamil | மூளை கழிவுகளை சுத்தப்படுத்துவது எப்படி ?
வணக்கம், பொதுவாக Detox என்ற ஒரு வார்த்தை, அனைவரும் இன்றளவில் கேள்விபட்டு வரலாம். Detox இல் பல விசயம் இருக்கிறது. அதில் ஒரு விசயம் தான் Brain Detox. அதாவது நமது மூளையில் உள்ள கழிவுகளை சுத்தப்படுத்தி, அதன் மூலம் நமது மூளையை புதுமையாக்கி, மூளையில் செயல்பாட்டை வேகப்படுத்த முடியும்.
அதாவது நமது உடலில் உள்ள பல உறுப்புகளை, நாம் ஒரு சில விசயம் மூலம், சுத்தப்படுத்த முடியும். ஆனால் நமக்கு மூளை மட்டும் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் நமக்கு இருக்கும் மூளையின் மூலம் சிந்தித்து கூட பார்ப்பது இல்லை.
மற்ற உறுப்புகளை காட்டிலும், மூளை என்பது ஒரு சில நிமிடம் இயங்காமல் நின்றுவிட்டால், நமது உடலில் உயிர் இருக்காது. இதுமட்டுமல்லாமல் நாம் நமது மூளையை கண்டுகொள்வது இல்லை, இதனால் மூளை மந்த நிலைக்கு சென்றுவிடுகிறது.
கூடவே இதனால் மூளைக்கு அதிக பளு கொடுப்பது போல ஆகி, நமது மூளையின் பாதிப்பு மூலம் நமக்கு பாதிப்பு ஆகின்றது. இதனால் மூளையை சுத்தம் செய்தல் என்பது முக்கியம் ஆகும். இதனால் இந்த பதிவின் மூலம் Brain Detox என்ற மூளையில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்வது பற்றி படிப்படியாக பார்க்கலாம் வாங்க ! பார்த்து படித்து பயன் பெறுங்கள்.
Symptoms / மூளை செயல்பாடு சரியில்லாத போது ஏற்படும் மறைமுக அறிகுறிகள் :
(1) Lethargic.
(2) Feeling Tired.
(3) Sleeplessness.
(4) Headache.
(5) Experiencing Absent-minded.
இப்படி இன்னும் பல விசயங்கள் உள்ளடக்கி உள்ளது. அதுவும் நமக்கே தெரியாமல் நம்மிடம் இந்த அறிகுறிகள் உள்ளது. நாம் தான் கண்டுகொள்வது இல்லை. இப்போது இந்த 5 விசயங்கள் பற்றி என்ன என்ன என்று முதலில் பார்ப்போம்.
(1) Lethargic / மந்தமான நிலை :
Lethargic – என்பது மந்தமான நிலை ஆகும். அதாவது நாம் தினமும் என்னதான், எத்தனை மணிநேரம் தூங்கினால் கூட, நாம் தினமும் எழுந்த நேரம் முதல், அந்த நாள் முடியும் வரை ஏதோ ஒன்று போல இருக்கும். அதிக அளவில் மந்த நிலையில் இருப்போம். சுறுசுறுப்புடன் இருக்க முடியாது.
(2) Feeling Tired / சோர்வு நிலை :
தினமும் அதிக சோர்வு நிலையுடன் இருப்பது ஆகும். எந்த ஒரு வேலையை செய்ய முடியாது. அதிக சோர்வு நிலையுடன் இருப்போம்.
(3) Sleeplessness / தூக்கமின்மை :
நாம் தினமும் என்னதான் வேலை செய்தாலும், நமக்கு உரிய நேரத்தில் தூக்கம் வராது. அல்லது நாம் அதிகம் தூங்க மாட்டோம். தூக்கமின்மையும் நம்முடன் இருந்து கொண்டே இருக்கும்.
(4) Headache / அடிக்கடி தலைவலி :
நமக்கு அதிக தலைவலி அடிக்கடி வரக்கூடும். நாம் நல்ல இருக்குரமாரி இருப்போம். ஆனால் திடீரென அடிக்கடி தலைவலி வரக்கூடும்.
மேலும் படிக்க : உணவுக்கு பின் மலம் களிப்பீர்களா ? உப்புசத்தால் ஏற்படும் நோய்கள் என்ன ?
(5) Experiencing Absent-minded / நியாமகமரதி :
நமக்கு அடிக்கடி நியாமகமரதி ஏற்படுவது ஆகும். நாம் ஒரு விசயத்தை யோசித்து, இதை செய்ய வேண்டும். அதை செய்ய வேண்டும் என்று, சில நேரம் முடிவு செய்து வைத்தாலும் அதை நாம் மறக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம்.
இதற்கு காரணம், நமது மூளை சரிவர செயல்படாமல் இருப்பதை, நமக்கு காட்டும் அறிகுறியாக கூட எடுத்து கொள்ளலாம். காரணம் தேடினால் எண்ணற்ற விஷயங்கள் உங்களுக்கே தெரியவரும். முதல் விசயம் இன்றைய காலகட்டம். இந்த காலத்தில் நாம், Mobile, Tv, Laptop, Computer, என நம்மை நாம் அடகுவைத்து விட்டோம்.
உலக வளர்ச்சியோடு சேர்ந்து நாமும் வளர்ச்சி அடைய வேண்டும்.நமது உடலும் வளர்ச்சி அடைய வேண்டும். உலகம் வளர்ச்சி அடைந்து நாம் மட்டும் எந்த வகையில் கூட வளர்ச்சி இல்லாமல் அப்படியே இருந்தால், அது தான் தவறு. நாம் வளர்ச்சியில் அடிமையாவது தவறு.
மேலும் படிக்க : 5 Best Foods For Motility and Sperm Count in Tamil | விந்தனுவுக்கு 5 உணவுகள்
மூளையின் செயல்பாடு குறைய காரணம் :
(1) சரியான தூக்கம் அவசியம் :
சரியான தூக்கம் என்பது, எல்லா உயிர்க்கும் அவசியமாகும். ஏன் தூக்கம் அத்தனை அவசியம் என்று பலபேருக்கு இன்றளவும் தெரியவில்லை. நாம் உபயோக படுதும் ஒவ்வொரு பொருட்கள் போல, கணினி, மொபைல், போல அனைத்துக்கும், சிறிது நேரம் இடைவெளி அல்லது ரெஸ்ட் எனபடுவது முக்கியமாகும்.
அதாவது, ஒரு கணினி, ஒரு மொபைல் க்கு, ரெஸ்ட், ஒரு தேவை இல்லாத பகுதியை Delete செய்தல் என்பது நாம் செய்வோம். ஆனால், நமது மூளையில் நாம் தினமும் லட்சம் பொருளை பார்க்கிறோம்.
ஆயிரம் விசயங்களை யோசிக்கிரோம். இதனை தேவை இல்லாத பகுதியை Delete செய்தல் போல, அல்லது நமது மூளையை எந்த விதமான விஷயமும் யோசிக்காமல் இருக்க நாம் சற்று நமது மூளைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். தினமும் 7 – 9 மணி நேரம் வரை நாம் தூங்க வேண்டும். அப்போதுதான் நமக்கு சரியான முறையில் ஓய்வு கிடைக்கும். மூளையின் செயல்பாடு நல்ல முறையில் இருக்கும்.
(2) அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு :
பொதுவாக நாம் தினமும், காலை மற்றும் மாலை என, இரண்டு வேலைகள், டீ, காபி, என குடித்து வருகிறோம். இதுமட்டும் இல்லாமல் சிலர் அதிக சர்க்கரை சேர்த்து குடித்து வருகிறோம். சிலர் 2 வேலை குடிக்காமல் 3 முதல் 5 வேலை டீ அல்லது காபி, என குடிக்கும் பழக்கம் கொண்டவர் உள்ளனர்.
நீங்கள் இப்போது ஒரு கணக்கு பாருங்கள், தினமும் நீங்கள் 4 முதல் 6 ஸ்பூன் என்ற அளவில் எடுத்து வந்தால், ஒரு வாரம் , ஒரு மாதம் என எத்தனை அளவு எடுத்து வருகிறோம் என்று யோசித்து பாருங்கள். இதனை அளவு கண்டிப்பாக நல்லது இல்லை.
மற்றும் இது இல்லாமல், தேவை இல்லாத கொழுப்பு உணவு சேர்க்க கூடாது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் தவிர்க்க வேண்டும். இதனை கட்டுப்படுத்துவதன் மூலம் மூளையின் செயல்பாடு பதிப்பு ஆவதை சற்று தடுக்க இயலும்.
மேலும் படிக்க : விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil
(3) நிம்மதியான தூக்கம் :
(a) குறைந்தது 7-9 மணிநேரம் நாம் தினமும் தூங்க வேண்டும். நாம் தூங்கும் அறையை முழுவதும் இரவில் தூங்கும் போது, முழு இருட்டாக இருக்கும் படி வைத்துகொள்ள வேண்டும்.
(b) தூங்கும் போது, அருகில் நமது படுக்கையில், அல்லது நமது அருகில் உங்கள் மொபைல் மற்றும் கணினி, அல்லது லேப்டாப், போன்ற பொருட்கள் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். அப்போது தான் நமக்கு தெரியாமல் நமது மூளையை பாதிக்கும் Radiation எனப்படும் அலைகதிர்வீச்சு ஆனது நமது மூளையை, நமது உடம்பை பாதிக்காமல் இருக்கும்.
(c) நாம் தூங்க செல்லும் முன்பு, குறைந்தது 1 மணி நேரம் முதல், 2 மணி நேரம் வரை மொபைல், கணினி,தொலைக்காட்சி போன்ற விசயங்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டு சாதாரண நிலையில் இருக்க வேண்டும்.
(d) இரவில் தூங்கும் முன்பு பாடல் கேட்டு தூங்குவதை தவிர்க்க வேண்டும். 2 மணி நேரம் முன்பு அனைத்தையும் ஓரம் கட்டி விட்டு நிம்மதியாக தூங்க பழக வேண்டும். இப்படி செய்தால், மூளை செயல்பாடு குறைவதை தடுக்க இயலும்.
(4) தூங்கும் முன்பு சரியான உணவு :
நாம் தூங்கும் முன்பு, சரியான முறையில் உணவு உண்ண வேண்டும். அதாவது நாம் தூங்கும் முன்பு அதிக கொழுப்பு, அதிக எண்ணெய் பொருள்கள், அசைவ உணவுகள், அதிக செரிமானம் ஆகாத உணவு முறையை தவிர்க்க வேண்டும். அப்போது தான், நல்ல முறையில் செரிமானம் ஆகி, நல்ல முறையில் சத்துக்கள் நமது உடலில் சென்று சேரும். மற்றும் நாம் நல்ல முறையில் தூங்க முடியும்.
மூளையை கட்டுபாட்டில் வைப்பது எப்படி ?
(1) தூக்கமும் / உணவு நேரமும்.
(2) தூக்கமும் / சாதனங்களும்.
(3) தூக்கமும் / தூங்கும் அறைகளும்.
(4) தூக்கமும் / தேவை இல்லா உணவும்.
1: தூக்கமும் / உணவு நேரமும் :
நாம் பொதுவாக தூங்க செல்லும் சிறிய நேரம் முன்பு தான், உணவு உண்டு செல்கிறோம். இதனால் நமக்கு செரிமானம் நடக்கும் வேளையில் நாம் படுத்து தூங்குவதால், நமது உடலில் செரிமானம் பாதிக்கப்படுகிறது. மேலும் இதனால் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் பாதி அளவு கூட கிடைப்பதில்லை.
இதனால் நாம் தூங்கும் நேரம் முன்பு குறைந்தது 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் முன்பாக உணவு எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் 2 மணி நேரம் கழித்து தூங்குவது நல்லது.
2: தூக்கமும் / சாதனமும் :
தூங்குவதற்கு 1 முதல் 2 மணி நேரம் வரை எந்த வித மொபைல், போன்ற சாதனங்கள் பயன்படுத்தாமல், அருகிலும் எந்த சாதனமும் இல்லாமல் தூங்குவது நல்லது. மற்றும் மிகவும் சிறந்தது.
3: தூக்கமும் / தூங்கும் அறைகளும் :
நாம் தூங்க செல்லும் போது, நமது அனைத்து விளக்குகளையும் அனைத்து ஒரு நிமிடம் பாருங்கள். அப்போது நீங்கள் தூங்கும் அறையில் எந்த வித விளக்குகளும் இல்லாமல், எந்த வெளி வெளிச்சமும் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். அப்போது தான் உங்கள் மூளை ஆனது, நன்கு முழு ஓய்வு நிலைக்கு செல்லும்.
இல்லையெனில், நீங்கள் தூங்குவது போல இருந்தாலும், உங்கள் மூளை முழு ஓய்வை தவிர்க்கும். இதனால் தூங்குவது பலன் கிடைக்காது. இதனால் நீங்கள் தினமும் தூங்கும் போது முழு வெளிச்சம் இல்லாமல், தூங்க பழகி கொள்ளுங்கள். உங்கள் மூளை நல்ல ஓய்வு பெறும்.
மேலும் படிக்க : Kidney Failure Symptoms In Tamil – சிறுநீரக பாதிப்புக்கான 10 அறிகுறிகள்
4: தூக்கமும் / தேவை இல்லா உணவும் :
நீங்க தூங்குவதற்கு முன் அல்லது பின் சரி, நாம் சொன்னது போல, டீ, காபி, அதிகம் எடுத்து கொள்வது. அதில் அதிக அளவு சர்க்கரை சேர்த்து குடித்து வருவது. இதை முதலில் தவிர்க்க வேண்டும். முடிந்தால் டீ, காபி குடிக்கும் பழக்கம் விட்டுவிட்டால் ரொம்பவே உங்களுக்கு நல்லது.
இல்லையெனில், வாரம் 2 முதல் 3 முறை, அல்லது 3 நாட்கள் மட்டும் வேண்டுமானால், எடுத்து கொள்ளுங்கள். Junk Food, தேவை இல்லா கொழுப்பு உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், என்று அனைத்துமே விட்டு விடுங்கள். அது உங்களுக்கு நல்லது.
இல்லையெனில், நாம் சொல்வது போல, வாரம் இருமுறை, இல்லை மூன்று முறை வேண்டுமானால் எடுத்து கொள்ளுங்கள். எதையும் தொடர்ந்து பழக்க படுத்தினால் நன்மையும் நடக்கும், தீமையும் நடக்கும். அதையே அளவோடு வைத்து கொள்ளுங்கள் நன்மை மட்டுமே கிடைக்கும். உங்களுக்கு எது வேண்டும். நன்மையா? தீமையா?
நல்ல தூக்கம் மட்டுமே கூட உங்கள் மூளையை 60 % முதல் 70 % வரை கூட சுத்தபடுத்தும். உங்களுக்கு நாம் சொன்ன இந்த விசயத்தை படித்து, உங்கள் மூளையை, மூளையில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்யுங்கள். பயன் பெறுங்கள். நன்றிகள்.
மேலும் படிக்க : விந்துவை அடக்கலாமா ? அடிக்கடி வெளியேற்றலாமா ?