Top 10 Calorie Foods to Gain Weight in Tamil

Top 10 Calorie Foods to Gain Weight in Tami

Weight Gain – செய்ய அதாவது உங்கள் உடம்பின் எடையை அதிக படுத்த வேண்டும் என்றால், இன்றளவும் பலருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. காரணம் நம் ஊரில் தற்போதய உணவு பழக்கம் ஒன்று , மற்றொன்று சரியான புரிதல், அல்லது சரியாக நம்மை guide செய்ய ஆள் இல்லை.

இந்த weight gain செய்ய gym செல்பவர்கள், gym செல்லாமல் இருப்பவர் என யாருக்கும் தெரிவது இல்லை. கவலை வேண்டாம். உங்கள் உடம்பில் weight யை எப்படி increase செய்வது என்பதை இந்த தொகுப்பு மூலம் முழுமையாக பார்க்கலாம் வாங்க.

Weight Gain செய்ய முக்கியமான அடிப்படை விசயம் :

Weight Gain செய்ய வேண்டும் என்றால் நாம் முதலில் நம்முடைய உணவின் Calorie யை மதிப்பிட வேண்டும்.நாம் தற்போது எடுக்கும் அளவை விட நாம் Gym செல்லும் போது, உடற்பயிற்சி செய்யும் போது, அதைவிட சற்று அதிக அளவில் எடுக்க வேண்டும்.

இப்படி normal Calorie food விட அதிக கலோரி அதிக அளவு எடுத்தால், நம்ம உடம்பு தானா ஏறும். இதுதான் weight gain செய்யும் முக்கிய secret ஆகும்.

Example / உதாரணம் :

Normal ஆக, நீங்கள் 2000 Calorie அளவில் normal ஆக உணவு எடுத்தால், உங்கள் உடம்பில் எந்த மாற்றமும் இல்லயெனில் உங்கள் weight அதிகம் ஆக வேண்டும் என்றால், 2500 calorie / கலோரி என்ற வீதம் தினமும் சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் உங்கள் உடம்பில் நல்ல மாற்றம் மற்றும் உங்கள் weight அதிகம் ஆகும். இப்போது ஒவ்வொரு கலோரி உணவும் பார்க்கலாமா வாங்க.

மேலும் படிக்க : விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamilவிந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil

1 : Milk / பால் :

பால் என்பது மிக மிக அவசியம், எல்லாருக்கும் பால் என்பதில் அதிக சத்து இருப்பதால், நல்லது. எனவே எனக்கு பால் பிடிக்காது என்று சிலர் சொல்வர், அப்படி சொல்லாமல் பால் தினமும் அருந்துவது நல்லது.

மேலும் இந்த பாலில், புரத சத்து,calcium சத்து, கலோரியும் அதிகம். ஆக உங்க calorie food க்கு இது எடுத்து கொள்ளலாம்.

500 ml பால் எடுத்துக்கொள்வதால் நமக்கு, Calories – 200 கிராம், மற்றும் Protein 15 Gram கிடைக்கும்.

2 : Paneer / பனீர் :

பனீர் இல் அதிக அளவில் சத்து உங்களுக்கு கிடைக்கும். அதிக சத்துக்கள் நிறைந்தது உள்ளது.நீங்கள் அதிக கலோரி உணவை எடுத்து கொள்ள தினமும் பனீர் யை 100 கிராம் அளவில் எடுத்து கொள்ளுங்கள்.

நீங்கள் தினமும் 100 கிராம் அளவில் பனீர் எடுத்து கொள்ளும்போது உங்களுக்கு இதில் இருந்து, 338 Calorie- யும், 20 கிராம் அளவில் Protein எனப்படும் புரத சத்தும் கிடைக்கும்.இதனால் தினமும் 100 கிராம் பனீர் எடுத்துக்கொள்ளுங்கள்.

3 : Egg / முட்டை :

முட்டை என்பது மிக முக்கியமான ஒரு விசயம், இதை நீங்கள் தினமும் உணவில் எடுத்துகொள்ள வேண்டும். அல்லது தினமும் தனியாக கூட சாப்பிடலாம். One whole Egg எனப்படும் ஒரு முழு முட்டை- யை நீங்கள் உண்பதால் உங்களுக்கு 65-70 calorie வரை கிடைக்கும்.

இந்த 65-70 கிராம் கலோரி மற்றும் இதில் 6 கிராம் Protein கிடைக்கும்.இதன் மூலம் நீங்கள் 6-8 முட்டை தினமும் எடுக்கலாம். இப்படி 8 முட்டை தினமும் எடுத்துக்கொண்டால், நமக்கு 560 கலோரியும், 48 கிராம் Protein உம் கிடைக்கும்.இதனால் தினமும் 6-8 முழு முட்டை சாப்பிடுங்கள்.

மேலும் படிக்க : உணவுக்கு பின் மலம் களிப்பீர்களா ? உப்புசத்தால் ஏற்படும் நோய்கள் என்ன ?

4 : Oats / ஓட்ஸ் :

ஓட்ஸ் நீங்க 100 கிராம் எடுத்தா அதுல உங்களுக்கு 350 கலோரி கிடைக்குது. இது இல்லாம பாத்தீங்கன்னா உங்களுக்கு 10 கிராம் புரோட்டின் கிடைக்கிறது. ஓட்ஸ் சாப்பிடறப்ப பலபேரு இப்படி சாப்பிடணும் அப்படி சாப்பிடணும் அப்படின்னு சொல்லி ரொம்ப டைம் எடுத்து ஃபாலோ பண்ண மாட்டாங்க, இப்படி நீங்க கஷ்டப்பட்டு செய்து தினமும் oats சாப்பிட தேவையில்லை.

நீங்க அதிக கலோரி எடுக்க அதற்கு ஓட்ஸ் கண்டிப்பா எடுத்துக்கலாம். இதன் மூலம் நீங்க ஓட்ஸில் கிடைக்கிற கலோரியை விட இன்னும் அதிகமாக அந்த ஓட்டலை கிடைக்கும். அப்படினா நீங்க என்ன பண்ணலாம் அப்படின்னா நீங்க ஓட்ஸ் 100 கிராம், பேரிச்சம்பழம் 10, இது இல்லாம ஒரு Banana மூன்றையும் சேர்த்து மிக்சி யிள் போட்டு அரைத்து சாப்பிடலாம். உங்களுக்கு நல்ல ஒரு கலோரி இதிலிருந்து கிடைக்கும்.

இது இல்லாம உங்களுக்கு இதில் உடம்பு நல்லா Mass ஆக குடுக்குறதுக்கு Use ஆகுது. அதனால நீங்க டெய்லி ஓட்ஸ் 100 கிராம் ஒரு வாழைப்பழம் 10 பேரிச்சம் பழம் சேர்த்து மிக்ஸியில் அடித்து சாப்பிடுங்க உடம்புக்கு அதிக கலோரி கிடைக்கும். அதுனால மறக்காம ஓட்ஸ் தினமும் எடுத்துக்கோங்க.

5 : Dates / பேரிச்சம்பழம் :

பேரிச்சம் பழத்தில் அதிக இரும்பு சக்து உள்ளதால், நமது உணவில் தினமும் பேரிச்சம் பழம் இருக்க வேண்டும். இது இல்லாமல் இன்னும் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. தினம் 100 கிராம் பேரிச்சம் பழம் எடுத்து கொண்டால் நமக்கு அதில் இருந்து 282 Calorie கிடைக்கும்.

மேலும் இந்த பேரிச்சம் பழம் இரும்பு சக்தி உள்ளதால், ஆண்கள் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சாப்பிடலாம்.அதிக கலோரி கிடைக்கும்.100 கிறாமில் 282 calorie கிடைக்கும்.

6 : kidney Beans / கிட்னி பீன்ஸ் :

Kidney Beans எடுத்து கொள்வதால் உங்களுக்கு அதிக அளவு கலோரி கிடைக்கும். நீங்கள் அதிக அளவு கலோரி தினமும் எடுத்து கொள்ள வேண்டும் என்றால், இந்த kidney Beans என்பது உங்களுக்கு நல்ல கலோரி- யை கொடுக்கும்.

இதனால் இந்த kidney Beans யை தினமும் எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் 100 கிராம் அளவில் இந்த kidney Beans எடுத்து கொண்டால், அதில் இருந்து நீங்கள் 333 calori- யும், 24 கிராம் Protein உம் கிடைக்கின்றது.

இதனால் இந்த kidney Beans யை தினமும் 100 கிராம் வீதம் உண்டு வாருங்கள். உங்களுக்கு 333 கலோரியும், 24 கிராம் Protein என்னும் புரத சத்தும் கிடைக்கும். எனவே நீங்கள் தினமும் உண்டு வாருங்கள்.

மேலும் படிக்க : Brain Detox in Tamil | மூளை கழிவுகளை சுத்தப்படுத்துவது எப்படி ?

7 : Cheese / பாலாடைக்கட்டி :

பால் போலவே பாலாடை கட்டி என்பது அதிகம் உடம்புக்கு நல்லது.இந்த Cheese ஆனது நாம் கலோரி உணவு எடுத்து கொள்ள, இது யேற்ற உணவாகும். இந்த cheese யை நீங்கள் தினமும் எடுத்து கொள்ளலாம்.

நீங்கள் Gym செல்பவர் ஆனால் இதை நீங்கள் கலோரி உணவாக உட்கொள்ளும் போது நல்ல மாற்றம் அளிக்கும். இதுமட்டுமல்லாமல் Gym செல்லவில்லை என்றாலும் நீங்கள் உங்கள் தினமும் எடுக்கும் அதிக கலோரி உணவுக்கு இது உங்களுக்கு அதிக கலோரி கிடைக்கும்.

100 கிராம் அளவு cheese எடுத்து கொண்டால், உங்களுக்கு இந்த cheese இல் இருந்து, 400 கிராம் கலோரி ,மற்றும் 25 கிராம் Protein சக்துக்கள் கிடைக்கும். இதனால் நீங்கள் தினமும் உங்கள் தினசரி உணவில் களோரிக்கு இதை இந்த Cheese யை எடுத்து கொள்ளலாம்.

8 : Almond / பாதாம் பருப்பு :

Almond எனப்படும் இந்த பாதாம் பருப்பு நீங்கள் தினமும் உண்டு வரலாம். இதில் அதிக அளவு கலோரி மற்றும் Protein சக்துக்கள் உள்ளன. இந்த பாதாம் பருப்பு மூலம் ,நாம் உண்பதன் மூலம் நமக்கு உடம்புக்கு பல வித நன்மைகள் கிடைக்கின்றன.

இந்த பாதாம் ஆனது, நமக்கு முடிக்கு, ஆண்மைக்கு, என்று இது இல்லாமல் பல நன்மை உண்டாகும். இதனால் தினமும் இந்த பாதாம் பருப்பு எடுத்து வந்தால் உடம்புக்கு அதிகம் நன்மை அளிக்கின்றது.

இந்த Almond எனப்படும் இந்த பாதாம் பருப்பு தினமும் 100 கிராம் அளவில் எடுத்து வந்தால் நமக்கு இதில் இருந்து 560 கலோரியும், 21 கிராம் Protein- ம் கிடைக்கின்றது.

Almond யை சாதரணமாக 5 அல்லது 6 almond யை இரவில் ஊற வைத்து காலையில் எழுந்து, உண்டு வந்தால் கூட அதிக பயன் தரும். 100 கிராம் அளவில் எடுத்து வந்தால் 560 கலோரி – ம், 21 கிராம் Protein உம் கிடைக்கும்.

9 : Peanut / வேர் கடலை :

வேர் கடலை என்பது மிக மிக குறைவான விலையில், அதிக அளவில் சத்துக்கள் நிறைந்து உள்ளது. இதில் குறைவான விலையில் அதிக கலோரி கிடைக்கும்.

நீங்கள் அதிகம் தினமும் கலோரி உணவு எடுத்து கொள்ள, கண்டிப்பாக இந்த வேர் கடலை எடுத்து கொள்ளலாம். நீங்கள் இந்த வேர் கடலையை தினம் ஒரு முறை 100 கிராம் அளவில் எடுத்து கொள்ளலாம்.

தினம் 100 கிராம் அளவில் இந்த வேர் கடலை சாப்பிட்டு வந்தால், உங்களுக்கு இதில் இருந்து கிடைக்கும் சத்து ஆனது 100 கிராம் peanut இல் 565 கலோரியும், 25 கிராம் Protein- ம் கிடைக்கின்றது. எனவே இதனால தினமும் நீங்க இந்த peanut எனப்படும் நிலக்கடலையை சாப்பிட்டு வாருங்கள். அதிக கலோரி மற்றும் Protein யை எடுத்துக்கொள்ளுங்கள்.இதை நீங்கள் peanut butter ஆகவும் எடுத்து கொள்ளலாம்.

10 : Butter / வெண்ணெய் :

BUTTER எனப்படும் இந்த வெண்ணெய் யை, நீங்கள் தினமும் எடுத்து கொள்ளலாம். High calorie food என எடுக்கும் போது இது உங்களுக்கு நல்ல முறையில் பயன் அளிக்கும். ஆனால் இந்த Butter யை அதிகம் அதாவது 100 கிராம் அளவில் எடுக்க வேண்டாம்.

100 கிராம் அளவில் தினமும் butter  எடுத்தால் நமக்கு அதிக கலோரி கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில் அதிக Fat எனப்படும் கொழுப்பு 70 கிராம் அளவில் fat சேரும்.இதனை தடுக்க 50 கிராம் அளவில் எடுத்து கொள்ளலாம்.

மேலும் படிக்க : 5 Best Foods For Motility and Sperm Count in Tamil | விந்தனுவுக்கு 5 உணவுகள்

இப்படி எடுத்தால் நல்லது .கூடவே உங்களுக்கு இதில் கிடைக்கும் சத்து ஆனது, 330 கலோரி யும் கிடைக்கும்.இதனால் நீங்கள் இந்த Butter யை தினம் ஒரு 40 முதல் 50 கிராம் க்கு குறைவாக எடுத்து கொள்ளலாம்.

இந்த Article மூலம் நீங்கள், இதனை வருடம் என்ன சாப்பிடலாம் , யாரிடம் கேட்பது என்று பெரிய கேள்வியாக இருந்து இருக்கலாம். இதை உங்களுக்கு தீர்த்து வைக்கும் விதமாக , உங்களிடம் எடுத்து வந்து சேர்த்து உள்ளோம்.

இதன் படி, இந்த பதிவில் சொன்னது போல் , Top 10 calorie Gain foods பற்றி தெரிந்து கொண்டோம். இதன் படி கற்றுக்கொண்டது போல அந்த அந்த கலோரி உணவை, அந்த அந்த அளவில் எடுத்து தினமும் உண்டு வாருங்கள். நல்ல ஒரு மனதும், நல்ல ஒரு ஆரோக்கியமும், நல்ல ஒரு வாழ்வும் கிடைக்க வாழ்த்தி இந்த பதிவில் இருந்து விடை பெறுகிறேன்.

மேலும் நமது இந்த பக்கத்தில் பல பல மக்களுக்கு எளிதில் வந்து சேரும் படி, புரியும் வகையில் பல விசயங்களை எடுத்து வருகிறோம். எடுத்து வருவோம். பார்த்து பயன் பெறுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் அனுப்பி பயன் பெற செய்யுங்கள்.

மேலும் படிக்க : How to save our life from Heart Attack in Tamil | மாரடைப்பின் போது நமது உயிரை காப்பாற்றுவது எப்படி ?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *