- இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுகள் | Blood Purifying Foods in Tamil :
- 1) Turmeric/மஞ்சள்:
- 2) Beetroot/பீட்ரூட்:
- 3) Lemon/எலுமிச்சை:
- 4) Coriander Leaves/ கொத்தமல்லி இலை:
- 5) Cruciferous Vegetables/ பிரக்கோலி, காலிஃப்ளவர், முட்டைகோஸ்:
- 6) Garlic/ பூண்டு:
- 7) Carrot/ கேரட்:
- 8) Hibiscus flower/ செம்பருத்தி பூ:
- 9) Hot water/ சுடு தண்ணீர்:
- 10) Jaggery/ ஜாகரி:
இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுகள் | Blood Purifying Foods in Tamil :
வணக்கம், blood purifying Foods, நமது உடலில் இரத்தம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உடம்பில் இரத்தம் எந்த அளவுக்கு தூய்மையாக உள்ளதோ,
அந்த அளவுக்கு உடல் ஆரோக்கியம் சரியானதாக இருக்கும். உடலில் நமது இரத்தத்தில், எந்தவித நோய்களும் எளிதில் வரவே வராது.
இரத்தம் தான் நமது உடலின் ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் உள்ளடக்குகிறது என்று கூறலாம். இன்று நமது தீய பழக்கங்களாலும்,
புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களாலும், உணவு முறை மாற்றத்தினாலும், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்ட உணவுகள்,
இரசாயன மருந்து தெளிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல், போன்று பல காரணங்களால் இன்று பலருக்கும் இரத்தமானது அசுத்தமாகி,
தோல்வியாதி போன்றவையெல்லாம் ஆரம்பித்து, பிறகு உடம்பில் பல நச்சு கிருமிகளை உண்டாக்கி, பல நோய்கள் உருவாக காரணமாக அமைகிறது.
ரத்தத்தில் டாக்ஸின் எனும் கழிவுகள் அதிகமாகிக் கொண்டே செல்லும். இது இதயநோய் மற்றும் பல உறுப்புகளுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
நோயாகவும், புற்று நோயாகவும் ரத்த புற்று நோயாகும் என்று கூறிக்கொண்டே போகலாம். இதனால் நாம் நமது இரத்தத்தை இயற்கையாகவே நமது உணவின் மூலம் சுத்தம் செய்ய முடியும்.
அது, என்னென்ன உணவுகள், எப்படி சுத்தம் செய்வது, என்பது பற்றி இதில் பார்க்க போகிறோம். இதனால்,
இதனை முழுவதும் பார்த்து படித்து தெரிந்துகொண்டு,உங்கள் உடலில் உள்ள கெட்ட ரத்தத்தை சுத்தம் செய்து, நல்ல ஒரு வாழ்க்கையை பெறுங்கள்.
மேலும், உங்கள் குடும்ப நபர்கள், உங்கள் உறவினர்கள், உங்கள் நண்பர்கள் என அனைவரும் நீண்ட ஆயுளுடன் வாழ,
ஆரோக்கியத்துடன் வாழ, முடிந்தால் இந்த பதிப்பை அவர்களும் காணச் செய்யுங்கள் வாங்க பார்க்கலாம்.
மேலும் படிக்க: கார் இன்சூரன்ஸ் பாலிசி வகைகள் | Types of car insurance policy in Tamil
1) Turmeric/மஞ்சள்:
மஞ்சளில் இயற்கையாகவே கிருமிகளை அழிக்க கூடிய ஆற்றல் உள்ளது. மஞ்சளில் Curcumin/குர்குமின் என கூடிய,
மிக சக்திவாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் என்பது உள்ளது. இதனால் ரத்தத்தில் உள்ள கெட்ட விஷயங்களை அழித்து,
இரத்தத்தை சுத்தம் செய்ய மிகவும், இது வல்லமை வாய்ந்ததாக உள்ளது. இந்த மஞ்சள் இரத்த சிவப்பணுக்கள் சேதமடையாமல் பாதுகாக்கிறது. மேலும்,
உடலில் ஏற்படும் காயங்களை எளிதில் ஆற வைக்கக்கூடிய அளவிற்கு, இது சக்தி கொண்டது. நமது இரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமானால்,
அடிக்கடி மஞ்சளின் பயன்பாடு முக்கியம். முடிந்தால், தினமும் இரவில் ஒரு டம்ளர் பாலில், ஒரு டீஸ்பூன் அளவில் மஞ்சள் கலந்து குடித்து வரலாம்.
மேலும் படிக்க: பாதாம் மற்றும் பிஸ்தா விட அதிக ஊட்டச்சத்து நிறைந்த விலை குறைவான உணவுகள் :
இது நேரடியாக உடலில் கலந்து நமது ரத்தத்தில் உள்ள கிருமிகளை அழித்து இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. உங்களுக்கு நன்மையும் அளிக்கிறது.
2) Beetroot/பீட்ரூட்:
இந்த பீட்ரூட் என்பது இயற்கையாகவே ரத்தத்திலுள்ள கழிவுகளை வெளியேற்றும் வல்லமை வாய்ந்தது. மேலும் இந்த பீட்ரூட் செல்களை சேதம் அடையாமல் பாதுகாக்கிறது.
பீட்ரூட்டில் Betalain என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இதனால் இரத்தத்தில் கிருமிகள் சேர்வதை தடுக்கிறது. மேலும்,
Nitrate என்னும் சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பீட்ரூட்டில் காணப்படுகிறது.
நுரையீரல் என்பது நமது உடலில் இயற்கையாகவே நச்சுக்களை சுத்தம் செய்யும் வேலையை செய்கிறது.
இதன் மூலம் பீட்ரூட் அதிகம் அடிக்கடி சாப்பிட்டு வருவதால், நுரையீரலுக்கு தேவையான சுரப்பிகளை அதிகம் சுரக்கச் செய்வதால், நுரையீரல் ஆனது,
நல்ல முறையில் செயல்பட்டு இயற்கையாகவே ரத்தத்தில் உள்ள நச்சுக்கலை வெளியேற்றும் ஆற்றலை அதிகம் பெறுகிறது.
மேலும் படிக்க: Kidney Failure Symptoms In Tamil – சிறுநீரக பாதிப்புக்கான 10 அறிகுறிகள்
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தக்கூடிய ஒரு வரப்பிரசாதம், இந்த பீட்ரூட் மற்றும் அதிகப்படியான இரும்பு சத்து கொண்டது இந்த பீட்ரூட். இதனால் அடிக்கடி பீட்ரூட் சாப்பிட்டு வாருங்கள்.
3) Lemon/எலுமிச்சை:
எலுமிச்சை பழம் என்பது அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொண்டுள்ளது. ஒரு விலை குறைந்த அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்களை கொண்டுள்ள முக்கியமான பொருளில் ஒன்று, இந்த எலுமிச்சை பழம்.
Vitamin C சத்துக்களை அதிகம் கொண்டுள்ளது இந்த எலுமிச்சை பழம். இதனால், இது கல்லீரலில் இயக்கத்தை அதிகப்படுத்தி, ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மை வாய்ந்தது.
இந்த எலுமிச்சை பழத்தை இதனால், தினமும் ஒரு டம்ளர் சூடான நீரில் அரை எலுமிச்சம்பழம் பிழிந்து, சூடான நீரில் கலந்து சிறிதளவு தேன் கலந்து தினமும் குடித்து வரலாம்.
இப்படி செய்ய கல்லீரலின் இயக்கத்தை அதிகப்படுத்தும் இந்த எலுமிச்சை பழம். ரத்தத்தில் உள்ள கழிவுகளை ஒளித்து வெளியேற்றுகிறது. இதனால் இது தினமும் குடித்து வாருங்கள்.
4) Coriander Leaves/ கொத்தமல்லி இலை:
அன்றாடம் நாம் பயன்படுத்தும் கொத்தமல்லி இலையில் Sulfer எனப்படும் பொருள் அதிகம் உள்ளது. இந்த Sulfer ஆனது, ரத்தத்தில் உள்ள,
தேவையில்லாத தாது கழிவான lead, Aluminium, Mercury போன்ற தாது கழிவுகளை வெளியேற்றுகிறது. இதன் மூலம் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
சிறந்த, Diuretic ஆக இந்த கொத்தமல்லி ஆனது மிகவும் செயல்பட்டு சிறுநீரகத்தின் செயல்பாட்டை அதிகப்படுத்தும்.
இதன் மூலம் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால் தினமும் அல்லது வாரத்தில் நான்கு முறையாவது, இந்த கொத்தமல்லியை ஏதாவது ஒரு வகையில் உண்டு வாருங்கள்.
5) Cruciferous Vegetables/ பிரக்கோலி, காலிஃப்ளவர், முட்டைகோஸ்:
காலிபிளவர், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளான இதில் அதிகப்படியான Vitamin C சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும்,
இதில், Dietary Fiber, Potassium, Omega-3 fatty acid போன்றவை நிறைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் பலவகையான சத்துக்கள் இந்த காய்கறிகளில் நிறைந்துள்ளது.
இது ரத்தத்தில் உள்ள டாக்சின் என்னும் நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால் இந்த வகை காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
6) Garlic/ பூண்டு:
பூண்டில் அதிகப்படியான Sulfer சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ரத்தத்தில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
மட்டுமல்லாமல் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் அதிசிறந்த இயற்கை மருந்து என்று கூட கூறலாம். இதை தினமும் 5 முதல் 10 பூண்டு எடுத்துவர,
தேவையில்லாத கெட்ட கொழுப்புகளை கரைத்து ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றி ரத்தத்தை சுத்திகரித்து, நல்ல முறையில் வாழ உதவி செய்கிறது அதனால் தினமும் 5 முதல் 10 பூண்டுகளை உண்டு வரலாம்.
மேலும் படிக்க: How to save our life from Heart Attack in Tamil | மாரடைப்பின் போது நமது உயிரை காப்பாற்றுவது எப்படி ?
7) Carrot/ கேரட்:
கேரட் என்பது ரத்த உற்பத்திக்கு அதிகம் பயன்படுகிறது. நீங்கள் அடிக்கடி கேரட் உண்டு வர உங்கள் நிறத்தில் கூட சற்று மாற்றம் வரலாம். மேலும் கேரட்டில் Vitamin A சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மை இயற்கையாக நுரையீரல் பெற்றுள்ளது என்பதை நாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம்.
இப்படி கழிவுகளை வெளியேற்றும் நுரையீரலுக்கு தேவையான உற்பத்திக்கு உதவி செய்து, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.
இதனால் கேரட்டை அடிக்கடி ஜூஸ் மூலமாகவோ அல்லது காய்கறி போன்றவை மூலமாகவோ பச்சையாகவோ சாப்பிட்டு வரலாம்.
மேலும் படிக்க: 5 Best Foods For Motility and Sperm Count in Tamil | விந்தனுவுக்கு 5 உணவுகள்
8) Hibiscus flower/ செம்பருத்தி பூ:
செம்பருத்தி பூ என்பது இயற்கையாக நமது இருதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது மேலும் நமது இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
இந்த செம்பருத்திப்பூவில் ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகமுள்ளது. இதனால் நமது இரத்தத்தை சுத்திகரித்து தேவையில்லாத கழிவுகளை அகற்றி ஆரோக்கியத்துடன் வைக்க உதவுகிறது.
இந்த செம்பருத்திப் பூவை பச்சையாகவோ அல்லது டீ போல கொதிக்கவைத்து குடித்து வரலாம். தினமும் உண்டு வாருங்கள்.
9) Hot water/ சுடு தண்ணீர்:
காலையில் தினமும் சுடு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். சுடுதண்ணீர் என்பது வெறும் தண்ணீர் மட்டும் அல்ல,
நமது செரிமான பகுதியில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்றக் கூடிய வல்லமை வாய்ந்தது. மேலும் செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்.
இதுமட்டுமல்லாமல் நமது காலை பழக்கத்தில், இந்த சுடு தண்ணீர் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் அனைத்து உறுப்புகளையும் ஊக்குவத்து,
தேவையில்லாத கெட்ட கொழுப்புக்களையும் கரைத்து, அனைத்து உறுப்புகளும் நல்ல முறையில் செயல்படுவதால், ரத்தமும் இயற்கையாக,
சுத்திகரிக்கப்பட்டு தேவையில்லாத கழிவுகள் வெளியேற்றப்படும். இதனால் தினமும் சுடு தண்ணீர் குடித்து வருவது ஒரு மிகப்பெரிய ஒரு பலன் கொடுக்கும்.
மேலும் படிக்க: Best Top 5 Foods For Build Your Muscle | Tamil
10) Jaggery/ ஜாகரி:
சுத்திகரிக்கப்படும் முன்புள்ள, கரும்பு சர்க்கரை, பனை வெல்லம், நாட்டு சக்கரை போன்றவை உண்டு வருவதால்,ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகின்றன.
அதிகப்படியான இரும்புச்சத்து நிறைந்துள்ளது. வெள்ளை சர்க்கரையை உண்பதை கைவிட்டு பனை வெல்லம்,
நாட்டு சர்க்கரை போன்றவை உண்டு வருதல் உங்கள் இரத்தத்தை சுத்திகரித்து ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்.
இப்படி சில உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருவதால், எந்த ஒரு மருந்துகளின் பக்கமும் செல்ல தேவையில்லை.
Conclusion/ முடிவுரை:
நாம் இயற்கையாகவே நாம் உண்ணும் உணவுகளை வைத்து, இதன் மூலம் நல்ல முறையில் இரத்தத்தை சுத்தப்படுத்தி, நமது உறுப்புகளை இதன் மூலம் நல்ல முறையில் வைத்துக் கொண்டு,
நீண்ட ஆயுளுடன் வாழ வகை செய்யும். இதனால் இயற்கையான, ஆரோக்கியமான நல்ல உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். தினமும் உற்சாகமாகவும், தெளிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம். நன்றி
மேலும் படிக்க:பிட்காயின் என்றால் என்ன ? What is Bitcoin in Tamil ?