Aadhar Card/ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் வணக்கம். aadhar card என்பது நம் நாட்டில் தனிமனித அடையாளமாக மாறிவிட்டது.
இந்த ஆதார் கார்டு என்பது இன்று இந்தியாவில் அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது.
வங்கி கணக்கு முதல் எல்லாவற்றிற்கும் இந்த ஆதார் கார்டு என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இந்த ஆதார் கார்டு என்பது ஒருவருக்கு ஒன்று மட்டுமே இருக்க முடியும். இதை வேறு யாரும் பயன்படுத்த முடியாது.
முக்கியமாக நாம் இந்த பதிவை, மக்கள் சிரமம் குறைக்க உங்களுக்காக செய்துள்ளோம்.
நாம் முழு வேலையும் நேராக சென்று செய்தால், அதிக நேரம் ஒவ்வொருவருக்கும் எடுக்கும். இதனால்,
எல்லா வேலையும் Online மூலம் செய்து பின்னர், Verification மட்டும் நீங்கள் E-sevai மையம் சென்றால் போதுமானது.
இதனால் இந்தியாவைப் பொறுத்தவரையில், ஆதார் கார்டு பல விஷயங்களுக்கு கட்டாயம் என மாறிவிட்டது.
இப்படி இருக்கும்போது, ஆதார் கார்டு உடன் நமது மொபைல் எண்ணை இணைத்து இருப்பது அவசியமாக உள்ளது. ஏனென்றால் வங்கி என்றால்,
மொபைல் எண்ணை கொடுத்து இருப்போம். இதுபோல ஆதார் கார்டில் மொபைல் எண்ணை இணைத்து இருக்க வேண்டும்.
இல்லையென்றால் OTP என்பது நமது மொபைலுக்கு வராது. OTP வராமல் இருந்தால் நம்மால் அடுத்த செயலுக்கு செல்ல முடியாது.
ஆதார் கார்டு உடன் மொபைல் எண்ணை இணைப்பதற்கான காரணங்கள் சில உள்ளன. அவை என்னவென்று பார்த்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
மேலும் படிக்க : கார் இன்சூரன்ஸ் பாலிசி வகைகள் | Types of car insurance policy in Tamil
ஆதார் கார்டில் மொபைல் எண்ணை இணைக்கும் காரணங்கள்:
a. License எடுக்கும் போது ஆதார் கார்டு தேவைப்படும்.
b. வங்கி கணக்கு உடன் ஆதார் கார்டு தேவைப்படும்.
c. அத்தியாவசிய தேவைக்கான அனைத்து தேவைக்கும் ஆதார் அவசியப்படும். அத்தோடு அவர்கள் மொபைல் இணைந்திருப்பதும் அவசியப்படும்.
ஆதார் கார்டு உடன் மொபைல் எண்ணை இணைக்கும் விதங்கள்:
i) ஏற்கனவே ஆதாருடன் கொடுத்த மொபைல் எண்ணை மாற்றுவது.
ii) புதிதாக ஆதார் கார்டு எடுக்கும் போது மொபைல் எண்ணெய் சேர்ப்பது.
iii) ஏற்கனவே ஆதாருடன் கொடுத்த மொபைல் நம்பர் தொலைந்துவிட்டால் அல்லது அந்த எண் செயலில் இல்லை என்றால் புதிதாக ஒரு மொபைல் நம்பரை மாற்றுவது.
iv) சிறுவயதில் ஆதார் எடுக்கும்போது சிலருக்கு அவர்கள் பெற்றோர் மொபைல் எண்ணை கொடுத்து இருப்பார்கள். வளர்ந்த பிறகு அவர்களுக்கு தேவையான மொபைல் நம்பரை மாற்றுவது.
இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்:
ஆதார் கார்டு பொருத்தவரையில், சில வருடம் முன்பு நாம் Online மூலம் முழுவதும் செய்து கொள்ள முடிந்தது.
ஆனால், அதில் பல தவறுகள் நடந்தது, பல முறைகேடுகள் நடந்தது. அதனை அரசு சற்று மாற்றி விட்டது.
இதன் மூலம் மொபைல் எண்ணை நாம் வீட்டிலிருந்தே Online மூலம் 90 சதவீத வேலையை செய்துவிடமுடியும்.
பிறகு, அருகில் உள்ள இ-சேவை மையம் அணுகி, நாம் verification செய்த பிறகு, நமது மொபைல் எண் ஆனது ஆதாருடன் ஆன்லைன் மூலம் மாற்றி விடப்படும். எப்படி என்று பார்க்கலாம்.
மேலும் படிக்க : தீக்காயம் ஏற்பட்டால் முதல் உதவி செய்வது எப்படி? | First Aid For Fire Burns in Tamil
ஆதார் கார்டு உடன் மொபைல் எண்ணை மாற்றும் இடம்/ Website for if ur aadhar mobile number not in use : Click Here : 👉 Aadhar Card Site
(1) Login Aadhar:
https://ask.uidai.gov.in/#/ என்ற இணையதளத்திற்கு செல்லவும் பிறகு கீழே காண்பது போல இருக்கும்.
இதில் நீங்கள் காண்பது போல Mobile number, Email Verification என்று இருக்கும். அதில் நீங்கள் மொபைல் நம்பர் என்ற இடத்தினை கொடுத்து,
Captcha verification என்னும் இடத்தில் கொடுத்து Send OTP என்னும் Option கொடுக்க வேண்டும்.
இப்போது உங்கள் மொபைல் நம்பருக்கு OTP சென்று இருக்கும். அதாவது இப்போது நீங்கள் ஒன்று யோசிக்கலாம்.
மொபைல் நம்பர் தொலைந்து விட்டது அல்லது செயலில் இல்லை, அப்படி இருக்கும்போது,
எப்படி ஆதாருக்கு கொடுத்த பழைய நம்பருக்கு மெசேஜ் வரும் என்று நீங்கள் யோசிக்கலாம்.
நீங்கள் இதில் கொடுக்கப் போவது இப்போது நீங்கள் உபயோகிக்கும் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும்.
பழைய என்னை விட்டுவிடுங்கள். இப்பொழுது நீங்கள் எந்த எண் சேர்க்க வேண்டுமோ,
அந்த மொபைல் எண்ணை கொடுத்து OTP கொடுத்து, அந்த OTP கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.
(2) Update Aadhar card:
இப்போது, இந்த Option இல் New Enrollment, Update Aadhar என்ற இரண்டு Options இருக்கும். இதில் Update Aadhar என்ற Option இதில் கொடுக்க வேண்டும்.
இப்போது இதில், உங்கள் பெயர், மொபைல் எண், உங்கள் பிறந்த தேதி, போன்று பல விஷயங்கள் இருக்கும்.
இதில் நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் மாற்ற வேண்டும் என்றால் மொபைல் நம்பர் என்ற Option கொடுக்க வேண்டும்.
மேலும் படிக்க : Kidney Failure Symptoms In Tamil – சிறுநீரக பாதிப்புக்கான 10 அறிகுறிகள்
(3) Application Submit:
இப்போது, நீங்கள் உங்கள் தகவலை கொடுத்துவிட்டு Application Submit செய்ய வேண்டும்.
Submit செய்யும் போது, உங்களுக்கு இது போல Application has been submitted என்று வரும்.
Appointment ID என்று ஒன்று கொடுப்பார்கள். அதை நீங்கள் Print out என்பது Screen shot மூலம் Save செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
Notes:
இதனை, நீங்கள் Appointment Book செய்து செல்லும்போதோ அல்லது நீங்களாகவே அருகிலுள்ள, E- Sevai மையம் செல்லும்போதோ, சென்று இந்த,
Appoinment ID சொல்லி மொபைல் நம்பரை Change பண்ண செய்திருந்தோம். Change செய்ய வேண்டும் என்றால்,
உடனே இந்த Appoinment ID என்பதை போட்டு அவர்கள் உடனே உங்களுக்கு Verification என்ற கடைசி நிலையை செய்து முடிப்பார்கள். பிறகு,
Online மூலம் அடுத்த இரண்டு நாட்களுக்குள் உங்கள் Mobile Number ஆதாருடன் அப்டேட் ஆகிவிடும்.
அதற்குப் பிறகு உங்களுக்கு ஆதார் சம்பந்தமான OTP உங்கள் மொபைல் எண்ணிற்கு வரத்தொடங்கும்.
நீங்கள் வைத்துக் கொள்ளலாம், எடுத்துக் கொள்ளலாம், நீங்கள் உபயோகித்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க : மார்பு பகுதியில் வலி வந்தால் மாரடைப்புக்கான அறிகுறியா ? What is Heart Attack Symptoms in Tamil