- தீக்காயம் ஏற்பட்டால் முதல் உதவி செய்வது எப்படி? | First Aid For Fire Burns in Tamil :
- நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் பார்ப்பது :
- (1) தீக்காயம் ஏற்படாமல் எப்படி பாதுகாப்பது :
- (2) தீக்காயம் ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் ?
- மருத்துவரை அணுக வேண்டுமா ?
- தீக்காயம் ஏற்பட்டால் மருத்துவரை யார் முக்கியம் அணுக வேண்டும் ?
தீக்காயம் ஏற்பட்டால் முதல் உதவி செய்வது எப்படி? | First Aid For Fire Burns in Tamil :
வணக்கம் நேயர்களே, அன்பான மக்களே, மனிதர்களுக்கு ஏற்படும் அபாயகரமான பாதிப்புகளில் முக்கியமான ஒன்றாக இருப்பது தான், இந்த தீக்காயம் ஏற்படுவது ஆகும். இதனால் First Aid For Fire Burns பற்றி பார்க்க போகிறோம்.
இந்த தீக்காயம், தினமும் நமக்கு தெரிந்து அல்லது தெரியாமல், தினமும் ஆரியகணக்கான மக்களுக்கு ஏற்படுகிறது.
அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்களில் சொல்லவே தேவை இல்லை. பண்டிகை நாட்களில் தினமும் தீக்காயம் ஏற்படுவது விட, 10 மடங்கு மக்களுக்கு ஏற்படுகிறது.
Fire Burns, என்று அழைக்கபடும், தீக்காயம் என்பது, வீட்டில் அடுப்பில் இருந்து ஏற்படலாம். சமையல் செய்யும் போது எண்ணெயின் மூலம் தெளிக்கபட்டு ஏற்படலாம்.
சுடு தண்ணீர், மேலே ஊற்றி கொள்வதால், அல்லது டீ, காபி, மேலே ஊற்றி கொள்வதால், வேலை செய்யும் இடத்தில், முக்கியமாக நாம் சொன்னது போல, பண்டிகை நாட்களில் பட்டாசு போன்றவையால் ஏற்படுவது ஆகும்.
தீக்காயம் பொறுத்த வரையில், எப்போது யாருக்கு ஏற்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. திடீரென அஜாக்கிரதை காரணமாகவோ, இல்லை சில காரணமாக ஏற்படும்.
இதனால், இந்த பதிவு மூலம், நாம் உங்களுக்காக சில முக்கிய விஷயங்கள் பின்பற்ற வேண்டியது கொண்டு வந்துள்ளோம். பார்த்து பாதுகாப்பை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க :பாதாம் மற்றும் பிஸ்தா விட அதிக ஊட்டச்சத்து நிறைந்த விலை குறைவான உணவுகள் :
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் பார்ப்பது :
1) தீக்காயம் ஏற்படாமல் எப்படி பாதுகாத்து கொள்வது.
2) தீக்காயம் ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்.
3) தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய கூடாது.
என அனைத்தையும் எளிமையாக உங்களுக்கு புரியும் வகையில் பார்க்கலாம். பார்த்து பாதுகாப்புடன் வாழ வாழ்த்துக்கள்.
(1) தீக்காயம் ஏற்படாமல் எப்படி பாதுகாப்பது :
தீக்காயம் ஏற்படும் வகையில், உள்ள இடத்தினை முதலில் நீங்கள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். அது நாம் வேலை செய்யும் தொழிற்சாலையாக இருக்கலாம்.
உங்கள், வீட்டில் உள்ள சமையல் அறையில் இருக்கலாம். பட்டாசு ஆலையில் வேலை செய்பவராக இருக்கலாம். காஸ் அடுப்பு, போன்ற பொருட்கள் இருக்குமிடம். என நாம் இடத்திற்கு ஏற்ப தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.
(i) வீட்டில் என்றால், தேவை இல்லாத நேரத்தில், காஸ் சிலிண்டர்- யை OFF செய்து வைத்து கொள்ள வேண்டும்.
(ii) காஸ் சிலிண்டர் – யை நீங்கள் வாங்கும் போதே, சிலிண்டர் யை கொடுக்கும், ஆட்களிடம், நீங்கள் சிலிண்டர் யை, சரியாக உள்ளதா, என்று பார்த்து தர கூற வேண்டும்.
(iii) எண்ணெயில் பொரிக்கவும், டீ, காபி, போடும் போது, கவனமாக பார்த்து செய்ய வேண்டும்.
(iv) வீட்டில், விஷேச நாட்களில் கவனமாக பதட்டம் இல்லாமல், செய்வது சிறந்தது.
(V) பட்டாசுகள் வெடிக்கும் போது, பார்த்து கவனமாக யாரும் அருகில் இல்லாத நேரத்தில், வெடிக்க வேண்டும்.
(Vl) பண்டிகை நாளில் பட்டாசு வெடித்தால், அருகில் நீங்கள் நிற்பது தவிர்க்கவும்.மேலும் வெடிக்கும் நேரத்தில் பாதுகாப்பிற்காக அருகில் தண்ணீர் பிடித்து வைத்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க : சுயஇன்பம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா? Does Masturbation cause infertility
(2) தீக்காயம் ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் ?
காயம் ஏற்பட்டவுடன், நாம் உடனே சில விஷயங்கள் பார்த்து உடனே செய்ய வேண்டும். அப்போது தான் நாம் செய்வது சரியான முறையில் அமையும்.
A. STOP
B. REMOVE
C. COOL
D. COVER
(A) STOP என்பது என்ன ?
இந்த, STOP என்பது Stop Burning Process என்பது ஆகும். அதாவது தீக்காயம் ஏற்படும் போது, அந்த தீயை மேலும் பரவாமல் தடுக்க வேண்டும்.
தீக்காயம் மேலும் பரவாமல் தடுக்க, நீங்கள் அவர்கள் மேல் தண்ணீர் ஊற்றலாம். அல்லது கீழே படுத்து நன்றாக உருல சொல்லலாம். அல்லது நீங்கள் முதலில் பாதுகாப்பாக தயாராகி, கம்பளி போர்வைகள் இருந்தால், எடுத்து அவர்கள் மேல் போற்றி அனைக்கலாம்.
(B) REMOVE என்பது என்ன ?
காயம் ஏற்பட்ட இடத்தில், உள்ள துணிகள் அல்லது கை மற்றும் கால்களில் அணிந்துள்ள பொருள்களை கழற்றி விட வேண்டும்.
அப்படி, கழற்றும் போது, தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், காயமும், பொருள்களும் காயத்தின் தன்மையில் ஒட்டி கிடந்தால் நீங்கள் அந்த இடத்தில் கழட்ட வேண்டாம்.
அருகில், உள்ள மருத்துவரை அணுகி, அதை பாதுகாப்பாக கழற்றி அல்லது எடுத்து விடலாம். நீங்கள் எடுக்க முயற்சி செய்தால், அது தவறாக அமைய இல்லை மேலும் காயம் உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் உடனே முடிந்தவரை பாதிப்பு அதிகம் இல்லாத இடத்தில், நீங்கள் கழற்றி விட வேண்டும். அல்லது பொருள்களை நீக்கி விட வேண்டும்.
மேலும் படிக்க : Lungs Detox In Tamil | நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி ?
(C) COOL என்பது என்ன ?
தீயினால் காயம் ஏற்பட்ட இடத்தை நன்றாக தண்ணீரில் கழுவ வேண்டும். இல்லை என்றால் தண்ணீரில் தீக்காயம் ஏற்பட்ட இடத்தை 20 நிமிடம் வரை வைக்க வேண்டும்.
இந்த தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், எண்ணெய் வைப்பது, வெண்ணெய், மை, போன்ற பொருள்களை வைக்க கூடாது.
(D) COVER என்றால் என்ன ?
சுத்தப்படுத்திய கைகள், அல்லது காயம் ஏற்பட்ட இடத்தில், நன்றாக கழுவிய பிறகு, நீங்கள் அந்த இடத்தை தூசிகள் படாமல் மறைக்க வேண்டும். இதற்கு வாழ இலை வைத்து சுற்றலாம், இது சிறந்தது.
மேலும் படிக்க :மார்பு பகுதியில் வலி வந்தால் மாரடைப்புக்கான அறிகுறியா ? What is Heart Attack Symptoms in Tamil
மருத்துவரை அணுக வேண்டுமா ?
a) உங்களுக்கு ஏற்படும் காயம் எப்படி உள்ளது, என்று பார்த்து அணுகலாம். அதாவது, உங்களுக்கு காயம் ஆனது சிறிதாக, சாதாரணமாக இருந்தால், மருத்துவர் வரை அணுக அவசியம் இல்லை.
b) இதுவே, உங்கள் காயம் ஏற்பட்ட இடம், உள்ளே உள்ள தசைகள் தெரிவது போல, வெள்ளை நிறத்தில், அல்லது அதிகம் கருப்பு நிறத்தில், இருந்தால் அவசியம் மருத்துவர் சிகிச்சைக்காக சென்று பார்க்கவும்.
c) கொப்பளம் ஏற்பட்டு இருந்தால், அதனை நாமே உடைத்து விடுவது போன்ற செயல்கள் செய்வது தவறு. மேலும் இப்படி செய்தால் அதிக பாதிப்பு ஏற்படும்.
d) காயம் பெரிதாக, அல்லது ஆழமாக இருந்தால், மருத்துவர் சென்று பார்த்து விட வேண்டும்.
மேலும் படிக்க : 5 Best Foods For Motility and Sperm Count in Tamil | விந்தனுவுக்கு 5 உணவுகள்
தீக்காயம் ஏற்பட்டால் மருத்துவரை யார் முக்கியம் அணுக வேண்டும் ?
a) சர்க்கரை நோய் உள்ளவர்கள், மருத்துவர் சற்று சென்று அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
b) உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அணுகலாம்.
c) இதய நோய், மற்றும் உடல் சார்ந்த பிரச்சினை இருந்தால் மருத்துவர் அணுகலாம்.
d) குழந்தை அல்லது வயதானவர்கள் இருந்தால் மருத்துவர் வரை சென்று பார்த்து வருவது நன்மை அளிக்கும்.
e) கர்ப்பிணி பெண்கள் அணுகலாம்.
சிறிய அளவில் காயத்திற்கு மருத்துவர் அணுகலாமா ?
பாதிப்பு இல்லாத, சிறிய அளவில் காயம் இருந்தால், நீங்கள் மருத்துவர் சென்று அணுக தேவை இல்லை.
(a) நீங்கள் வீட்டில் இருந்து, பாராசிட்டமால்/ paracetamol எடுத்து கொள்ளலாம். சிறிதளவு எடுத்து கொண்டால் சற்று வலி குறையும்.
(b) Silver Sulfadiazine, Silver Nitrate Gel போன்றவைகள் வாங்கி பயன்படுத்தலாம். இதுவே போதுமானது. மேலும்
இது அனைத்தும் மருத்துவர் சென்று அணுகுவது இல்லை, சிறிய காயம் அதனால் வீட்டில் இருந்து சிகிச்சை எடுத்து கொள்வதும் சரி, நாம் முதலில் முதலுதவி சிகிச்சை என்பது முக்கியம்.
இதனால், முதலுதவி நாம் சொன்னது போல, பார்த்து படித்து தெரிந்து கொண்டு, இதன் படி செயல் பட்டு நல்ல முறையில் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பை வாழுங்கள். உங்கள் நலம் விரும்புவோர் பார்க்க இதை அனுப்பி பயன் ஆடைவீர்.
மேலும் படிக்க : விந்துவை அடக்கலாமா ? அடிக்கடி வெளியேற்றலாமா ?