பாதாம் மற்றும் பிஸ்தா விட அதிக ஊட்டச்சத்து நிறைந்த விலை குறைவான உணவுகள் :

பாதாம் மற்றும் பிஸ்தா விட அதிக ஊட்டச்சத்து நிறைந்த விலை குறைவான உணவுகள் :

வணக்கம், நம் மக்களுக்கு இருக்கும் அதிக முக்கியமான ஒரு பிரச்சினை என்றால் அது சரியான உணவு முறை இல்லாமல், ஊட்டச்சத்து குறைபாடு ஆகும். இந்த ஊட்டச்சத்து என்பது ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படையான ஒரு விஷயம் ஆகும்.

இதனால், முன்பை விட சற்று மக்கள் அனைவரும் என்ன உணவு எடுத்து கொள்ளலாம். என்று சிந்திக்க தொடங்கி விட்டனர். பலரும் உணவு தேர்ந்து எடுக்க நினைக்கும் போது, முக்கியமாக அனைவரும் சொல்வது, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, இப்படி சொல்கின்றனர்.

இந்த பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு வகைகள் அனைத்தும், விலை பொறுத்த வரை, சற்று அதிகமாக உள்ளது. இதனால், ஒரு சாமானிய மக்களுக்கு இது ஏற்ற வகையில் உணவாக இல்லை.

இதனால், இந்த பதிவு மூலம், பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, மற்றும் இது போன்ற விலை உயர்ந்த உணவுகள் இல்லாமல், சாதாரண மக்களும் வாங்கி உண்ணும் வகையில், ஊட்டச்சத்து கிடைக்கும் வகையான உள்ள உணவுகள் பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க.

(1) Kidney Beans / கிட்னி பீன்ஸ் :

இந்த கிட்னி பீன்ஸ் என்பது, அதிக புரத சத்து கொண்டது. சர்க்கரை அதிகம் உள்ளவர்கள் இதை உண்டு வரும் போது, உடலில் உள்ள சர்க்கரை அளவை வெகுவாக குறைகிறது.

கிட்னி பீன்ஸில், அதிக ஃபைபர் சத்துக்கள் உள்ளது. இதனால் நமது உடலுக்கு நன்மை அளிக்க கூடியது. மேலும் இதனால், நமது எலும்புகள் அதிகம் பலம் பெறும்.

மேலும் படிக்க : விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil

உங்களுக்கு எலும்புகள் சார்ந்த பிரச்சினை இருந்தால், கை கால்கள் வலி, மூட்டு வழிகள், போன்ற பிரச்சனை போன்றவை இருந்தால், இந்த பீன்ஸ் சாப்பிட்டு வர, குணமடையும். மேலும் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

கிட்னி பீன்ஸ் உண்ணும் முறை :

(a) வேக வைத்து உண்ணலாம்.

(b) கூட்டு, போன்று தக்காளி, வெங்காயம், பூண்டு, சேர்ந்து கூட்டு போன்று செய்து உண்ணலாம்.

(c) குழம்புகள், போன்றவை செய்யும் போதும் அதில் சேர்த்து சமைத்து உண்ணலாம்.

(2)  Ground Nut / வேர்க்கடலை :

வேர்க்கடலை, என்பது நமது தமிழர்கள் பாரம்பரிய உணவு ஆகும். காந்தி காலம் முதல், அரசர்கள் ஆண்ட காலத்தில் அதிகம் அரசர்கள் கூட இதை எடுத்து கொண்டார்கள். இந்த காலம் வரை நமது தமிழர்களின் பாரம்பரிய உணவு ஆகும்.

இந்த வேர்க்கடலை என்பது, அதிக அளவில் புரத சத்து கொண்டது. நாம் பாதாம் பருப்பு, அல்லது பிஸ்தா பருப்பு, என இந்த வகை விலை உயர்ந்த உணவுகளை விட, இரண்டு மடங்கு அதிகமாக சத்துக்கள் கொண்டது இந்த வேர்க்கடலை ஆகும்.

மேலும் படிக்க : உணவுக்கு பின் மலம் களிப்பீர்களா ? உப்புசத்தால் ஏற்படும் நோய்கள் என்ன ?

வேர்க்கடலை உண்ணும் முறை :

வேர்க்கடலை யை நாம், தினமும் காலை நேரத்தில், நமது கையில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அதனை உண்ணலாம். உதாரணமாக, இந்த வேர்க்கடலையை நாம் வேகவைத்து உண்ணலாம். வறுத்த வேர்க்கடலை உண்ணலாம். சாதாரணமாக கூட உண்ணலாம்.

தினமும் காலையில், ஒரு கைப்பிடி அளவு, இப்படி ஒரு முறையில் வேர்க்கடலை சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்தால் உடலில், அதிக மாற்றம் நிகழும். இதனால், வேர்க்கடலை விலை குறைவு, சத்துக்கள் அதிகம். இதனால் இதனை வாங்கி சத்துக்கள் பெறலாம்.

(3) Paneer / பனீர் :

பால் பனீர், என்று அழைக்கபடும், மாட்டு பாலில், இருந்து செய்த பனீர் ஆனது, மிகவும் புரத சத்துக்கள் கொண்டு இருக்கும். இந்த பனீர் வாங்கி உண்டு வந்தால் கூட நமக்கு அதிக அளவில் புரத சத்து கிடைக்கும்.

பனீர், என்பது உண்மையான மாட்டு பாலில் இருந்து செய்யப்படுகிறதா? என்று மட்டும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆவின் பால் நிலையம், போன்ற இடத்தில் இந்த பால் பனீர் கிடைக்கிறது.

உங்களுக்கு இது போல, பனீர் கிடைத்தால், வாங்கி உண்ணலாம். இது மிகவும் நமது உடலில் நன்மை அளிக்கும். பயன் பெறுங்கள்.

(4) Soya Paneer / சோயா பனீர் :

சோயா பனீர், என்பது மிக முக்கியமான புரத சத்து கொண்டது. இதனால் இந்த சோயா பனீர் எடுத்து காய்கறி, போல செய்து கூட்டு போல செய்து சாப்பிடலாம். இதனால் இதை வாங்கி பயன் பெறுங்கள்.

(5) கருப்பு கொண்டக்கடலை :

கருப்பு கொண்டைக்கடலை, எனது மிக விலை குறைந்த புரத சத்து பொருளில், இந்த கருப்பு கொண்டாக்கடலை முக்கியமானது. இதை தினமும், வேகவைத்து, அல்லது கூட்டு போல சமைத்து உண்ணலாம். அதிக விலை கொடுத்து வாங்கி உண்ணும் உணவுக்கு மத்தியில் இது ஒரு வர பிரசாதம்.

இதுபோல இந்த உணவுகள், ஒவ்வொன்றும் தினமும் காலை நேரத்தில், தினமும் நாம் பார்த்த உணவில், திங்கள் கிழமை ஒன்று எடுத்துக்கொண்டால், செய்வாய் கிழமை வேறு ஏதாவது உணவு எடுத்து கொள்ளலாம். இது போன்ற கட்டுரைகளை கொண்டு உண்டு வாருங்கள்.

மேலும் படிக்க : மார்பு பகுதியில் வலி வந்தால் மாரடைப்புக்கான அறிகுறியா ? What is Heart Attack Symptoms in Tamil

சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரை அளவில் மாற்றம் வரும். மருந்து எடுக்கும் அளவில் மாற்றம் காண்பீர்கள். உடல் பலம் பெறும். இது போன்ற பல மாற்றம் கொண்டு ஆரோக்கியமாக வாள வையை செய்யும். ஆரோக்கியமான முறையில் வாழ வாழ்த்துக்கள்.

Notes / குறிப்பு :

A) கிட்னி யில் பிராச்சனை இருப்பவர்கள் இதை சாப்பிட வேண்டாம்.

B) முக்கியமாக இரவு நேரத்தில் இந்த உணவுகள் யாரும் எடுத்து கொள்ள கூடவே கூடாது. அதிக புரத சத்து கொண்ட உணவுகள் அனைத்தும் இரவு நேரத்தில் உண்ண கூடாது.

C) புரதம் என்றாலும் ஒரு அளவுக்கு தாம், எதையும் அளவாக எடுத்து கொண்டால், நல்லது. இதனால் ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொள்ளலாம்.

இப்போது நாம் பார்த்த, தெரிந்து கொண்ட உணவுகள் அனைத்தும் பாதாம், பிஸ்தா பருப்பு விட விலை மிகவும் குறைந்த உணவுகள்.

மற்றும் சத்துக்கள் பொறுத்த வரையில், அதிக சத்துக்கள் கொண்டது. மேலும் நமது பாரம்பரிய உணவு. உண்டு ஆரோக்கியம் காண்க.

மேலும் படிக்க : சுயஇன்பம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா? Does Masturbation cause infertility

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *