- Home Remedies For Gastric Problem In Tamil | வாயு பிரச்சனையை சரி செய்வது எப்படி ?
- வாயு நமது உடலில் உருவாவது சாதாரண விஷயமா ?
- வாயு நமது உடலில் எப்படி உருவாகிறது ?
- வாயுக்கள் எப்படி வெளியேறுகிறது ?
- வாயுவில் ஏன் நாற்றம் அடிக்கிறது ?
- வாயு உருவாகும் விதங்கள் :
- சில நோயினால் உருவாகும் வாயு பிரச்சினை :
- எந்த உணவுகளால் அதிகம் வாயு பிரச்சினை உருவாகிறது ?
- வாயு பிரச்சினையை சரி செய்வது எப்படி ?
- 4) சரியான முறையில் உண்ணுதல் :
Home Remedies For Gastric Problem In Tamil | வாயு பிரச்சனையை சரி செய்வது எப்படி ?
வணக்கம் நண்பர்களே, இன்றைய காலத்தில் மனிதருக்கு இருக்கும் பல பிரச்சனையில், அதுவும் மனிதருக்கு இருக்கும் பல உடல் சார்ந்த பிரச்சனையில் ஒன்றாகவும், முக்கியமானதாக இருப்பதும் ஒன்று தான் இந்த Gas Problem என சொல்லக்கூடிய வாயு பிரச்சினைகள்.
இந்த வாயு பிரச்சினை ஏற்பட்டால், நாம் யாரிடமும் இந்த வாயு பிரச்சினை பற்றி சொல்லவும் முடியாது. திடீரென பல பேர் இருக்கும் போது நமக்கு திடீரென வாயு பிரிந்தால், அது உடனே பல பேரால் ஒருமாதிரி பார்க்கப்படுகிறது.
இந்த வாயு தொல்லை எதனால் ஏற்படுகிறது, இந்த வாயு பிரச்சினை நம் உடலில் என்ன என்ன பிரச்சனையை உண்டு பண்ணுகிறது, இந்த வாயு பிரச்சனையில் இருந்து நாம் எப்படி முழுவதும் சரிசெய்து கொள்வது என்று அனைத்தையும் உங்களுக்காக இந்த பதிவு மூலம் எடுத்து வருகிறோம். இதனால் இந்த பதிவை முழுவதும் பார்த்து படித்து தெரிந்து கொண்டு பயன் அடைவீர்.
வாயு நமது உடலில் உருவாவது சாதாரண விஷயமா ?
Gas என்னும் வாயு என்பது நமது உடலில், சாதாரணமாக உருவாகும் ஒன்றுதான். நாம் சாதாரனமாக தினமும் உணவு உண்பது போல, தினமும் நமது நாக்கில் எச்சில் சுரப்பது போல, நாம் தினமும் மலம் கழிப்பது போல, நமது உடலில் வாயு என்பது உருவாவதும் சாதாரணம் தான்.
ஆனால், இதே வாயு ஆனது அளவுக்கு அதிகமாகி, நமது உடலில் இருந்து வாயு ஆனது வெளியேற முடியாமல், இருக்கும் அளவுக்கு நமக்கு உணவு உண்ண முடியாத அளவுக்கு, நமக்கு வயிறு உப்புசம் ஆக்கி வயிறை பெரிதாக்கும் அளவுக்கு, நாம் சாதாரண நிலையில் இல்லாத அளவுக்கு நம்மை ஆக்க கூடிய அளவுக்கு வாயு நமது உடலில் உருவாவது தான் தவறாக அமைகிறது.
மேலும் படிக்க : Brain Detox in Tamil | மூளை கழிவுகளை சுத்தப்படுத்துவது எப்படி ?
வாயு நமது உடலில் எப்படி உருவாகிறது ?
நாம் தினமும் உணவுகள் உண்ணுகிரோம். இந்த உணவை உண்ணும் போது, நாம் நமது வாயின் வழியாக உணவை கடித்து, மென்று, நன்றாக விழுங்குகிரோம். விழுங்கிய உணவு நமது தொண்டையில், உணவு குழாய் வழியாக நமது வயிறு பகுதிக்கு செல்கிறது.
வயிறு பகுதிக்கு சென்ற உணவு ஆனது குடலுக்கு செல்கிறது. பின்பு குடலின் மூலம் அந்த உணவு ஆனது சத்துக்கள் தனியே, பிரித்து எடுத்து நமது உடலில் உள்ள அனைத்து பகுதிக்கும், அனைத்து உறுப்புகளுமக்கும், சத்துக்கள் சென்று சேருகின்றது.
பின்னர் சத்துகளை பிரித்து அனுப்பிய பின்னர், மீதமுள்ள விஷயங்கள் சக்கையாக பிரிந்து விடுகிறது. இந்த சக்கையானது Gas எனப்படும் வாயுவாகவும், மலமாகவும், நமது உடலில் இருந்து வெளியேற்றம் ஆகின்றது.
இப்படி, மலம் கழிப்பது மட்டும், நடந்து அல்லது மலம் கழிப்பது கொஞ்சம் கொஞ்சமாக நடந்தோ, அல்லது சரியாக செரிக்காமல், நமது உடலில் தங்கிய உணவில் இருந்து பிறக்கும், கார்பன்டை ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் போன்ற வாயுக்கள் ஒன்று சேர்ந்து நமது வயிறு பகுதியில் உள்ள இரைப்பையில் வாயுவாக உருவாகிறது.
இந்த நிலையில் அதிகமான வாயு உருவானால், ஒரே நேரத்தில் வெளியேற முடியாமல், தங்கி விடுகிறது. இதுவே வாயு உருவாக காரணமும், பிரச்சினையாகவும் அமைகிறது. அதிகமான வாயு பிரச்சினை உள்ளவர்களுக்கு இரைப்பையில், இந்த வாயு ஆனது, 1 லிட்டர் முதல் இரண்டு லிட்டர் அளவு வரை கூட உருவாகிறது. இதனால் பலர் வாயு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, கஷ்டப்படுகின்றனர்.
மேலும் படிக்க : விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil
வாயுக்கள் எப்படி வெளியேறுகிறது ?
வாயுக்கள், ஆனது பொதுவாக சாதாரண நிலையில், 60 முதல் 80 சதவீதம் வரை நமது வாய் வழியாக வெளியேறுகிறது. மீதமுள்ள 20 முதல் 30 சதவீதம் வரை நமது ஆசனவாயின் வழியாக வெளியேறுகின்றது.
வாயுவில் ஏன் நாற்றம் அடிக்கிறது ?
நமது வயிரு பகுதியில், ஒழுங்காக செரிமானம் ஆகாமல், ஆன உணவுகளில் இருந்து பிறக்கும், அம்மோனியா, ஹைடிரஜன் சல்பைடு, மெர்கேப்டன், போன்ற வாயுக்கள் உருவாகி, வெளியேறும். இந்த மூன்று வாயுக்கள் சேர்ந்து ஆக்சிஜன் உம் சேர்ந்து வெளியேறும். இதனால் நம் உடலில் இருந்து வாயு வெளியேறும் போது நாற்றம் அடிக்கிறது.
வாயு உருவாகும் விதங்கள் :
a) சரியாக செரிமானம் இல்லாமல் இருப்பது.
b) நமது உடலில், ஏதேனும் நோய்கள், போன்றவை இருப்பதால், உருவாதல்.
c) நேரத்திற்கு உண்ணாமல் இருப்பது, அல்லது ஏதேனும் ஒரு நேர உணவை சாப்பிடாமல் தவிர்ப்பது.
d) வாயின் வழியே உள்ளே செல்லும் காற்றின் மூலம்.
e) எண்ணெயில் செய்த உணவுகள் உண்பதால், அதிக பருப்பு, கிழங்கு வகைகள் உண்பதால், அதிகம் மசாலா பொருள்கள் உண்பதால், வாயு உருவாகிறது.
மேலும் படிக்க : Lungs Detox In Tamil | நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி ?
சில நோயினால் உருவாகும் வாயு பிரச்சினை :
a) மலம் கழிப்பதில் பிரச்சினை இருப்பவருக்கு.
b) கல்லீரலில் பிரச்சினை இருப்பதால்.
c) கணய நோய் இருப்பவர்கள்.
d) வயிற்றில் புழுக்கள் அதிகம் இருப்பதால்.
e) நெஞ்சு எரிச்சல், வயிறு எரிச்சல், போன்ற பிரச்சினை இருப்பவர்களுக்கு ஏற்படும்.
இப்படி பல பல பிரச்சனையால், நமது உடலில் வாயு ஆனது உடலை பொருட்டு அதிகமாகவும், கம்மியாகவும் உருவாகிறது. இது அல்லாமல் உடல் பருமனை கொண்டவர்களுக்கு வாயு அதிகம் பிரச்சினை கொடுக்கும். மேலும் இந்த வாயுக்கள் வெளியேற முடியாமல் சில நேரம் வழிகள் கூட ஏற்படும். இதனால் மிகவும் சிரமதிர்க்கும், மிகுந்த மன வேதனைக்கும் ஆளாவார்கள்.
எந்த உணவுகளால் அதிகம் வாயு பிரச்சினை உருவாகிறது ?
அதிகம் புரதம் நிறைந்த உணவு உண்பதால், தேவைக்கு அதிகமான அளவில் எடுத்து கொள்வதாலும், அது எல்லாம் நமக்கு gas எனப்படும் வாயுவாக உருவாக காரணமாக அமைகிறது. இப்போது இதில் சில உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
(1) பட்டாணி வகைகள் :
பச்சை பட்டாணி, கருப்பு கொண்டைக்கடலை, வெள்ளை கொண்டைக்கடலை, பீன்ஸ், சோயா பீன்ஸ், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு போன்ற பருப்பு வகைகள் அதிகம் உண்பதால், வாயு அதிகம் உருவாகிறது.
(2) கிழங்கு வகைகள் :
உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு, என அனைத்து கிழங்கு வகைகளும் பொதுவாக பெரும்பாலும் வாயு ஏற்படுத்தும் உணவாக அமைகிறது.
(3) காய்கறிகள் :
முட்டைகோஸ், வாழைக்காய், வெங்காயம், காலிஃப்ளவர், பிரோக்கொழி, என அனைத்து உணவு அதிகம் வாயு பிரச்சினை உருவாக காரணமாக அமைகிறது.
இது இல்லாமல், சாக்லேட், நட்ஸ் வகைகள், வாயு உருவாக்குகிறது. இவை இல்லாமல், புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், பாப்கார்ன், பிஸ்கட், பால்கோவா, மற்றும் Junk Food எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிகம் என்னை சேர்த்த பொருட்கள், என இவை அனைத்தும் வாயு அதிகம் உருவாக காரணமாக அமையும் உணவுகளும், பொருட்களும் ஆகும்.
மேலும் படிக்க : How to Collect Semen For Sperm Test | Tamil
வாயு பிரச்சினையை சரி செய்வது எப்படி ?
(1) சரியான முறையில் உணவு :
a) காலை, மதியம், இரவு, என்று மூன்று வேலைகளும் தவறாமல் உணவு எடுத்துகொள்ள வேண்டும்.
b) உணவு அனைத்தும் பெரும்பாலும், Gas Problem, எனப்படும் வாயு பிரச்சினை கொடுக்க கூடியதாக இருக்கும். இதனால், நாம் எல்லா இடங்களிலும் எல்லா உணவுகளையும் தவிர்த்துவிட முடியாது. இதனால் எந்த உணவு சாப்பிடும் போதும் நமது உடலுக்கு போதுமான அளவிற்கு எல்லா உணவுகளையும் அளவாக எடுத்து கொள்ள வேண்டும்.
c) ஒருநேரம் சாப்பிடாமல் இருப்பது தவிர்க்க வேண்டும். குறிப்பாக அனைவரும் காலை உணவு உண்பதை தவிர்க்கின்றனர். இதனால் வயிரில், குடலில், பிரச்சினை ஏற்பட்டு வாயு உருவாகிறது. வயிறு உப்புசம் ஆகிவிடும். இதனால் ஒருநேரம் உணவு உண்ணாமல் இருப்பது தவிர்க்க வேண்டும்.
(2) நொறுக்கு தீனி தவிர்த்தல் :
மூன்று வேளை நாம் உண்ணும் உணவில், அளவாக உண்ண வேண்டும். இது இல்லாமல் நொறுக்கு தீனி எனப்படும், பஜ்ஜி, வாடை, மிச்சர், போன்ற என்னை பொருளும், தேவை இல்லாத எண்ணெயில் செய்த பொருளும், என தேவை இல்லாத நொறுக்கு தீனிகளை முழுதும் தவிர்ப்பது நல்லது. வாயு பிரச்சினை உண்டாகாமல் தவிர்க்க முடியும்.
(3) தினமும் உடற்பயிற்சி செய்தல் :
தினமும், நாம் உடற்பயிற்சி செய்தல் என்பது மிகவும் முக்கியமானதாகும். நாம் என்னதான் உணவுகளை பார்த்து பார்த்து உண்டாலும் நம்மால், நம் உடலில் 60 சதவீதம் வரை நமது உடலில் வாயு என்பது சேராமல் தவிர்க்க முடியும்.
ஆனால், உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. உடற்பயிற்சி நாம் தினமும் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை நாம் தினமும் காலை அல்லது மாலை என ஏதாவது ஒரு வேளை உடற்பயிற்சி செய்து வந்தால், மீதம் உள்ள 40 சதவீதத்தில், 20 சதவீதம் ஆவது நமது உடலில் வாயு சேராமல் தவிர்க்க முடியும். இதனால் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
மேலும் படிக்க : How to save our life from Heart Attack in Tamil | மாரடைப்பின் போது நமது உயிரை காப்பாற்றுவது எப்படி ?
4) சரியான முறையில் உண்ணுதல் :
உண்ணும் போது நாம் உணவை, எந்த உணவாக உட்கொள்ளும் போதும், வாய் திறந்து உணவை வாயில் வைத்தவுடன், வாயை நன்றாக மூடிக்கொண்டு உணவை மெல்ல வேண்டும். வாயை திறந்து மெல்லாமல் வாயை மூடி மெல்ல வேண்டும்.
மேலும் மெதுவாக நன்றாக வாயில் உள்ள உணவு முழுவதும் அறையும் படி மெல்ல வேண்டும். இப்படி செய்வதால் வாயின் மூலம் காற்று உள்ளே சென்று வாயு உருவாகாமல் தடுக்க இயலும்.
(5) தண்ணீர் குடித்தால் :
தினமும் போதுமான அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் என்பது வாயு பிரச்சினை என்று இல்லாமல், மனிதருக்கு மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். இதனால் தினமும் போதுமான அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.
தினமும் 3 லிட்டர் தண்ணீர் என்ற வீதம் நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி குடித்தால் தான், உங்களுக்கு முறையாக உடலுக்கு தேவையான தண்ணீர் கிடைத்து. உடல் சூடும் இல்லாமல், நல்ல முறையில் energy ஆக சுறுசுறுப்பாகவும், வாயு பிரச்சினை இல்லாமலும் இருக்க முடியும்.
(6) தினமும் பூண்டு சாப்பிடுதல் :
தினமும், பச்சையாகவோ, அல்லது சமையலில் சேர்த்தோ, தினமும் 1 பள் பூண்டு முதல் 3 பள் பூண்டு வரை எடுத்து கொள்ளலாம். இதனால் உடலில் வாயு சேராமலும், அடைபட்ட வாயு உடலில் இருந்து வெளியேற்றம் அடையவும் பயன்படுகிறது.
(7) பச்சையாக அல்லது வேகவைத்து :
தினமும் உணவுகளை உண்ணும் போது, சில பச்சையாக உண்ண முடிந்த உணவை பச்சையாக உண்ணலாம். அல்லது வேக வைத்து கூட உண்ணலாம். இதனால் மெதுவாக ஆன அந்த உணவு மூலம் வாயு சேரும் தன்மை குறைகிறது.
(8) தினமும் சீரகம் சேர்த்தல் :
தினமும் சீரகம் உங்கள் உணவில், சேர்த்து கொள்ளுங்கள், இது உங்கள் உடலில் உள்ள பாதி பிரச்சனையை சரி செய்து, நல்ல முறையில் இயற்கையான முறையில் ஆரோக்கியமான முறையில் இருக்க உதவுகிறது.
இப்போது நீங்கள் பார்த்து படித்த, இந்த பதிவை நீங்கள் பின்பற்றினால் போதும். வாயு பிரச்சினையில் இருந்து முழுவதும் விடுபட்டு, யாருக்கு முன்னாடியும் எந்த வித சங்கடமும். இல்லாமல் நல்ல முறையில் வாழ முடியும்.
மேலும், இந்த வாயு பிரச்சினை தொடர்ந்து இருந்து வந்தால், உங்களுக்கு எந்த உணவையும் சாப்பிட முடியாது. மீறியும் நீங்கள் அந்த உணவை உண்டால், உங்களுக்கு செரிமானம் ஒழுங்கான முறையில் நடக்காமல், அரைகுறையாக சத்துக்கள் உங்கள் உடலுக்கு சென்று சேரும்.
இதனால், ஒரு சில வருடத்தில் உங்களுக்கு சத்துக்கள் ஒழுங்காக சென்று சேராததால், உங்களுக்கு தலைவலி பிரச்சினை, நோய் எதிர்ப்புச்சக்தி குறைதல், கைகள் மற்றும் கால்களில் உள்ள மூட்டுகளில் மூட்டு பிரச்சினை போன்று பல பல பிரச்சனையால் பாதிக்கப்படகூடும்.
இதனால், இந்த பதிவை முழுவதும் பார்த்து, படித்து நாம் சொன்னது போல செய்து பாருங்கள். வாயு பிரச்சினை இல்லாமல், ஆரோக்கியமான முறையில், வாழ்க்கை வாழுங்கள். நன்றிகள் மீண்டும் அடுத்த பதிவில் பார்ப்போம்.
மேலும் படிக்க : 5 Best Foods For Motility and Sperm Count in Tamil | விந்தனுவுக்கு 5 உணவுகள்