How to save our life from Heart Attack in Tamil | மாரடைப்பின் போது நமது உயிரை காப்பாற்றுவது எப்படி ?

How to save our life from Heart Attack in Tamil | மாரடைப்பின் போது நமது உயிரை காப்பாற்றுவது எப்படி ?

இந்த பதிவு உங்களுக்கு, உங்கள் குடும்பத்திற்கு, உங்கள் நண்பர்களுக்கு, ஏன் இந்த உலகத்தில் வாழும் அனைத்து ஜாதி, மதம், இனம், என அனைத்தையும் தாண்டி, இந்த உலகத்தில் வாழும் அனைவருக்கும் உயிர் முக்கியம் என்பதை புரிய வைக்கும் ஒரு பதிவு.

அப்படி என்ன இந்த Article மூலம் நீங்கள் தெரிய போகிறீர்கள் என்றால், இன்று தினமும் இந்த காலகட்டத்தில், தினமும் ஆயிரம் கணக்கில் பாதிக்கப்படும்,அல்லது உயிர் பறிக்கும் விசயமாக உள்ளது என்ன என்றால்? Heart Attack எனப்படும் மாரடைப்பு.

இந்த மாரடைப்பு என்பது என்ன? என்பதையும், அதில் உள்ள வித்தியாசம் என்ன என்பதை முழுமையாக பார்க்க போகிறோம்.மற்றும் உங்களுக்கு அல்லது யாருக்கேனும் மாரடைப்பு வந்தால், அவர்களது உயிரை எப்படி மீட்டு உயிர் பிழைக்க வைக்கும் வழி என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

1 : What is Heart Attack ?/மாரடைப்பு என்பது என்ன ?

மாரடைப்பு என்பது ஒரு இதயம் நோய் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் Heart Attack என்னும் மாரடைப்பு என்றால் நாம் Heart Attack என்று சொல்லி விடுகிறோம். அது அப்படி இல்லை, மாரடைப்பில் இரண்டு விதம் உள்ளது.

A : Heart Attack / ஹார்ட் அட்டாக்

B : Cardiac Arrest / கார்டியாக் அரெஸ்ட்

இப்போது Heart Attack என்பது என்ன, Cardiac Arrest என்பது என்ன, என்பதை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.பின்பு அது வரும் காரணமும், அதை தடுக்கும் வழிமுறையும், இது மட்டுமல்லாமல் Heart Attack மற்றும் Cardiac Arrest வந்தால், என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம் வாங்க.

2 : Heart Attack / ஹார்ட் அட்டாக் :

Hearteart Attack நமது இதயத்தில் இரத்த ஓட்டம் சரி வர இல்லாமல்,மற்றும் ஆக்சிஜன் சரவர செல்லாமல் தடை படும் போது ஏற்படுவது.பொதுவாக நமது உடலில் இரத்தம் ஆனது, உடலில் பல லட்சம் நரம்புகளின் வழியே ஓடுவது போல நமது இதயத்தில் இரத்தம் மற்றும் ஆக்சிஜன் ஆனது, சீராக செல்ல வேண்டும்.

இந்த blood cells ஆனது சீராக செல்லாமல் Fatty Cells அதிகம் நமது இதயம் இரத்த குழாயில், fatty cells, அதிகம் ஆகி, இரத்தம் மற்றும் ஆக்சிஜன் அளவு குறைவாக ஆனால், அல்லது இரத்தம் செல்லாமல் தடை ஆனால், Heart Attack என்பது ஆகின்றது.

மேலும் படிக்க : விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil

3 : What is Fatty / fatty என்பது என்ன ?

Fatty என்பது நாம் உண்ணும் உணவு சரிவர இல்லாமல் இருப்பதால், மது பழக்கம் தொடர்ந்து இருப்பதால், மற்றும் புகை பழக்கம் தொடர்ந்து இருப்பதால், என இந்த மாதிரி விஷயங்களால், அதிகம் நமது இருதய இரத்தக் குழாய்களில் Fatty என்னும் கொழுப்பு படிவம் போல நமது இதயத்தில் இரத்த குழாயில் சிறிது சிறிதாக சேர்ந்து வருவது ஆகும்.

இந்த Fatty என்னும் படிவம் ஆனது தொடர்ந்து நாம் மது பழக்கம் எடுத்து வந்தால், புகை பிடிக்கும் பழக்கம் எடுத்து வந்தால், Junk food habits அதிகம் எடுத்து வந்தால், இந்த Fatty Layer சிறிதாக ஆரம்பித்தது, அதிகம் ஆகிகொண்ட வரும்.

பின்பு அதிகம் ஆன, இந்த Fatty layer ஆல், இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல், இரத்தம் தடை பட்டு Heart Attack வருகின்றது.

4 : How to Prevent Fatty / Fatty சேராமல் தடுப்பது எப்படி?

பெரும்பாலும் இதய அடைப்பு ஏற்படாமல் தடுக்க சிலவழிகள் கடைப்பிடித்தால், அதிகம் இரத்த குழாயில் Fatty ஏற்பட்டு அடைப்பு ஏற்படாமல் தடுக்க நம்மால் முடியும்.

A : Don’t Take Alcohol / மது நிறுத்த வேண்டும்.அல்லது மது பழக்கம் இல்லாமல் இருக்க வேண்டும்.

B : Don’t Smoke / புகை பிடிக்கும் பழக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். அல்லது புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக நிறுத்த வேண்டும்.

C : Stop Junk Food / தேவை இல்லா கொழுப்பு உணவு, மற்றும் பதப்படுத்த பட்ட உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அப்படி உண்டு வந்தாலும் அதை நிறுத்த வேண்டும்.

5 : What We Do When Heart Attack / மாரடைப்பு ஏற்பட்ட உடன் செய்ய வேண்டியது என்ன ?

(1) மாரடைப்பு ஏற்பட்ட உடன், நாம் அவர்களது இதயத்தை தொட்டு பார்க்க வேண்டும். அப்போது இதயம் துடிப்பு இருந்தால், அது Heart Attack என்று நாம் எடுத்து கொள்ளலாம்.

(2) Heart Attack என்பது உறுதி செய்த பிறகு, உடனே அவரை அவரசரமாக உரிய மருத்துவமனையில், உரிய மருத்துவரிடம் கொண்டு சென்று உடனே அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

(3) மருத்துவர் Heart Attack ஆல் பாதிக்க பட்டவரை, உடனே அவருக்கு என்ன ஆகிர்க்கு, Heart Attack என்பதற்கு உடனே Ecg என்னும் பரிசோதனை செய்வார்கள்.

(4) மருத்துவர் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல், இரத்த குழாயில் எந்த இடத்தில் இரத்தம் சரிவர செல்லாமல் அடைப்பு ஏற்பட்டு உள்ளது என்று பார்ப்பார்கள். இதுபோல எத்தனை இடத்தில் அடைப்பு உள்ளது என்றும் பார்ப்பார்கள்.

மேலும் படிக்க : Exercise to Protect your Eyes From Phone in Tamil | ஃபோன் பார்ப்பதால் கண்களை பாதுகாக்கும் சில உடற்பயிற்சிகள்

(5) பின்பு அந்த அடைப்பை நீக்கி சரி செய்து இரத்த செல்கள் ஆனது, தொடர்ந்து நல்ல முறையில் இயங்க, மருத்துவர்கள் அதற்க்கு தேவையான சிகிச்சை அளித்து சரி செய்வார்கள்.ஆஞ்சியோ அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை என இதில் யாருக்கு எது சரிவரும் என்று முடிவு செய்து, அதற்கான சிகிச்சை அளித்து சரி செய்வார்கள்.

சிறியவர்கள் முதல் பெரியவர் வரை இப்போது Heart Attack என்ற விசயம் வருகிறது. குறிப்பாக 30 முதல் 50 வயது வரை இருக்கும் நபர்களுக்கு அதிகமாக வருகிறது.

6 : What is Cardiac Arrest? / கார்டியாக் அரெஸ்ட் என்பது என்ன?

இந்த Cardiac Arrest என்பது Heart Attack என்பது போல இல்லை, Heart Attack என்பது நாம் சொன்னது போல, இதயத்தில் செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு வருவது ஆகும்.

ஆனால் இந்த Cardiac Arrest என்பது,

நமது இதயம் என்பது ஒரு வித Electrical Acvive என்பதை அடிப்படையாக வைத்து திடிக்கும். இந்த துடிப்பு ஆனது, ஒவ்வொரு மனிதருக்கும் சற்று மாறுபடலாம், அவரது உடல் நிலை பொறுத்து. இந்த Electrical Activity என்பது இதயத்திற்கு, மூளைக்கு இரணுமே இந்த Activities வைத்து தான் அதன் செயல்பாடுகள் அமைகின்றன.

இந்த Electrical Acvivity திடீரென தடைபடும் போது நமது இதயத்தில் துடிப்பு நிறுத்தப்படுகின்றன. இதுவே Cardiac Arrest என்று அழைக்கபடுகிறது. முன்பு பார்த்த Heart Attack என்பது நாம் உடனே அதாவது Heart attack என்பது ஏற்பட்ட உடனே அவரை மருத்துவரிடம் அழைத்து சென்று 1 மணி நேரத்தில் சிகிச்சை அளித்தால், பாதிக்க பட்டவர் குணமடைய அதிக அளவு வாய்ப்பு உள்ளது.

ஆனால் இந்த Cardiac Arrest என்பது Cardiac Arrest ஆன உடனே நாம் அவருக்கு இதயம் துடிப்பு நின்று இருந்தால், உடனே முதல் உதவி என்னும் First Aid செய்ய முடியும். அதன் மூலம் அவரை அவர் இதயத்தை துடிக்க வைக்க முடியும்.பின்பு உடனே மருத்துவர் சிகிச்சைக்காக அழைத்து சென்று விட வேண்டும்.

7 : How to Give First Aid / Cardiac Arrest வந்தால் முதல் உதவி செய்வது எப்படி?

(1) முதலில் Cardiac Arrest ஆனவரை, முதலில் காற்றோட்டம் உள்ள இடத்தில் படுக்க வைக்க வேண்டும்.

(2) அவர் உடை கனமாக இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். தேவைபட்டால் அவர் dress யை மேலே சற்று நெஞ்சு பகுதி தெரியும் அளவு விளக்கி கொள்ளலாம்.அல்லது remove செய்து கொள்ள வேண்டும்.

(3) நமது இரு கைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக உள்ளங்கையில் மற்றும் ஒரு கை வைத்து, முட்டைகள் மடகாமல் வைத்து வேகமாக அழுத்த வேண்டும்.

(4) அவரது வாயை திறந்து பிடித்து அவரது தலையை சற்று தூக்கி பிடித்தவாறு அவரது வாய் மேல் நம் வாய் வைத்து நன்கு நமது மூச்சு காற்றை அவருக்கு கொடுக்க வேண்டும்.

(5) இப்படி நமது மூச்சு காற்றை கொடுத்தும், அவரது இதயம் பகுதியில் நன்கு அழுத்தம் கொடுத்தும், மாற்றி மாற்றி செய்ய வேண்டும்.

இப்படி செய்தால் உடனே சற்று நேரத்தில் அவருக்கு அவர் இதயம் பகுதியில் மூச்சு சென்று அழுத்தம் கொடுத்த காரணத்தினால், அவர் இதயத்தில் Electrical Activity நடந்து இதயம் துடிக்க ஆரம்பித்தது, அவர் சுயநினைவுக்கு வருவார். உடனே மருத்துவர் சிகிச்சைக்காக அழைத்து சென்று காண்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க : Kidney Failure Symptoms In Tamil – சிறுநீரக பாதிப்புக்கான 10 அறிகுறிகள்

இவ்வாறு நீங்கள் உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் நடந்தால், cardiac arrest, அல்லது heart attack ஆனது என்பதை எளிமையாக நாம் சொன்னது போல தெரிந்து கொண்டு, உடனே அவருக்கு தேவையானதை செய்ய முடியும். பின்பு மருத்துவரிடம் அழைத்து செல்ல முடியும்.

உங்கள் குடும்பத்தில், உங்கள் உறவினர், உங்கள் நண்பர்கள்,அல்லது பொது இடத்தில் யாருக்காவது இப்படி heart attack அல்லது cardiac arrest ஆனால் உடனே இந்த அடிப்படையில் பலர் உயிர் காப்பாற்ற உதவியாக இருக்கும். தயவு செய்து இந்த Article மூலம், இந்த பதிவு மூலம் நீங்க தெரிந்து கொண்ட இந்த விசயத்தை, இந்த பதிவை மற்றவர்க்கு அனுப்புங்கள் ! அனைவரும் இதை பார்த்து படித்து பயன் பெறுங்கள்.

Q&A / வினா விடை :

A) Heart Attack/ மாரடைப்பு என்பது எதனால் ஏற்படுகிறது ?

விடை : இதயத்தில் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதால் ஆகும்.

B) Cardiac Arrest / இதயம் துடிப்பு ஏன் நிறுத்தப்படுகிறது ?

விடை : இதய துடிப்பு முறையாக நடக்கும், Electrical Activity நிற்கும் போது, இதயம் துடிப்பு நின்று விடும்.

C) இதயத்தில் அடைப்பு ஏற்படுவது தடுக்க என்ன செய்ய வேண்டும் ?

விடை : மது பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம், Junk Food எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், மற்றும் தேவையற்ற கொழுப்பு உணவு தவிர்க்கப்பட வேண்டும்.

இதை பார்த்து படித்து பயன் பெறுங்கள். நமது மக்கள் , பல சந்ததிகள் ஆரோக்கியமாக வாழ, கற்று கொடுங்கள். முடிந்தால் இதை அனைவருக்கும் அனுப்புங்கள்.அவர்களும் பார்த்து படித்து பயன் தரும் வகையில் வாழட்டும். நன்றிகள்

மேலும் படிக்க : விந்துவை அடக்கலாமா ? அடிக்கடி வெளியேற்றலாமா ?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *