மார்பு பகுதியில் வலி வந்தால் மாரடைப்புக்கான அறிகுறியா ? What is Heart Attack Symptoms in Tamil

மார்பு பகுதியில் வலி வந்தால் மாரடைப்புக்கான அறிகுறியா ? What is Heart Attack Symptoms in Tamil

வணக்கம், மாரடைப்பு என்பது இன்று 100 பேர் இருந்தால், அதில் வயது வரம்பு என்று ஒன்று இல்லாமல் 50 பேர்- க்கு மேல் வருகின்றது. காரணம் சரியான உணவு பழக்கம் இல்லாத காரணமும், இயற்கையான உணவு முறைகள் தவிர்ப்பதும், சரியான உடற்பயிற்சி, அல்லது உடல் உழைப்பு இல்லாத காரணத்தினாலும் ஏற்படுகிறது.

இப்போது இந்த 100 பேர் என இல்லாமல், உலகம் முழுவதும் வாழும் அனைத்து மொழி பேசும் மனிதருக்கும் அதிக சந்தேகம் என்ன என்றால், இந்த மாரடைப்பு பற்றிய சந்தேகம் தான். அது என்ன என்றால், மார்பு பகுதியில் வலி வந்தால் அது மாரடைப்புக்கான அறிகுறியா? இல்லை சாதாரண வலியா? என்று அனைவருக்கும் உள்ள சந்தேகம், மற்றும் ஒரு பயம்.

இப்போது எனவே இதன் மூலம் நீங்கள் மார்பு பகுதியில் வலி வந்தால் மாரடைப்புக்கான அறிகுறியா? இல்லை அப்படி மாரடைப்பு என்றால், எப்படி வலி வரும். சாதாரண வலி வந்தால் எப்படி தெரிந்து கொள்ள முடியும் என்று அனைத்தையும் இதில், படித்து தெரிந்துகொள்ள போகிறோம். வாங்க பார்க்கலாம்.பார்த்து அனைவருக்கும் இதை பகிருங்கள்.

மாரடைப்பு வந்தால் நமது உடலில் எங்கு வலி வரலாம் :

மாரடைப்பு என்பது வந்தால், பொதுவாக அனைவருக்கும் தெரிந்த விசயம் நமது இதயம் இடது பக்கம் வலி வரும் என்பது. ஆனால் அது அப்படி மட்டும் வருவது இல்லை. அப்படி இடது புறம் மட்டும் வராமல், வேறு எங்கு எங்கு வலி வரலாம், என்பது பார்ப்போம்.

a) நமது மார்பு இடது பகுதியில் கடுமையான வலி வரலாம்.

b) நமது தொண்டைக்கு பகுதிக்கு கீழே கடுமையாக வலி வரலாம்.

c) நமது மார்பு இடது புறம் வலி வந்து, வலது புறம் மார்பு பகுதியில் கூட கடுமையாக வரலாம்.

d) வயிறு பகுதியில் தொப்புள் பகுதிக்கு மேலே, ஆரம்பித்து வலி வரலாம்.

e) நமது மார்பு பகுதியில் வலி வர ஆரம்பித்து, அந்த வலி ஆனது இடது புறம் Shoulder என்னும் தோள்பட்டை பகுதியில் அதிகம் கடுமையாக வலி வரலாம்.

f) மார்பு பகுதியில் வலி வந்து, நமது மார்பு பின்புறம் முதுகு பகுதியில் கூட வலி வரலாம்.

மேலும் படிக்க : உணவுக்கு பின் மலம் களிப்பீர்களா ? உப்புசத்தால் ஏற்படும் நோய்கள் என்ன ?

இப்படி, வரும் வலி ஆனது அதிக அளவில் வலிக்கும். மற்றும் தொடர்ச்சியாக 5-15 நிமிடம் வரை கூட வலிக்கும். சிலருக்கு உடனே வலி வந்து, உடனே sudden ஆக, வலி நின்று விடும். சிலருக்கு நமக்கு மாராப்பு அறிகுறி வந்தது என்று கூட சிலருக்கு தெரியாமல் போய் விடும்.

ஏண் என்றால், நாம் சொன்னது போல, சிலருக்கு ஒவ்வொரு இடத்தில் மாரடைப்பு வலி என்பது வரலாம். அல்லது ஒரு மனிதராக இருந்தால், சிலருக்கு தோள்பட்டையில் வலி, நெஞ்சு பகுதி வலி, வயிறு பகுதியில் வலி, என வருவது தான். அதற்கென உடனே மாரடைப்பு வலி என்றோ, மாரடைப்பு என்றோ, பயந்து விட தேவை இல்லை.

மாரடைப்பு அறிகுறியாக இருந்தால் உடனே என்ன செய்யலாம் :

மாரடைப்பு அறிகுறி என நாம் சொன்னதில் சில வந்தால், அது சில நிமிடம் அல்லது சில வினாடி என விகிதத்தில் வலி வந்தால், அது மாரடைப்பு அறிகுறியா ? என்று மேற்கொண்டு பயப்படாமல் நீங்கள் உங்களுக்கு அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு மருத்துவரை நேரில் சென்று சந்திக்கவும்.

அந்த Doctor/ மருத்துவர், உங்களுக்கு எல்லாருக்கும் மருத்துவர் கூறும் ECG என்னும் டெஸ்ட் முதலில் செய்து பார்ப்பார்கள். அதில் நமக்கு மாரடைப்பு ஏற்படும், அல்லது ஏற்பட்ட அறிகுறி இருக்கிறதா? என்று பார்ப்பார்கள்.

சில நேரங்களில் மாரடைப்பு அறிகுறியா ? என்று நாம் மருத்துவர் சிகிச்சைக்காக சென்று பார்க்கும் போது, ECG Test மூலம் பார்த்தபோது கூட மாரடைப்பு இல்லாத வாரு காண்பிக்கலாம். அதற்கு காரணம் என்ன என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க : விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil

மாரடைப்பு வலி ஏற்பட்டு ஆனால் மாரடைப்பு இல்லை என சில தேரம் Result வர காரணம் என்ன ?

பொதுவாக மாரடைப்பு ஏற்பட்டு ஆனால் அது மாரடைப்பு வலி இல்லை என்று சில நேரத்தில், Result வரலாம். காரணம் என்ன என்றால், நமது இதயத்தில் இரத்தம் செல்லும் குழாய்கள் 3 குழாய்கள் வழியாக செல்கின்றது. இதில் குழாய் வழியாக ஆக்சிஜன் ஆனது செல்கின்றது.

இந்த ஆக்சிஜன் மற்றும் இரத்தம் ஆனது இதயத்தில் சென்று கொண்டு இருக்கும் போது தான், நமது இதயம் துடிப்பு முறையாக நடக்கும். இதில் சரியாக ஆக்சிஜன் சரியாக செல்லாமல் இருக்கும் போது, நமது இதயத்தில் இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால்,

நமது ஆக்சிஜன் ஆனது ஒழுங்கான முறையில் செல்லாமல், இரத்தம் ஆனது இதயத்தில் ஒழுங்கான முறையில் செல்லாமல், அந்த அடைப்பு பகுதியில் தடை பட்டு நின்றால் உடனே ஹார்ட் அட்டாக், என்னும் மாரடைப்பு ஏற்படுகின்றது.

இந்த மாரைப்பு வலி சில நேரம் ஏன் ECG Test மூலம் தெரிவதில்லை :

நமது உடலில் இதயத்தில் இரத்தம் மற்றும் ஆக்சிஜன் செல்லும் குழாயில், அடைப்பு ஏற்பட்டு இருந்தால், நாம் சில நேரம் normal ஆக, எந்த செயல்பாடும் இல்லாமல் இருக்கும் போது, சில நேரம் எதுவும் செய்யாமல் இருக்கலாம்.ஆனால் நாம் நடக்கும் போது, அல்லது உடற்பயிற்சி, அல்லது அதிக அளவு உடல் உழைப்பு இருக்கும் போது, நமது இதயத்தில் துடிப்பு அதிகமாக இருக்கும்.

இப்படி நம் செயலுக்கு ஏற்றவாறு சற்று இதய துடிப்பு மாறுபடும். உடல் உழைப்பு இல்லாத நேரத்தில் சாதாரணமாக மற்றும் உடல் உழைப்பு இருக்கும் போது கொஞ்சம் அதற்கு ஏற்றவாறு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இதனால் அதிகமான இரத்தம் ஆனது ஆக்சிஜன் மூலம் இதய இரத்த குழாயில் செல்லும்.

இப்போது அப்படி இருக்கும் போது, சாதரணமாக இருக்கும், இதய இரத்த குழாயில் அடைப்பு இல்லாதவர்க்கு வேகமாக இதயம் துடிக்கும் போது,வேகமாக செல்லும். ஆனால் இந்த இதய இரத்த குழாயில் அடைப்பு உள்ளவர்களுக்கு அதிக துடிப்புக்கு ஏற்றவாறு அடைப்பு உள்ளவர்களுக்கு  இரத்த செல்கள் ஆனது செல்லாமல் தடைபடும். இதனால் உடனே மாரடைப்பு ஒவ்வொருவருக்கும் ஒரு மாறி மாரடைப்பு ஏற்படும்.

சிலருக்கு இந்த மாரடைப்பு லேசாக, சிலருக்கு அதிக வலியுடனும், லேசாக வந்தால், 1-2 நிமிடம் கூட வரலாம். அதிக மாரடைப்பு என்றால், 10-15 நிமிடம் கூட இருக்கும். இதில் லேசாக வந்தவர்களுக்கு நீங்கள் மருத்துவர் சிகிச்சைக்காக சென்று ECG Test எடுத்து பார்க்கும் போது நீங்கள் சற்று அமைதி நிலை எடுத்து இருப்பீர்கள்.

அப்போது நீங்கள் ECG Test எடுத்து பார்க்கும் போது, உங்கள் உடல் உழைப்பு இல்லாத நேரமாக இருப்பதால், உங்கள் இதய இரத்த குழாயில் அடைப்பு இருந்தாலும் அந்த நேரத்தில் இரத்தம் ஆனது ஆக்சிஜன் உடன் சென்று கொண்டு இருக்கும். இதனால் ECG Test எடுத்து பார்க்கும் போது சற்று Normal ஆக இருக்கும்.

மேலும் படிக்க : Kidney Failure Symptoms In Tamil – சிறுநீரக பாதிப்புக்கான 10 அறிகுறிகள்

ஆஞ்சியோ சிகிச்சை என்றால் என்ன ?

நமது இதயத்தில் இரத்த குழாயில் ஏதேனும் ஒரு இடத்தில், அல்லது கூடுதலாக 2 இடங்கள், அல்லது 3 இடங்கள் என்ற இடத்தில், இதய இரத்த குழாயில் அடைப்பு இருந்தால், அதற்கு ஆஞ்சியோ என்னும் சிகிச்சை அளிப்பார்கள். இந்த என்பது இதய இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ள இடத்தை கண்டறிந்து அந்த இடத்தில், சிறு கருவியை வைத்து அந்த அடைப்பை நீக்கி விடுவதாகவும்.

இதனால் 2,3 இடத்தில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால், அதை இப்படி செய்து மருத்துவர்கள் அந்த அடைப்பை நீக்குவார்கள். இதனால் பழைய நிலைமைக்கு அடைப்பு ஏற்பட்டு இருந்த இரத்த குழாய் அடைப்பு நீங்க செய்து பழைய நிலையில் இரத்தம் மற்றும் ஆக்சிஜன் ஆனது சீராக செல்லும்.

பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது என்ன ?

இந்த பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது என்ன என்றால், இந்த அஞ்ஜியோ அறுவை சிகிச்சை போல இல்லை. இது நேரடியாக இதய நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு, அதிக இடத்தில் அடைப்பு இருக்கும். அதாவது இதய இரத்த குழாயில் அடைப்பு ஆனது அதிக  இடத்தில், 4 முதல் 6 அல்லது 8 இடம் என அதிக அளவு இடத்தில் அடைப்பு இருக்கும்.

இப்படி அடைப்பு ஏற்பட்டு இருப்பவர்களுக்கு ஆஞ்சியோ போல இல்லாமல், நேரடியாக நெஞ்சு பகுதி வழியாக சற்று தேவையான அளவு சற்று திறந்து, அதில் இதயத்தில் எத்தனை இடத்தில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதோ அந்த இடத்தில், இதயத்தில் சரியாக அந்த அந்த இடத்தில் துலை போட்டு அந்த அடைப்பை சரி செய்வார்கள். இது பைபாஸ் அறுவை சிகிச்சை என்று கூறுவர்.

இதன் மூலம் நீங்கள் பல விசயம் தெரிந்து இருப்பீர்கள், இதன் படி நீங்கள் தொடர்ந்து 10 முதல் 15 நிமிடம் வரை நாம் சொன்ன பகுதியில், அல்லது மார்பு பகுதியில் வலி ஏற்பட்டு இருந்தால், உடனே மருத்துவர் சிகிச்சைக்காக சென்று பார்க்கவும். ECG Test எடுத்து பார்க்கவும்.

இல்லை சற்று நேரம் மட்டும் இருந்தால், உடனே நீங்கள் உடனே ஏதாவது ஒரு செயல்கள் செய்து பார்க்கலாம். உதாரணமாக நடை, சற்று நடந்து பார்க்கலாம். இப்போது சற்று அதே போல வந்தால், உடனே நீங்கள் மருத்துவர் சென்று பார்த்து ECG Test பார்ப்பது நல்லது. இதில் எதுவும் இல்லை என்று சொன்னால் மிகவும் நல்லது. ஆனால் சற்று மாரடைப்பு வலி தான், என்று சொன்னால், அதற்கு ஏற்ப சிகிச்சை மேற்கொள்ளலாம்.

மேலும் படிக்க : How to Collect Semen For Sperm Test | Tamil

Q&A / வினா &விடை :

A) மார்பு பகுதியில் வலி வந்தாலே அது மாரடைப்பு வலிதானா ?

விடை : இல்லை, நமது மார்பு பகுதியில் எலும்பு, தசை, நுரையீரல், என அருகில் உள்ள பாகமும் உள்ளது. இதனால் அங்கு வலி வந்தாலே உடனே மாரடைப்பு வலி என்று அர்த்தம் இல்லை.

B) தொடர்ந்து மார்பகத்தில் வலி வந்தால், அது மாரடைப்பு வலியா ?

விடை : கண்டிப்பாக மாரடைப்பு ஏற்படும் வலியாக இருக்க தான் அதிக வாய்ப்பு.

C) மாரடைப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

விடை : தினமும் உடற்பயிற்சி, நல்ல முறையில் இயற்கையான உணவு உண்ணுதல், வெளியில் உண்பதை தவிர்த்தல், பாமாயில் போன்றவற்றை தவிர்த்தல், நல்ல என்னை பயன் படுத்துங்கள், முடிந்தால் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள்.அதிக கொழுப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டும். நல்ல முறையில் இயற்கையான முறையில் தூக்கம் தினமும் 7-8 மணி நேரம் தூங்கவும்.

இப்படி செய்து வந்தால், நீங்கள் ஆரோக்கியமும் நல்ல வாழ்வும் பெற்று வாழ முடியும். அனைவருக்கும் நன்றிகள்.

மேலும் படிக்க : Lungs Detox In Tamil | நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி ?

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *