Top 10 Healthy Foods For Heart in Tamil | Prevent Heart Attack in Tamil

Top 10 Healthy Foods For Heart in Tamil :

இருதயம் என்பது என்ன, இதயத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை சற்று பார்த்துவிட்டு, நாம் இதயம் பாதுகாக்கும் 10 உணவு பற்றி பார்க்கலாம் வாங்க.

இதயம் என்பது மனிதர்க்கு மிக மிக முக்கியமான ஒன்று ஆகும். ஏண் என்றால் நமது உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளுமே அவ்வப்போது சற்று உறுப்புகளை பொறுத்து சற்று ஓய்வு பெற்று கொள்ளும்.

ஆனால் நம் இதயம் மட்டுமே நாம் பிறந்த பொழுது முதல், ஏன் நாம் நமது தாயின் வயிரின் கர்ப்பப்பையில் உருவான நாள் முதல் ஆரம்பித்து, நாம் வயதாகும் வரை, நாம் உயிருள்ள வரை நம் இதயம் நிக்காமல் இயங்கிகொண்டே இருக்கும்.

இப்படி சிறப்பம்சம் கொண்ட நம் இதயத்தை நாம் நல்ல முறையில் இயற்கையான முறையில் நன்றாக வைத்து கொள்வது அவசியம். நம் முன்னோர் காலத்தில் இருதய நோய் அல்லது இதயம் அறுவை சிகிச்சை என்று இருந்ததா ? என்றால் மிக பெரிய கேள்விக்குறி?

ஆனால் இந்த காலத்தில், தேவையில்லை உணவும், இயற்கை வளங்கள் இல்லாத உணவும், உண்பதால் மற்றும் தேவையற்ற மன குழப்பம், எதயாது யோசித்து கொண்டே இருப்பது, தேவை இல்லா கொழுப்பு உணவுகள், இப்படி சில பல காரணத்தினால், வயது வரம்பு பாராமல் இதய நோய் என்பது வருகின்றது.

இதனால் நமது எண்ணம் மற்றும் உணவை அளவாக, நல்ல முறையில் நமது இயற்க்கை ஒன்றிய வகையில் வைத்து கொள்ளுங்கள்.நல்ல இயற்கையான வழியில் வாழுங்கள்.மற்றவர்க்கும் இதை அனுப்புங்கள், பார்த்து பயன் பெறட்டும்.

மேலும் படிக்க : உணவுக்கு பின் மலம் களிப்பீர்களா ? உப்புசத்தால் ஏற்படும் நோய்கள் என்ன ?

இதயத்தின் சில நோய்கள் :

A. இதய அடைப்பு.

B. இதய படபடப்பு.

C. இதய வால் சுருக்கம்.

D. இதய வலி

E. பலவீனம் ஆன இதயம்

இப்படி அன்றாடம் இந்த காலத்தில் சொல்லப்படுகின்றது.

இப்போது நாம் நமது இதயம் பாதுகாக்கும் அந்த 10 இயற்கையான உணவுகள் பற்றி ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கலாம் வாங்க.

1 : Garlic / பூண்டு :

பூண்டு நமக்கு அனைவருக்கும் தெரிந்தது போல், இயற்கையான உணவு ஒன்று, நமது செரிமானம் சக்திக்கு உதவுகிறது.இந்த பூண்டில் அஜோன் என்னும் ரசாயனம் உள்ளது.

இந்த பூண்டில் உள்ள அஜோன் என்னும் விசயம், நமது இதயத்தில் ஏற்படும் இரத்த கட்டிகளை கரைத்து வெளியே அனுப்பி விடும் வல்லமை கொண்டது. மற்றும் இதயத்தில் இரத்தம் உறைதல் போன்றவற்றையும் தவிர்க்கிறது.

பொதுவாக நம் உடலில் இருக்கும் Angiotensin 2 என்னும் புரதம் என்னும் விசயம் என்ன செய்யும் என்றால், நமது இதயத்தில் இரத்த ஓட்டம் செல்லும் குழாய்களை சற்று சுருங்க செய்யும் தன்மை கொண்டது.

இதனால் இந்த பூண்டை எடுத்து வந்தால், இந்த Angiotensin 2 புரதத்தை சற்று மலுங்க செய்து, நமது இதயத்தில் இருக்கும் இரத்த குழாய்களை சுறுங்காமலும், வலுவாக வைத்து கொள்ளவும் இந்த பூண்டு பயன் படுகின்றது.

பூண்டு எடுக்கும் முறை :

A. பூண்டை தோல் உரித்து, பச்சையாக தினமும் தூங்க செல்லும் போது ஒரு பூண்டை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு பின்பு தூங்கி வரலாம். இதனால் வாய் துர்நாற்றம் கூட விரைவில் சரியாகும்.

B. உங்கள் சமையலில், சாம்பார், காய்கறிகள், போன்ற சமையலில் தினமும் பயன்படுத்தி உண்டு வரலாம்.

2 : Olive Oil / ஆலிவ் எண்ணெய் :

ஆலிவ் எண்ணெய் என்பது அனைவரும் தனது உணவாக எடுத்து கொள்ளலாம். ஆலிவ் எண்ணெய் யில் அத்தனை நன்மைகள் உடலுக்கு உள்ளது.

இந்த ஆலிவ் எண்ணெய்யில், பொதுவாக நமது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரித்து வரும்,IDL, LDL, போன்று பல கெட்ட கொழுப்பை கரைக்க வல்லது. இந்த ஆலிவ் எண்ணெய் நீங்கள் உங்கள் samaiyal- க்கு சேர்த்து எடுத்து வந்தால், உங்கள் இதய தமனி களில் கெட்ட கொழுப்பை சேர்த்து இருப்பதை தவிர்த்து, பின்பு இது போல் கெட்ட கொழுப்பு நமது உடம்பில் சேராமல் இருக்கவும் தடுக்கிறது.

இதன் மூலம் இரத்தம் சீராக செயல்பட்டு, இதயம் நன்கு செயல்படும். நல்ல முறையில் இயங்கும்.

மேலும் படிக்க : Brain Detox in Tamil | மூளை கழிவுகளை சுத்தப்படுத்துவது எப்படி ?

3 : மாதுளை பழம் :

மாதுளையில் நமது ஆண்கள், பெண்கள், என பல விசயத்திற்கு நல்ல முறையில் ஒரு மாற்றம் கொடுக்க கூடிய விசயம் இருக்கிறது. குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படும் திருமண பந்த விசயத்தில் ஏற்படும் சற்று குழப்பமும்,குறைகளையும் இயற்கையாக இந்த மாதுளை பழம் சரி செய்யும் வல்லமை கொண்டது.

இந்த மாதுளை பலத்தில் நைட்ரிக் ஆக்சைடு அதிகம் உள்ளது. பொதுவாக இதய நோய் அதிகம் வர முக்கிய காரணம், நமது மனதில் ஏற்படும் மன அழுத்தம் ஆகும். நமது உடம்பில் நைட்ரிக் ஆக்சைடு குறையும் போது, மன அழுத்தம் ஏற்படும். அப்போது இதயம் நோய் வர காரணமாக அமைகின்றது.

இதனால் இந்த மாதுளை பலத்தை சாப்பிட்டு வர, நமது உடம்பில் நைட்ரிக் ஆக்சைடு அதிகம் ஆகி, இதன் மூலம் நமது உடலில் பல மாற்றம் தந்து, நமது உடலில் இதயம் நோய் வராமல் பாதுகாக்க செய்கிறது.

4 : Fish / மீன்கள் :

மீன்களில் பொதுவாக அதிக புரதம் நிறைந்து உள்ளது. இதனால் நமது உடம்புக்கு பல நன்மைகள் உள்ளது. மீன்களில் நீங்கள் அதிகம் எடுக்க முடிந்தால், Salmond எனப்படும் மீன் வாங்கி சமைத்து வாரம் இரண்டு முறையாவது சாப்பிடலாம்.

இந்த Salmond Fish எனப்படும் மீன், எதற்கு குறிப்பாக சொல்கிறேன் என்றால், இந்த Salmond மீன் இல், அதிகம் Omega 3 என்னும் கொழுப்பு அமிலம் அல்லது. இந்த ஒமேகா 3 அமிலம் என்ன செய்யும் என்றால், நமது உடம்பில் இரத்தத்தை சீராக வைத்து கொள்ளும்.

மேலும் நமது உடலில் இதய அடைப்பு, அல்லது இதய பாதிப்பு ஏற்படும் வகையில் இருக்க கூடிய Triglycerides என்னும் கெட்ட கொழுப்பை நேராக இந்த ஒமேகா 3 சென்று அளித்து, இரத்தத்தை சீராக வைத்து கொள்ளும்.

இதனால் இந்த Salmond Fish யை, வாரம் 2 அல்லது 3 முறையாவது நீங்கள் மீன் சாப்பிடும் போது இந்த மீனை வாங்கி சாப்பிடலாம். இந்த salmon fish கிடைக்க வில்லை என்றால், எளிமையாக கிடைக்கும் மத்தி மீன் வாங்கி இதே போல் சாப்பிட்டு வரலாம். இது ரெண்டும் கிடைக்காத வேளையில், கானாங்கெளுத்தி மீன் எனப்படும் மீனை உண்டு வாருங்கள். இப்படி செய்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

5 : Avacoda / அவகொடா :

இந்த அவகோடா வில் நல்ல கொழுப்பு அமிலம் உள்ளது, இது உடம்பிற்கு நல்ல மருந்து போல தன்மை கொண்டது. இதில் உள்ள நல்ல கொழுப்பு அமிலம் ஆனது, நமது உடம்பில் தேவை இல்லாமல் சேர்ந்த கெட்ட கொழுப்பை கரைத்து.

நல்ல கொழுப்பை கொடுக்க வல்லது.இது அலர்ஜி எதிர்ப்பு பண்பும் அதிகம் உள்ளது.இதனால் இதயம் பாதுகாக்கப்படும்.

6 : Red Grapes / சிகப்பு திராட்சை :

இந்த சிகப்பு திராட்சையில், அதிக நன்மைகள் உள்ளது. இந்த சிகப்பு திராட்சையை நீங்கள் அவ்வப்போது அப்படியே சாப்பிடலாம். அல்லது Juice போன்று அருந்தி வரலாம்.

இந்த சிகப்பு திராட்சை ஆனது, உங்கள் இருதய இரத்த தட்டுகள், ஒன்றோடு ஒன்று ஒட்டிகொள்ளமல், நன்கு அனைத்தும் தனி தனியாக , சமமாகவும், இருக்க உதவுகிறது.

இதுமட்டுமல்லாமல், இந்த சிகப்பு திராட்சை ஆனது இதனால் உங்கள் இரத்த அடைப்பு போன்றவற்றை நீக்குகிறது. மேலும் இதனால் சீரான முறையில் இரத்தம் நமது இதயத்தில் இருக்கும். இதனால் நல்ல முறையில் இதயம் இயங்கும். இதய பாதிப்பு தடுக்கப்படும். இதனால் இந்த சிகப்பு திராட்சை தினமும் எடுத்து வாருங்கள்.

7 : Almond and Walnut / பாதாம் மற்றும் வால்நட் :

பாதாம் மற்றும் வால்நட் இல், அதிகம் நன்மை உள்ளது. நமது இதயத்தின் நண்பன் என்று கூட இந்த பாதாம் மற்றும் walnut யை நாம் சொல்லலாம்.

இந்த பாதாம் மற்றும் வால்நட் யில் அதிகம் Omega 3 ஆனது உள்ளது. இந்த ஒமேகா 3 ஆனது நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து, நமக்கு நல்ல சத்துகளையும், நல்ல கொழுபையும் கொடுக்கும் ஆற்றல் பெற்றது.

மேலும் படிக்க : Kidney Failure Symptoms In Tamil – சிறுநீரக பாதிப்புக்கான 10 அறிகுறிகள்

இதனால் நமது இதயம் உள், இரத்தம் உறைதல் தடுக்கப்படும், மற்றும் இரத்தம் சீராக இயங்கவும் உதவுகிறது.இதன் மூலம் இதயம் நலன் பாதுகாக்கப்படும். எனவே இதை அனைவருமே எடுத்து கொள்ளலாம்.

8 : Berry / பெர்ரி பலங்கள் :

பெர்ரி இல், எல்லா பெர்ரி உம் நன்மை பயக்கும். ப்ளூ பெர்ரி , ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி, என்று மூன்று பெர்ரி -யுமே inflammation என்னும் விசயத்தை தடுக்கிறது. மேலும் இதில் அதிக அளவில் ஆன்டி oxident இருப்பதால், நமது இதயத்தை நன்கு பாதுகாக்கிறது.

இதனால் அடிக்கடி முடிந்தால், தினமும் ஏதாவது ஒரு பெர்ரி எடுத்து வாருங்கள். நல்ல பயன் பெறுங்கள்.

9 : Tomato / தக்காளி :

தக்காளியில் வைட்டமின் சி, ஆல்ஃபா, மற்றும் பீட்டா, போன்றவை அதிக அளவில் உள்ளது. இது இல்லாமல் lychopine என்னும் பொருள் உள்ளது.

இந்த தக்களியானது, இதயம் பாதிக்காமல் தடுக்கிறது. இதனால் இந்த தக்காளியை தினமும் ஒன்றாவது, வெறும் தக்களியாகவோ, juice முறையில் எடுத்து கொள்ளலாம்.

10 : Dark Chocolate / டார்க் சாக்லேட் :

இந்த டார்க் சாக்லேட் ஆனது, இரத்த அழுத்தத்தை ஏற்படுவது குறைக்க பயன்படுகிறது. மேலும் இந்த டார்க் சாக்லேட் ஆனது, அதிக அளவு கோகோ என்னும் பொருள் இந்த டார்க் சாக்லேட் இல் உள்ளது.

இதனால் இந்த டார்க் சாக்லேட் ஆனது நல்ல முறையில் உங்களுக்கு இதய பாதிப்பு வராமல் பாதுகாக்கிறது. இது இதய தமனிகளில் நன்கு செயல்படுகிறது. இந்த டார்க் சாக்லேட் இல் நல்ல கொழுப்பு உள்ளது. இதனால் இதை கிடைக்கும் நேரம், அவ்வப்போது எடுத்து கொள்ளலாம். உங்கள் இதய நோய் வராமல் பாதுகாக்க படும்.

தற்போது இந்த பதிவு மூலம் பல நல்ல உள்ளங்களுக்கு பல வகையில் பல இதய பாதிப்பு போன்று முக்கிய உயிர்காக்கும் விஷயத்திற்காக நாம் அதிக சிரமத்தில், உங்களுக்காக இவைகளை, இந்த மாதிரி படைப்புகளை உங்கள் கன் முன்னே கொண்டு வருகிறோம்.

நீங்கள் பார்த்து இதை நீங்கள் படித்து, உங்கள் நண்பர்கள், உறவினர், என அனைவருக்கும் இதை அனுப்புங்கள். ஒரு உயிரை காப்பாற்ற நீங்கள் எடுக்கும் ஒரு முடிவு, இதை மற்றவர் கண்முன்னே கொண்டு சென்று சேர்த்து அவர்களையும் வாழ வைக்க நீங்கள் எடுக்கும் முடிவு.

மேலும் படிக்க : 5 Best Foods For Motility and Sperm Count in Tamil | விந்தனுவுக்கு 5 உணவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *