Lungs Detox In Tamil | நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி ?

Lungs Detox In Tamil | நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி ?

நுரையீரல், என்பது நமக்கு எவ்வளவு முக்கியம் என்பது இன்றைக்கு எத்தனை பேருக்கு தெரியும். ஆம், நுரையீரல் என்பது ஒரு மனிதருக்கு ரொம்பவே முக்கியம் ஆகும். இந்த முக்கியமான ஒன்றாக உள்ள இந்த நுரையீரல், சுற்று சூழல், அல்லது நாம் செய்ய கூடிய பல பல விஷயங்களால்,  எந்த அளவு பாதிக்கப்படுகிறது என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி, நமது நமது நுரையீரல் பாதிப்பு தெரிந்து அதை பாதிப்பு ஆகாமல் தடுக்கவும், அப்படி பாதிப்பு ஆன நுரையீரலை நாமே Lungs Detox எனப்படும், நுரையீரல் சுத்தப்படுத்தும் முறையையும், மற்றும் நமது நுரையீரல் நமது உடலில் எப்படி வேலைகளை செய்து வருகிறது என்று அனைத்தையும் இதில் பார்க்க போகிறோம்.

இதனால், இதில் நமது நுரையீரல், வேலை செய்யும் விதம், எந்த எந்த விதத்தில் பாதிப்பு ஆகின்றது, மற்றும் பாதிப்பு ஆன நுரையீரலை நாமே சுத்தம் செய்தல் முறைகள் பற்றி பார்த்து படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நுரையீரல் உடலில் எங்கு உள்ளது :

நமது உடலில் உள்ள அனைத்து முக்கிய உறுப்புகளும், நமக்கு ஒண்டு என்ற வீதம் உள்ளது. ஆனால், சிறுநீரகம், மற்றும் நுரையீரல் ஆனது நமக்கு இரண்டு என்ற விகிதத்தில் நமக்கு கடவுள் மூலம் கொடுக்கபட்டுள்ளது.

இந்த நுரையீரல் ஆனது நமது நெஞ்சு பகுதியில் உள்ளது. அதாவது, நமது இதயம் என்பது நெஞ்சுக்கு நடு நிலை பகுதியில் உள்ளது. இந்த நடுவில் உள்ள இதயத்திற்கு இரு புறமும், இடது புறம் ஒன்று மற்றும் வலது புறம் ஒன்று என்ற வீதத்தில், இதயத்தை பாதுகாக்கும் வகையில் இயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இதயம், வலது மற்றும் இடது புறம் இருக்கும் நுரையீரல் சுற்றி நமது நெஞ்சு எலும்பு எனப்படும் விலா எலும்பு உள்ளது. இது நமது நுரையீரல் மற்றும் இதயத்தை முழுவதும் தடுப்பு சுவர் போல அமைந்து பாதுகாக்கிறது.  இந்த நுரையீரல் மூலம், நாம் மூச்சி காற்றினை மூக்கின் வழியாக உள் இழுத்து வெளியே விட்டு சுவாசம் செய்கிறோம்.

மேலும் படிக்க : விந்துவை அடக்கலாமா ? அடிக்கடி வெளியேற்றலாமா ?

நுரையீரல் எப்படி இயங்குகிறது ?

நமது மூக்கு பகுதியில் இருந்து, நுரையீரலுக்கு Wind Pipe எனப்படும் சுவாச குழாய் ஒன்று நமது தொண்டை வழியாக செல்கிறது. பின்னர் இந்த Wind Pipe ஆனது, இரண்டாக பிரிந்து இரண்டு நுரையீரலுக்கு உள்ளே செல்கிறது. இது Bronchus என்று அழைக்கபடுகிறது. பின்னர் இந்த சுவாச குழாய் ஆனது, நுரையீரலுக்கு உள்ளே சென்று சிறிய சிறிய குழாய் ஆக, மரத்தின் வேர் போல பிரிந்து செல்கிறது.

இந்த சிறிய சிறிய வேர் போல சென்று சேரும் குழாய் ஆனது, Alveoli எனப்படும் சிறிய சிறிய ஒரு முடிச்சு பை மூலம் முடிகிறது. நாம் ஒவ்வொரு முறை மூச்சினை உள்ளே இழுத்து வெளியே விடும் போது, Alveoli எனப்படும் சிறிய சிறிய பை வரைக்கும் காற்று உள்ளே சென்று மீண்டும் வெளியே வருகிறது.

Alveoli பை எதற்கு இருக்கிறது ?

இந்த Alveoli எனப்படும் இந்த சிறிய சிறிய பை ஆனது எதற்கு இருக்கிறது என்று உங்களுக்கு யோசிக்க வைக்கலாம். இந்த Alveoli எனப்படும் இந்த பை சுற்றி பல நரம்புகள் உள்ளது. இதன் மூலம் தான் நல்ல இரத்தம், கெட்ட இரத்தம், கலக்கும் பொருளுக்கு, Gas Exchange எனப்படும் விசயம் செய்ய பயன்படுகிறது.

ஒவ்வொரு மூச்சு விடும் போதும் நுரையீரலில் என்ன நடக்கிறது ?

நாம் ஒரு ஒரு மூச்சு இழுத்து விடும் போதும், நமது நுரையீரல், மற்றும் நமது உடலில் என்ன என்ன நடக்கிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் பொகுவாக மூச்சு எடுக்கும் போது மெதுவாக அதிக காற்றை உள்ளே எடுக்க வேண்டும். பின்பு சிறிது நேரத்தில், மெதுவாக உள்ளே உள்ள கெட்ட காற்றை மெதுவாக வெளியே விட வேண்டும்.

நாம் மெதுவாக காற்றை உள்ளே எடுக்கும் போது, நமது மூக்கின் வழியே காற்று,  Wind Pipe- க்கு செல்லும் முன்பு நமது மூக்கில் உள்ள CILIA எனப்படும் விசயம் மூலம் காற்றில் உள்ள கெட்ட விசயங்கள், சிறிய தூசுகளை இந்த Cilia மூலம் Filter செய்து காற்றினை உள்ளே அனுப்புகிறது. Cilia என்பது நமது மூக்கின் உள்ளே சிறிய சிறிய Feather என்ற ஒரு விசயம் மாறி உங்கள் மூக்கில் இருக்கும்.

இதனால், இதன் மூலம் காற்றில் உள்ள கெட்ட விஷயம், தூசிகள் ஒரு அளவுக்கு இதன் மூலம் தடுக்கப்பட்டு நல்ல காற்றாக உள்ளே செல்கிறது. பின்னர் இந்த காற்று ஆனது, நுரையீரலுக்கு செல்கிறது, பின்பு நுரையீரலுக்கு சென்று, Alveoli எனப்படும் பை வரைக்கும் செல்கிறது.

பின்பு நமது இதயம் செல்கிறது. பின்னர் நமது இதயத்தில் இருந்து நம்து கை, கால்கள், கிட்னி, மூளை என, அனைத்து பகுதிக்கும் நல்ல காற்று நல்ல இரத்தம் மூலமாக சென்று, பின்னர் கெட்ட இரத்தம் ஆனது, pulmonary artery எனப்படும் கெட்ட இரத்தம் வெளியேற்றும் இரத்த குழாய் வழியாக வெளியேறுகிறது.

பின்னர் Alveoli எனப்படும் இடத்தை சுற்றி உள்ள இரத்த குழாய் வழியாக கெட்ட காற்று ஆனது வெளியேறும். இப்போது நாம் மூச்சு இழுக்கும் போது எடுத்த ஆக்சிஜன் ஆனது, கடைசியில் அனைத்து பாகதிர்க்கும் சென்று, மூச்சினை வெளியே விடும் போது, pulmonary artery வழியாக கெட்ட இரத்தம் ஆனது சென்று, பின்னர் Alveoli எனப்படும் இடத்தை சுற்றி உள்ள சிறிய இரத்த குழாய் வழியாக, சென்று கெட்ட இரத்தம் ஆனது,  கார்பன்டை ஆக்ஸைடு, ஆக நமது உடலில் இருந்து வெளியேறுகின்றன. இவை அனைத்தும் ஒவ்வொரு மூச்சு காற்றை நாம் உள்ளே இழுத்து விடும் போதும் நடக்கிறது.

மேலும் படிக்க : மார்பு பகுதியில் வலி வந்தால் மாரடைப்புக்கான அறிகுறியா ? What is Heart Attack Symptoms in Tamil

நுரையீரல் எப்படி பாதிக்கப்படுகிறது :

(1) Smoking / புகைப்பிடித்தல் :

உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்து வந்தால், அதை உடனடியாக இப்போது நிறுத்த வேண்டும். அல்லது படிப்படியாக முழுவதும் நிறுத்த வேண்டும். ஏன் என்றால், நாம் புகைப்பிடிக்கும் போது நமது மூச்சி காற்றின் வழியே எண்ணற்ற அளவில், புகை ஆனது நேரடியாக உங்கள் நுரையீரலுக்கு செல்கின்றது.

இப்படி நேரடியாக உங்கள் நுரையீரலுக்கு புகைப்பிடிக்கும் போது அதில் உள்ள நிக்கோடின் என்னும் பொருளும் சேர்ந்து, உங்கள் நுரையீரலில் புகையாக சென்று படிகன்றது. இதனால் மிகவும் நுரையீரல் பாதிப்பு உள்ளாகின்றன. இதனால் நச்சுக்கள் நிக்கோடின் என்னும் பொருள் சேர்ந்து உங்கள் இரத்தத்தில் நேராக கலக்கிறது. கலந்து இரத்தம் மூலம் உங்கள் உடலின் முழுவதும் அந்த நச்சுக்கள் கலகின்றது.

மேலும் நாம் புகைப்பிடிக்கும் நேரத்தில், நமக்கு அருகாமையில் இருக்கும் நபர் யாரேனும் இருந்தால், அவருக்கும் உங்கள் பாதிப்பு அளவுக்கு அவருக்கும் இருக்கும். இதனால், இதனையும் மனதில் வைத்துகொள்ள வேண்டும். இதனால் உங்கள் இரத்தத்தில் தன்மையும், உங்கள் நுரையீரலின் தன்மையும், உங்கள் மூச்சு காற்று உள்ளடக்கும் தன்மையும் பாதிக்கப்படுகின்றது.

(2) Air Pollution / காற்று மாசுப்பாடு :

காற்று மாசுப்பாடு என்பது, இன்றளவில் அனைத்து இடத்திலும், பெறும் பிரச்சனையாக இருக்கிறது. ஏன் என்றால், உலகில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், வாகனங்களை உபயோகப்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் ஆகும்.

மேலும், நமது நாட்டில் அல்ல உலகத்தில் கூட சேர்த்து பார்த்தால், தொழிற்சாலைகள் அதிகரித்து வருவது, மற்றும் அதன் நச்சுக்கள் அதிகம் காற்றில் கலக்கும் காரணமும் ஆகும். இந்த நச்சுக்கள் நிறைந்த வாகன புகை, தொழிற்சாலை புகை கலந்த மாசு ஏற்பட்ட காற்றை நாம் சுவாசிப்பதால், நமது நுரையீரல் அதிகம் பழுது ஆகின்றது. மற்றும் பாதிக்கபடுகிறது.

நுரையீரலை சுத்தம் செய்வது / பாதுகாப்பது எப்படி ?

(1) Steam Taken / வேதுப்பிடித்தல் :

நாம் வேதுப்பிடித்தல் என்னும் ஒரு விஷயம் எல்லோருக்கும் தெரியும். நாம் உடல் நிலை சரி இல்லாத நிலையில் நாம் குறிப்பாக சளி பிடித்து இருக்கும் போது, பண்ணுவோம். நீங்கள் பொதுவாக சளி பிடிக்கும் போது வாரம் இருமுறை அல்லது மூன்று முறை கூட இந்த வேதுப்பிடித்தல் செய்யலாம்.

அல்லது நீங்கள் உங்கள் நுரையீரலை சற்று சுத்தம் செய்தல் வேண்டும் என்றால், சற்று நீங்கள் சாதாரணமாக இருக்கும் போது கூட, நீங்கள் மாதம் ஒரு முறை மட்டும் என்ற அளவில் கூட இந்த வேதுப்பிடித்தல் என்ற விசயம் செய்யலாம். உங்கள் cilia என்ற மூக்கில் உள்ள இடமும் சுத்தமாகி, உங்கள் நுரையீரலும் சுத்தமாகும்.

மேலும் படிக்க : Best Tricks to see Whatsapp of Other’s Mobile without Touch | Tamil |

(2) Postural Drainage :

நாம் சளி, அல்லது உடலில் infection ஆன போது, காய்ச்சலில் போது, நமது உடலில் உள்ள நுரையீரலின் கிளை பகுதிகள் அதிகமாக சுருங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்படும். இதனால் மூச்சு நம்மால் ஒழுங்காக விட முடியாமல் ஆகலாம். இந்த கிளை பகுதிகள் மூலம் தான் நமக்கு பொதுவாக சுத்தம் ஆக வைத்து சளிகள் பிடிக்காமல் பாதுகாக்கிறது.

ஆனால், நமது உடலில் சரிவர இல்லாத நேரத்தில், இந்த கிளை குழாய்கள் சுருங்கி அடைவதால், நமக்கு மூச்சு பிரச்சினை, இருமல் பிரச்சினை உண்டாகின்றது. இதனால் இதனை சரி செய்வதன் மூலம் நாம் அந்த கிளை குழாய்களை virivadaiya செய்து நமது நுரையீரலை ஒழுங்காக இயங்க செய்ய முடியும். இதற்கு Postural Drainage என்று பெயர்.

இந்த Postural Drainage  எப்படி செய்யலாம் என்றால், நாம் உணவு உண்ண செல்லும் முன், அல்லது உணவுகள் உண்ட 2 மணி நேரம் ஆன பிறகு, உங்கள் நெஞ்சு பகுதி கீழ் இருக்குமாறு, உங்கள் இடுப்பு பகுதி சற்று அதை விட சற்று மேல் நோக்கி இருக்கும் வகையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால், உங்களுக்கு அந்த குழாய் விரிவடைந்து, நல்ல முறையில் ஆக்சிஜன் சென்று, உடல் நிலை சீராகும். மூச்சு அடைப்பு சற்று நீங்கும்.

(3) Exercise / உடற்பயிற்சி :

தினமும் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரையாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி என்பது நம் உடலில் உள்ள தசைகளை பெரிதாக்கும், அல்லது சிரிதாக்கும் வேலை மட்டும் இல்லை. இதை தாண்டி, நமது நுரையீரல் மூலம் அதிக காற்றினை உள்ளடக்கும் தன்மையும் அதிக இரத்த செல்களை உருவாக்கவும். அதிக மூச்சி தன்மையும் பெறுவதற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

(4) Green Tea / கிரீன் டீ :

அதிக Anti Oxidents எனப்படும், நோய் எதிர்ப்புச்சக்தி அதிகம் இந்த கிரீன் டீ யில் இருப்பதால், இந்த கிரீன் டீ தினமும் அல்லது வாரம் 4 முதல் 5 தடவை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதன் மூலம் உங்க நுரையீரல் பாதுகாக்கப்படும்.

(5) Turmeric / மஞ்சள் :

மஞ்சளில் அதிக ஆன்டி oxident இருப்பதால், மஞ்சள் சேர்த்து வரும் போது, நல்லது.

(6) Walnut / வால்நட் :

இதயத்திற்கும், மூளைக்கும், நுரையீரலுக்கு இந்த வால்நட் மிகவும் நல்லது.எனவே இதை தினமும் எடுத்து கொள்ளலாம்.

(7) காய் கறிகள் :

காய்கறிகள் அதிகம் உணவாக எடுத்து கொள்ளலாம். இதனால் பல நன்மைகள் கிடைக்கும்.

(8) Breathing Control / மூச்சு பயிற்சி :

நீங்கள் மூச்சு எடுக்கும் போது, நீங்கள் இல்லை அனைவரும் வேகமாக உள்ளே இழுத்து வேகமாக வெளியே விடுகிறோம். இதனால் இப்படி செய்யாமல், நாம் மூச்சினை உள்ளே இழுக்கும் போது மெதுவாக உள்ளே இழுக்க வேண்டும். பின்பு வெளியே மூச்சு காற்றை விடும் போது, உள்ளே இழுத்த வேகத்தை விட இருமடங்காக மெதுவாக வெளியில் விட வேண்டும்.

இப்படி செய்வதால், உங்கள் வாழ்வு வளமாகும். செழிப்புடன் வாழ முடியும். இதை அனைவருக்கும், இந்த பதிவை சமூக வலைதளம் மூலம் நீங்கள் அனைவருக்கும் பகிர்ந்து, அனைவரது நுரையீரல் சுத்தம் செய்யவும், பாதுகாக்கவும், அனைத்து மக்களும் வளமாக வாழ வகை செய்யுங்கள்.

மேலும் படிக்க : Exercise to Protect your Eyes From Phone in Tamil | ஃபோன் பார்ப்பதால் கண்களை பாதுகாக்கும் சில உடற்பயிற்சிகள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *