- Health benefits of Shallots in Tamil | சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்கள் :
- சின்ன வெங்காயம் 100 கிராம் அளவில் :
- பெரிய வெங்காயம் 100 கிராம் அளவில் :
- சின்ன வெங்காயத்தில் உள்ள மற்ற சத்துக்கள் :
- பெரிய வெங்காயத்தில் உள்ள மற்ற சத்துக்கள் :
- சின்ன வெங்காயம் எடுப்பதால் தடுக்கப்படும் நோய்கள் :
- Oxidate injury என்னும் கெட்ட கழிவுகள் உடம்பில் சேர்ந்தால் நடக்கும் தீமைகள் :
Health benefits of Shallots in Tamil | சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்கள் :
நாம் இந்த பதிவு மூலம் சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்களும், சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் இடையே உள்ள வேறுபாடும், மற்றும் இந்த சின்ன வெங்காயத்தை அதிகம் எடுத்து வந்தால் ஏதேனும் பக்க விளைவு வருமா ? இல்லை வராதா ? அப்படி பக்க விளைவு வந்தால் என்ன ஆகும் என்பதை எல்லாம் பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
அதற்கு முன்பாக சில விசயங்கள் பற்றி, சின்ன வெங்காயம் பற்றி அடிப்படை விசயங்கள் சிலவற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் என்பவர்கள் இதை செய்து இருந்தாலும் அதில் ஒரு காரணம் இல்லை, பல பல காரணமும், பல பல அறிவியலும் ஒளிந்திருக்கும்.
அதுபோல வெங்காயத்தை அதுவும் குறிப்பாக சின்ன வெங்காயம் என்பதை நமது முன்னோர்கள் அன்றாடம் வாழ்வில் உணவாக எடுத்து வந்தார்கள். அதன் காரணமாக அவர்கள் பெற்ற நலமும் வளமும் ரொம்பவே அதிகம்.
இதனால், மருத்துவ குணமுடைய இந்த வெங்காயத்தை மருத்துவத்திற்கும் அதிகம் பயன்படுத்தி வந்தனர். பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இந்த சின்ன வெங்காயம் பயன்கள், சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் இடையே உள்ள வித்தியாசம், மற்றும் அதிகம் இந்த சின்ன வெங்காயம் எடுத்து வந்தால் வரும் பக்க விளைவு பற்றி பார்க்கலாம் வாங்க.
சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் இடையே உள்ள சாதுக்களின் அளவுகளின் விகிதம் பற்றி பார்ப்போம்.
மேலும் படிக்க : Exercise to Protect your Eyes From Phone in Tamil | ஃபோன் பார்ப்பதால் கண்களை பாதுகாக்கும் சில உடற்பயிற்சிகள்
சின்ன வெங்காயம் 100 கிராம் அளவில் :
Carbohydrates : 17 gram
Fat : 0.1 gram
Protein : 2.5 gram
Energy : 72 Kcal
என்ற விகிதத்தில் நமக்கு சத்துக்கள் கிடைக்கின்றது.
பெரிய வெங்காயம் 100 கிராம் அளவில் :
Carbohydrates : 9.3 gram
Fat : 0.1 gram
Protein : 1.1 gram
Energy : 40 Kcal
என்ற விகிதத்தில் நமக்கு சத்துக்கள் கிடைக்கின்றது. இதனை வைத்து நீங்கள் இப்போது பார்க்கும் போது நீங்கள் ஒன்று மட்டும் உணர்வீர்கள். அது என்ன என்றால், ஏன் பெரிய வெங்காயம் விட சின்ன வெங்காயம் அதிகம் உடம்புக்கு நல்லது என்று நமது முன்னோர்கள் அன்றாடம் பயன்படுத்தி, நம்மிடம் சொல்லி வந்தார்கள் என்று.
இதுமட்டுமல்லாமல், சின்ன வெங்காயத்தில் உள்ள கால்சியம், விட்டமின் பி6, மெக்னீசியம், விட்டமின் சி, மற்றும் இரும்பு சத்து பற்றியும், பெரிய வெங்காயத்தில் உள்ள கால்சியம், விட்டமின் பி6, மெக்னீசியம், விட்டமின் சி, மற்றும் இரும்பு சத்து இவற்றை பற்றியும் தனி தனியே பார்க்கலாம்.
சின்ன வெங்காயத்தில் உள்ள மற்ற சத்துக்கள் :
கால்சியம் சத்து : 03 %
மெக்னீசியம் சத்து : 05 %
விட்டமின் பி6 : 15 %
விட்டமின் சி : 13 %
இரும்பு சத்து : 07 %
பெரிய வெங்காயத்தில் உள்ள மற்ற சத்துக்கள் :
கால்சியம் சத்து : 02 %
மெக்னீசியம் சத்து : 02 %
விட்டமின் பி6 : 05 %
விட்டமின் சி : 10 %
இரும்பு சத்து : 01 %
இவ்வாறு இந்த அளவில் பெரிய வெங்காயத்தில் மற்றும் சின்ன வெங்காயத்தில் நமக்கு கிடைக்கும் சக்திகளின் அளவுகளாகும். இதனால் இதனை பார்க்கும் போது, படிக்கும் போதே நீங்கள் உணர்வீர்கள். உங்களுக்கு எந்த வெங்காயம் தேவை என்று. ஆம் சின்ன வெங்காயம் தான் நமக்கு மிகவும் அதிக நல்லது.
இதன் காரணமாக தான் நமது முன்னோர்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவில் இந்த சின்ன வெங்காயம் சேர்த்து வந்தார்கள். நமது பாரம்பரிய உணவில், மற்றும் பாரம்பரிய மருந்தில் இந்த சின்ன வெங்காயம் பயன் படுத்துகிறார்கள். சத்துக்கள் அளவு எடுத்து பார்க்கும் போது பெரிய வெங்காயத்தில் உள்ள சத்து விட சின்ன வெங்காயம் அதிக சத்து நிறைந்தது. இதனால் இந்த சின்ன வெங்காயம் நீங்கள் உணவாக எடுத்து கொள்ளலாம்.
மேலும் படிக்க : விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil
சின்ன வெங்காயம் எடுப்பதால் தடுக்கப்படும் நோய்கள் :
சின்ன வெங்காயத்தில் நாம் பார்த்த சத்துக்கள் இல்லாமல், அதிக அளவில் Anti-Oxidents / ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இந்த ஆன்டி ஆக்சிடென்ட் என்பது அதிகம் உள்ளதால், Oxidate injuries எனப்படும் நச்சுகளை சமநிலை ஆக்கி நமது உடம்பில் இருந்து இந்த Oxidate injuries எனப்படும் கெட்ட கழிவுகளை வெளியேற்றும் தன்மை கொண்டது.
இந்த oxidate injuries எனப்படும் இந்த நச்சு கழிவுகள் நமது உடம்பில் உருவாக அல்லது நமது உடம்பில் சேர காரணம் என்ன என்றால், நாம் தினம் உண்ணும் உணவில் இருந்து, நாம் வெளியில் அதிகம் போகும் போது, வரும் போது, தேவை இல்லா உணவு உண்பது, என எதிலும் இருந்து சிறிது சிறிதாக இந்த கெட்ட கழிவுகள் நமது உடம்பில் சேருகின்றன.
இப்படி oxidate injuries எனப்படும் இந்த கெட்ட கழிவுகள் உடம்பில், சேர்ந்தால் அப்படி என்ன ஆகும், என்று நீங்கள் யோசிக்கலாம்.கேள்வி கூட எழலாம். இந்த கெட்ட கழிவுகள் உடம்பில் சேர்ந்தால் என்ன ஆகும் என்பதை பார்க்கலாம்.
Oxidate injury என்னும் கெட்ட கழிவுகள் உடம்பில் சேர்ந்தால் நடக்கும் தீமைகள் :
A) புற்று நோய்
B) இதய நோய்
C) சர்க்கரை நோய்
D) தொற்று நோய்கள்
என இதுபோல் நமது உடம்பில் உள்ள பகுதியை, அந்த செல்களை பாதிக்க கூடியது. மற்றும் நோய்கள் வர காரணம் ஆகின்றது. இதனால் இந்த ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த இந்த சின்ன வெங்காயம் சேர்த்து வந்தால், இந்த கெட்ட கழிவுகளை அளித்து வெளியேறும். மற்றும் நமது உறுப்புகளை இதன் மூலம் பாதுகாப்பாக வைக்க உதவுகிரது.
மேலும் படிக்க : Best Top 5 Foods For Build Your Muscle | Tamil
இதயத்திற்கு நல்லதா சின்ன வெங்காயம் ?
சின்ன வெங்காயம் ஆனது இதயத்திற்கு ரொம்பவே நல்லது. இந்த சின்ன வெங்காயம் உள்ளே அல்லிசின் என்னும் ஒரு பொருள் உள்ளது. இது பல நல்ல விசயம் செய்ய கூடியது. இந்த Allicin என்னும் பொருள் ஆனது, blood pressure எனப்படும் இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு இந்த சின்ன வெங்காயம் ஒரு வரமாகும்.
இந்த சின்ன வெங்காயம் தினமும் உண்டு வருவதால், நமக்கு நமது இரத்த குழாயில் இந்த allicin என்னும் பொருள் செல்வதால், நமது இரத்த குழாயை விரிவடைய செய்து, இரத்த ஓட்டத்தை நன்கு செல்லும் படு செய்து, இரத்த கொதிப்பை கட்டுப்படுத்துகிறது. ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்கிறது.
இந்த சின்ன வெங்காயம் இதுமட்டுமல்லாமல் தேவையில்லா கொழுப்பை தடுக்கிறது. முக்கியமாக நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க கூடியது. முக்கியமாக நமது உடலில் உள்ள இரத்த குழாயில் இரத்தம் உறைதல் போன்றவற்றையும் தவிர்க்கிறது. இதனால் நமது இதயத்தில் ஏற்படும் மாரடைப்பு போன்றவற்றையும் தடுக்கிறது. இதனால் இந்த சின்ன வெங்காயம் ஒரு நல்ல இயற்கையான உணவு மற்றும் மருந்து என்று கூட நாம் கூறலாம்.
மேலும் படிக்க : What is Crypto currency ? | கிருப்டோ கரன்சி என்றால் என்ன ? | Tamil
அலர்ஜி பிரச்சினைக்கு சின்ன வெங்காயம் நல்லதா ?
பொதுவாக அலர்ஜி என்பது பலவகையில் ஒருவருக்கொருவர் மாறுபடும். இந்த அலர்ஜி பிரச்சினை இருப்பவர்களுக்கு, அடிக்கடி மூக்கு அடைப்பு, மூக்கு உருத்துவது, கண்கள் எரிச்சல், கண்களில் அடிக்கடி தண்ணீர் வருதல் போன்றவை ஏற்படும். இந்த மாறி உள்ளவங்களுகு ஏன் அப்படி ஏற்படுகிறது என்றால், histamine எனப்படும் விசயம் அதிகப்படியாக உற்பத்தி ஆகுவதனால் ஏற்படுகிறது.
இந்த மாதிரி நமக்கு ஆகுவதனால் நாம் அடிக்கடி அதற்கென மாத்திரை மருந்துகள் எடுத்து வருகிறோம். ஆனால் இந்த சின்ன வெங்காயம் என்பது இயற்கையாக அதிக சத்து கொண்டு உள்ளதால், Anti histamine எனப்படும், விசயம் இந்த சின்ன வெங்காயம் கொண்டு உள்ளது. இதனால் இந்த சின்ன வெங்காயம் தினமும் எடுத்து வருவதால், histamine எனப்படும் உற்பத்தி குறைக்கப்பட்டு, மூக்கு எரிச்சல், கண்ணில் நீர் வருதல் மற்றும் இதுபோன்ற அலர்ஜி பிரச்சினை உள்ளவர்கள் எடுத்து வந்தால் இந்த அலர்ஜி பிரச்சினை சரியாகும்.
சின்ன வெங்காயம் சளி பிடித்தல் மற்றும் ஆஸ்த்துமா – க்கு நல்லதா ?
ஆம், சின்ன வெங்காயம் அலர்ஜி மட்டும் அல்லாமல், ஆஸ்த்துமா மற்றும் சளி, அடிக்கடி பிடித்தல், மற்றும் இரும்மல், போன்றவைக்கு நல்லது. ஏன் என்றால் சின்ன வெங்காயத்தில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்து உள்ளது.
இந்த சின்ன வெங்காயத்தில் Anti virus, Anti Microbial, Anti Bacterial, போன்ற அனைத்து விஷயங்களும் உள்ளது. இதனால் நமது உடம்பிற்கு நோய் எதிர்ப்பு சக்தி எனப்படும் immunity power அதிகமாகி, எந்த நோய் வராமல் பாதுகாக்க செய்கிறது.
இதனை மீறி என்றாவது நம் உடலில் ஏதாவது நோய் வந்தாலும் கூட நாம் மருந்து எடுத்து கொள்ளும் போதே இந்த சின்ன வெங்காயம் எடுத்து கொள்ளலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய் விரைவில் குணமாகி, மேற்கொண்டு நம்மை பாதுகாக்கிறது.
மேலும் படிக்க : மார்பு பகுதியில் வலி வந்தால் மாரடைப்புக்கான அறிகுறியா ? What is Heart Attack Symptoms in Tamil
சின்ன வெங்காயம் நமது தோலுக்கு நல்லதா ?
சின்ன வெங்காயம் நமது தோலுக்கு மிகவும் நல்லது ஆகும். உங்களுக்கு தோல் சம்பந்தபட்ட நோய்கள் ஏதாவது இருந்தால், இந்த வெங்காயத்தின் மூலம் சரி செய்யலாம். உதாரணமாக உங்களுக்கு சொரி, தேமல், படர்தாமரை, Fungul infections, பருக்கள், இதுபோன்று உங்களுக்கு ஏதாவது இருந்தால், இந்த சின்ன வெங்காயம் எடுத்து அரைத்து, அதனை அந்த தோல் வியாதி உள்ள இடத்தில் தடவி வந்தால் சரியாகும்.
இதுமட்டுமல்லாமல் இந்த சின்ன வெங்காயம் எடுத்து அரைத்து அதனை நாம் அந்த தோல் வியாதி உள்ள இடத்தில் தடவும் போது, அந்த சின்ன வெங்காயத்தை சிறிது மஞ்சள் சேர்த்து தடவி வரலாம். இப்படி தடவி வந்தால் நமக்கு தோல் வியாதிகள் வராமல் தடுக்கவும், மற்றும் வந்தால் விரைவில் சரி செய்யவும் இந்த சின்ன வெங்காயம் பயன்படுகிறது.
மேலும் படிக்க : விந்துவை அடக்கலாமா ? அடிக்கடி வெளியேற்றலாமா ?
சின்ன வெங்காயம் நமது முடிக்கு நல்லதா ?
சின்ன வெங்காயம் பொறுத்தவரை எத்தனையோ நன்மை உண்டாகும் என்று பார்த்துக்கொண்டிருக்கும் இந்த நிமிடம், நமது முடிக்கும், கூந்தலுக்கும் நல்லது என்று தெரிந்து கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் வைத்துள்ள சல்பர் என்ற விசயம் ஆனது நமது முடி நன்கு வளர கூடிய புரோடின் சதுக்களை கொடுக்கிறது.
இதனால் முடி நன்கு வரல வேண்டும் என்றால், முடி கருமையாக வளர வேண்டும் என்றால், முடி அதிகம் அடிக்கடி கொட்டுகின்றது என்றால், dandruff எனப்படும் விசயம் இருந்தால், நீங்கள் இந்த சின்ன வெங்காயம் எடுத்து அதனை அரைத்து அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து, நன்கு கலந்து அதனை தலையில், முழுவதும் தேய்த்து 10 முதல் 15 நிமிடம் வரை வைத்து இருந்து பின்னர் குளித்து வரலாம். இதனால் முடி பிரச்சினை அனைத்தும் சரி ஆகிவிடும்.
சின்ன வெங்காயம் எப்படி உண்ணுவது ?
சின்ன வெங்காயம் இது இல்லாமல், சர்க்கரை நோயாளிகள் எடுத்து வரலாம். மற்றும் உடல் பருமன் குறைக்க கூடியது. மேலும் இதனை நீங்கள் நமது முன்னோர் காலத்தில் பயன்படுத்தியது போல, பச்சையாக கூட உண்ணலாம். பச்சையாக இந்த சின்ன வெங்காயம் எடுத்து கொள்ளும் போதுதான் நமக்கு முழுமையாக சத்து கிடைக்கும்.
இப்படி பயன்படுத்த முடியவில்லை என்றால், நாம் சமையலில் சேர்த்து சாப்பிடலாம். இதனால் பல பல நன்மைகள் கிடைக்கும். இப்படி அனைவருக்கும் தெரியாத இந்த சின்ன வெங்காயம் ரகசியம் பற்றி பார்த்தோம். பார்த்து பயன் பெற்று கொள்ளுங்கள். அனைவரும் வளமாக வாழுங்கள்.
மேலும் படிக்க : Top 10 Healthy Foods For Heart in Tamil | Prevent Heart Attack in Tamil