உடல் எடையை அதிகரிப்பது எப்படி? How to gain Weight in Tamil

உடல் எடையை அதிகரிப்பது எப்படி? How to gain Weight in Tamil :

உடல் எடையை குறைக்க நினைக்கும் அளவுக்கு, ஒரு படி மேல் weight gain என்னும் உடல் எடையை அதிகரிக்க வேண்டும், என்று அனைவரும் நினைத்து ஒவ்வொருவரும் பலவித முயற்சிகள் செய்து வருகின்றனர்.

ஆனால், உடல் எடை குறைக்க, அல்லது அதிகரிக்க வேண்டும், என்றால் முறையான உணவு முறை, சரியான அளவில் தூக்கம், தேவையான உடற்பயிற்சி, என அனைத்தும் செய்து வர வேண்டும்.

இதனால், இந்த பதிவு மூலம், நீங்கள் எப்படி இயற்கையாக உங்கள் உடல் எடையை அதிகரிப்பது, என்று பார்க்கலாம் ! வாருங்கள்.

எடையில் இரண்டு விதமா ?

(A) கொழுப்பு அதிகரித்து எடை கூடுவது :

நாம் சரியான அளவில், முறையான உணவை எடுக்காமல் இருப்பதால், கொழுப்பு தன்மை அதிகம் ஆகி, நமது உடலில் கொழுப்புகள் தேங்க செய்கின்றன.

முறையான உணவு என்றால், ஆண்கள், பெண்கள், என இல்லாமல், அனைவரும் Protien சத்துக்கள் எனப்படும் புரத சத்து அதிகம் உட்கொள்ள வேண்டும்.

கொழுப்பு அதிகம் சேர்ந்து வருவதால், வயிறு பகுதியில் தொப்பை போட கூடும். தொப்பை போட்டு உடல் எடை அதிகரிப்பது என்பது சரியானது இல்லை. ஆரோக்கியமும் இல்லை.

மேலும் படிக்க : விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil

தினமும் எந்த அளவுக்கு புரத சத்து எடுத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்து, நமது உடலில் ஆரோக்கியம் மேம்படும்.

(B) தசை வளர்ச்சியால் எடை கூடுவது :

நமது உடலில் உள்ள தசைகள் வளர்ச்சி அடைவதால், உடல் எடை அதிகரிப்பது ஒரு சரியான, ஒரு நல்ல விஷயம் ஆகும்.

தசை வளர்ச்சியால் உடல் எடை அதிகரிப்பது எப்படி என்று உங்களுக்கு தொணலாம். புரத சத்து அதிகம் தினமும் எடுத்துக்கொண்டால், தசைகள் நன்கு இயற்கையாக வளர்ச்சி பெறும்.

இதனால், தசை அதிகரித்து, உடல் எடையில் முன்னேற்றம் காண்பது சரியான ஒன்று ஆகும்.

மேலும் படிக்க : Best 5 Drinks That Help You To Sleep Better | படுத்தவுடன் தூங்க என்ன செய்வது ?

நாம், மாவு சத்து எனப்படும் கார்போஹைட்ரேட் உணவு அதிகம் எடுத்து வருவதால், கொழுப்பு தான் அதிகம் நமது உடலில் போட செய்யும்.

உடல் எடையை குறைக்கவும் அல்லது அதிகரிக்கவும் உணவு என்பதே முதல் முக்கியமாக உள்ளது. இதனால் தான் பெரியவர்கள் உணவே மருந்து என்று கூறினார். இதனால், மாவு பொருள் தவிர்த்து புரத சத்து அதிகம் எடுத்து கொள்ளவும்.

புரதம் தினமும் எடுக்கும் அளவு என்ன ?

புரத சத்து உள்ள உணவை தினமும் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும், என்று நாம் இப்போதும் சரி, முந்தைய பதிவில், கூறும் போதும் சரி, நாம் கூறி இருப்போம்.

இதனால், புரதம் அனைவரும் ஒரே அளவு எடுக்க வேண்டுமா? இல்லை ஒவ்வொருவரும் எடுக்கும் அளவு மாறுமா? என்று அனைவருக்கும் சந்தேகம் வரலாம்.கண்டிப்பாக வரும்.

ஆம், புரதம் உணவு தினமும் அதிகம் உட்கொள்ள வேண்டும். அதாவது, உங்கள் உடல் எடையில் இருந்து, 2 மடங்கு அளவில் புரதம் எடுக்கும் அளவு, நமது உடலுக்கு கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

மேலும் படிக்க : Lungs Detox In Tamil | நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி ?

நம்மில், 100 பேர் இருந்தால், 95 பேர் மேல், இந்த புரத சத்து அதிகம் அல்லது தேவையான அளவு எடுத்துக்கொள்வதில்லை என்பதே ஆச்சர்யம் தரக்கூடிய விஷயம் ஆகும்.

உங்களுக்கு இன்னும் புரியும் படி கூற வேண்டும் என்றால்,உதாரணமாக உங்கள் உடல் எடை என்பது 60 கிலோ என இருந்தால், 60×2 = 120 கிராம் அளவில் புரத சத்து உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

இதுவே, 50 கிலோ என இருந்தால், 100 கிராம் புரத சத்து உணவாக எடுத்து கொள்ள வேண்டும். இப்படி செய்தால், ஆரோக்கியமாகவும், நமது புரத சத்துக்கள் பூர்த்தி அடைவதால் எளிமையாக உங்கள் உடல் எடையை அதிகரிக்க முடியும்.

அசைவ உணவில் கிடைக்கும் புரத சத்து:

i) முட்டை :

நீங்கள், அசைவ உணவு உண்பவராக இருந்தால், இல்லை பிடிக்கும் என்றால், முட்டை தினமும் எடுத்து கொள்வது அவசியம். பிராய்லர் கோழி முட்டை, அல்லது நாட்டு கோழி முட்டை, எதுவாக இருந்தாலும், நீங்கள் தினமும் 1 முட்டை உண்பதால், 6 கிராம் அளவில் புரதம் கிடைக்கும்.

6 கிராம் அளவில் புரதம், ஒரு முட்டையில், கிடைப்பதால், நீங்கள் தினமும் 5 முட்டை வரை வெவ்வேறு நேரங்களில், பிரித்து உண்ணலாம்.

5 முட்டை, உண்பதால், 30 கிராம் அளவில் புரதம் கிடைக்கும். நீங்கள் உடற்பயிற்சி, அல்லது ஏதேனும் உடல் உழைப்பு இருந்தால்,ஒரு நாளைக்கு 6-8 முட்டை வரை உண்ணலாம்.

ii) கோழி மற்றும் ஆட்டு கறி :

கோழி கறியும், அல்லது ஆட்டு கறி இறைச்சி உண்ணும் போது, 100 கிராம் கோழி கறி உண்டால், உங்களுக்கு 25 கிராம் அளவில் புரதம் சத்துக்கள் கிடைக்கும்.

ஆட்டு கறி இறைச்சி, 100 கிராம் அளவில் உண்டால், 20 கிராம் அளவில் புரதம் சத்துக்கள் கிடைக்கும். கோழி தினமும் நீங்கள் 100 கிராம் அளவில் உண்டால், கோழி நெஞ்சு கறி, என கேட்டு வாங்கி சமைத்து உண்டால், மேலும் சத்துக்கள் சற்று அதிகம் கிடைக்கும்.

மேலும் படிக்க : Top 10 Healthy Foods For Heart in Tamil | Prevent Heart Attack in Tamil

iii) மீன் :

மீன் வாரம் இரண்டு முறை அல்லது மூண்டு நாட்கள் கூட எடுத்து சமைத்து சாப்பிடலாம். மீன் உடலுக்கு அதிக புரத சத்து கொடுக்க கூடியது.

இந்த மீன் வாரம் முழுவதும் கூட சாப்பிடலாம். இதனால் முடிந்த அளவு வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது மீன் உண்ணுவது நல்லது.

சைவ உணவில் கிடைக்கும் புரத சத்து:

a) பனீர்

b) பீன்ஸ்

c) சோயா பீன்ஸ்

d) கிட்னி பீன்ஸ்

e) சோயா சங்ஸ்

f) பால்

g) பச்சை பயிறு

h) வேர்க்கடலை

i) முளைக்கட்டிய பயிருகள்

j) நெய்

இவை அனைத்தும், 100 கிராம் அளவில் எடுத்தால் போதும். இவை அனைத்தும் என்றால், அனைத்துமே தினம் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை.

நீங்கள், உணவு சத்துக்கள் அளவுகளை குறிப்பிடும், ஆப்/ APP அதிகம் உள்ளது. அதை வைத்து சத்துக்கள் அளவுகள் அளந்து, உங்கள் உடலுக்கு, உங்கள் உடல் எடைக்கு ஏற்ப இரண்டு மடங்கு புரதம் வரும் அளவில், மட்டும் கணக்கிட்டு எடுத்து கொள்ளலாம்.

மேலும் படிக்க : What is Crypto currency ? | கிருப்டோ கரன்சி என்றால் என்ன ? | Tamil

உடல் எடை அதிகரிக்க உதவும் பழங்கள் :

வாழைப்பழம் என்பது உடல் எடை அதிகரிக்க நல்ல ஒரு பழம் ஆகும். மேலும் பேரீச்சம்பழம் உண்பதால், நல்லது. இவை இரண்டும் தினமும் உண்பதால், உடல் எடை வெகுவாக அதிகரிப்பது கான முடியும்.

தினமும், ஒருவர் 2 முதல் 3 வாழைப்பழம் வரை சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்பவர்கள், தினமும் 5 முதல் 6 வாழைப்பழம் கூட சாப்பிடலாம்.

மேலும் நாளைக்கு 5 பேரிச்சம் பழம் சாப்பிட்டு முடிந்தால் பால் குடித்து வர, விரைவில் உடற் எடை கூடும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள் :

Junk foods என்று சொல்ல கூடிய, பொருள்களை உண்ண கூடாது. இந்த junk food, பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெயில் செய்த பொருள்கள், உண்பதால் உடல் எடை கூடலாம்.

அது ஆரோக்கியமான எடை கூடியதாக இருக்காது. ஏண் என்றால், நா சொன்னது போலவே கொழுப்பு அதிகம் சேர கூடும். இதனால் உடல் நலம் பாதிக்கபடும். இதனால் இந்த எண்ணெயில் செய்தது, பதப்படுத்த பட்ட உணவை தவிர்த்து விடுங்கள்.

இப்பொழுது நீங்கள், அதிக விஷயம் தெரிந்து இருப்பீர்கள். மேலும் மற்றவர்க்கு கூறுங்கள். ஆரோக்கியமாக உடல் எடையை அதிகரித்து, வாழுங்கள்.

மேலும் படிக்க : பாதாம் மற்றும் பிஸ்தா விட அதிக ஊட்டச்சத்து நிறைந்த விலை குறைவான உணவுகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *