தலைமுடி உதிர்வதை தடுக்க 10 வழிமுறைகள் | 10 Tips to control Hair Fall permanently in Tamil

தலைமுடி உதிர்வதை தடுக்க 10 வழிமுறைகள் | 10 Tips to control Hair Fall permanently in Tamil

வணக்கம், தலைமுடி என்பது எல்லோருக்குமே அத்தியாவசியமான ஒன்று. இந்த தலைமுடி ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மிகவும் முக்கியம்.

நாம் சரியான வகையில் தலைமுடியை கையாள்வதும் பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலம், ஆகாமல் தடுக்க முடியும்.

இந்த தலைமுடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் இல்லாமல், நல்ல முறையில் வைத்திருக்க முடியும்.

Hair fall ஆரோக்கியத்தை காட்டுவது மட்டுமின்றி, இது ஒரு மனிதருக்கு முக்கியம்.

ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ, ஒரு அழகின் அடையாளமாக உள்ளது.

பலருக்கும், இந்த காலத்தில் சிறுவயது முதலே உணவு பழக்கம் காரணமாகவும், சத்துக் குறைவு காரணமாகவும்,

ஏதாவது ஒரு பிரச்சனையால் முடி கொட்டுதல் அல்லது தலைமுடி உதிர்தல் என்ற பிரச்சனை பலருக்கும் நடந்து,

ஒரு சிறு வயதை கடக்கும்போது உதாரணமாக 30 வயது தொடும் முன்னரே,hair fall எனப்படும் முடி உதிர்தல் அதிகமாகி வழுக்கை தலை கூட ஆகிவிடுகிறது.

இதனால் உங்களுக்காக இந்தப்பதிவில் முடி உதிர்வதை தடுக்க 10 குறிப்புகள் கொடுக்கின்றோம்.

இதை பார்த்து தெரிந்து பயன்படுத்தி ஆரோக்கியமான தலைமுடியை, ஒவ்வொரு ஆணும் பெண்ணும் வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும், நாம் கூறுவதன் மூலம் முடி உதிர்வை தவிர்த்து, ஆரோக்கியமான வளர்ச்சியை பெற்று ஆரோக்கியமாக வைத்துகொள்ள 10 வழிமுறைகள் பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க : தீக்காயம் ஏற்பட்டால் முதல் உதவி செய்வது எப்படி? | First Aid For Fire Burns in Tamil

1. Nutritious foods/ ஊட்ட சத்து உணவுகள்

முடி உதிர்தல் அல்லது முடி வளர்ச்சிக்கு ஊட்ட சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

நாம் எந்த அளவுக்கு ஊட்டசத்து நிறைந்த பொருட்களை உட்கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நமது உடலும் நம் முடியின் வளர்ச்சியும் பாதுகாப்பும் மேம்படுகிறது.

Non veg/ அசைவ உணவு:

முட்டை, பால், மீன் போன்ற உணவுகளை அதிகம், நமது உணவில் எடுத்துகொள்ள வேண்டும்.

முட்டை உட்கொள்ளும் போது, நமக்கு அதிகப்படியான சத்துக்கள், கிடைக்கிறது. முக்கியமாக முட்டையில் புரத சத்து, அதிகம் நிறைந்து உள்ளது.

மீன் அதிகம் சாப்பிடு வந்தால், மீனில் அதிக புரதம் உள்ளது. மேலும் பாலில் அதிக அளவு சதிலுக்கள் இருக்கிறது.

இதனால், நீங்கள் Nonveg எனப்படும், புரத சத்து அதிகம் இருப்பதால், சரியான நேரத்தில், தேவையான அளவுக்கு அடிக்கடி,

மேலும் படிக்க : பாதாம் மற்றும் பிஸ்தா விட அதிக ஊட்டச்சத்து நிறைந்த விலை குறைவான உணவுகள் :

இந்த மூன்று பொருளையும் சாப்பிட முடி உதிர்தல்,சரியாகி முடி நல்ல முறையில் இயற்கையான வழியில் வளர்ச்சி பெரும்.

Veg/ சைவ உணவு :

i) சர்க்கரைவள்ளி கிழங்கு:

இந்தக் கிழங்கு சாப்பிடவும் இனிமையாக இருக்கும். இந்த கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்,

இந்த சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிகம் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளது. இது தலைமுடியின் வளர்ச்சிக்கு நன்கு உதவும்.

ii) Nuts/ கொட்டை வகைகள் :

நட்ஸ் வகைகள் அப்படின்னு பார்க்கும் போது, அதிகப்படியான சிங்க் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளது.

மேலும், இதில் அதிகப்படியான நல்ல கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. நட்ஸ் வகைகள் எதை எடுத்துக்கொள்ளலாம் என்று பார்த்தால்,

வேர்க்கடலை எடுத்துக்கள்ளலாம், பாதாம் பருப்பு மற்றும் பிஸ்தா பருப்பு முந்திரி பருப்பு போன்றவை முக்கியமாக எடுத்துக் கொள்ளும் உணவுகளில் அடங்கும்.

தினமும் ஒரு கைப்பிடி முதல் இரண்டு கைப்பிடி அளவு வரை எடுத்துக்கள்ளலாம்.

2. Head Massage/ ஹெட் மசாஜ்

அதிகமாக முடி உதிர்தல் பிரச்சினை இருப்பவர்கள், தினமும் அவரவர் விருப்பமான நேரத்தில் முடிந்த அளவு,

இரவு நேரத்தில் தேங்காய் எண்ணையை எடுத்து தலையில் தேய்த்து, நல்ல முறையில் நன்றாக உங்கள் விரல்களின் மூலம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

இப்படி செய்து வருவதால் உங்கள் தலைமுடி இருக்கும் இடத்தில், நல்ல முறையில் இரத்த ஓட்டங்கள் செல்லும் வகையில், இந்த மசாஜ் உதவுகிறது.hair fall – ம் குறையும்.

மேலும் படிக்க : சுயஇன்பம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா? Does Masturbation cause infertility

இதனை நீங்கள் வாரம் இரண்டு முதல் மூன்று நாட்கள் கூட இரவில் செய்யலாம். முடி உதிர்தல் பிரச்சனை இருப்பவர்கள்,

வாரத்தில், மேலும் உங்களால் முடிந்த அளவு நாட்களில் இந்த மசாஜ் செய்வது உங்கள் தலையில், ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி,

உங்கள் முடி உதிர்தல் பிரச்சனையை சரிசெய்து உங்கள் முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கொடுத்து முடியை நல்ல முறையில் வளரச் செய்யும்.

3. Stop Alcohol & Smoking/ ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கம் நிறுத்துதல்

தலைமுடி கொட்டுதல் பிரச்சன இருப்பவர்கள், முக்கியமாக புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கம் இருந்தால் நிறுத்திக்கொள்வது நல்லது.

ஏனெனில், முடி கொட்டுதல் பிரச்சினை இருப்பவர்கள், அதிகம் ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கம் எடுத்து வரும்போது,

நமது உடலில் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் செய்து விடுகிறது.

இது மட்டுமில்லாமல் அதிகப்படியான இன்ஃப்லம்மேஷன் ஏற்படுத்துகிறது. மேலும், இதன் காரணமாக ஹேர்பாலிக்கள் பாதிக்கப்பட்டு,

முடி கொட்டுதல் பிரச்சனை அதிகமாகும். இதனால் உடனே இதை நிறுத்திக் கொள்வது நல்லது.

4. Yoga/ யோகா செய்தல்

யோகா செய்தல் மிகவும் நல்லது ஆனால், இந்த யோகாவில் சில யோகாக்கள், தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகின்றது.

பொதுவாக யோகா என்பது ஒரு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஒரு அமைதியையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியது.

மேலும் படிக்க : மார்பு பகுதியில் வலி வந்தால் மாரடைப்புக்கான அறிகுறியா ? What is Heart Attack Symptoms in Tamil

நாம் எந்தவித குழப்பமும் இன்றி இருந்தாலே முடி பிரச்சனை சற்று குறையும்.

இதனால் யோகா முறையாக கற்று செய்து வந்தால், அதன்மூலம் மன அமைதி பெற்று, முடி உதிர்தல் பிரச்சனையை தடுக்க வழிவகை செய்யும். இதனால் யோகாவை தினமும் செய்து வாருங்கள்.

5. Drink Water/ தண்ணீர் குடித்தால்

தண்ணீர் தினமும் அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் தினமும், ஒருவர் 10 முதல் 12 டம்ளர் வரை குடிக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் கணக்கில் வைத்துக் கொண்டால் ஒருவர் சராசரியாக மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரை சரிவர குடிக்கவில்லை என்றால் நமது முடி டிஹைடிரேட் ஆகக்கூடும்.

டிஹைடிரேட் என்பது நமது முடியில் ஏற்பட்டால் வரட்சி காரணமாக நமது முடி உடைதல் ஏற்படக்கூடும். இதனால் தண்ணீரை சரிவர குடித்து,

வருவதால் டிஹைட்ரேட் ஏற்படாமல் தடுத்து நமது முடியை ஆரோக்கியத்துடனும் முடி உடைதல் மற்றும் முடி உதிர்தல் போன்றவை தடுக்க முடியும்.

6. Doing workout/ உடற்பயிற்சி செய்தல்

நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்து வருவது ரொம்பவே நல்லது. இது உங்கள் முடி கொட்டுதல் பிரச்சினையே அறவே தடுக்கும்.

ஏனென்றால் நாம் உடற்பயிற்சி செய்யும் போது உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீரான வகையில் செல்லும்.

இதன் காரணமாக நமக்கு நல்ல ரத்த ஓட்டம் செய்வதன்மூலம் முடி இருக்கும் இடத்திற்கும் நல்ல தோட்டம் சென்று அடையும்.

இதனால் நல்ல முறையில் முடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். மேலும் நமது உடலில் உடற்பயிற்சி செய்வதால் உடலை மேம்படுத்தக்கூடிய ஹார்மோன் லெவல் ஆனது அதிகரிக்கக்கடும்.

கண்டிப்பாக தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது நல்லது, மேலும் உங்களுக்கு இந்த உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் ஸ்ட்ரெஸ் எனப்படும்,

சோர்வுகள் நீங்கி பல குழப்பங்கள் நீங்கி தெளிவு உடன் இருப்பதால் முடி கொட்டுதல் தடுக்கப்படும்.

7. Hair Mask/ ஹேர் மாஸ்க்

ஹேர் மாஸ்க் எனப்படும், இந்த முறையை நீங்கள் செய்யலாம். முடி கொட்டுதல் பிரச்சினை அதிகமாக இருந்தால் நீங்கள் சின்ன வெங்காயம்,

இல்லை வேப்ப இலை, கொய்யா இலை, இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அதோடு சிறிதளவு தேங்காய் எண்ணைய எடுத்து நன்றாக கலந்து,

மேலும் படிக்க : 5 Best Foods For Motility and Sperm Count in Tamil | விந்தனுவுக்கு 5 உணவுகள்

அதை தலையில் முழுவதும் தேய்த்து வைத்து இந்த மாஸ்க்கை ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை கூட வைத்து,

பின்னர் குளித்துவிட வேண்டும். இப்படி அதிகமாக முடி கொட்டுதல் பிரச்சனை இருப்பவர்கள் மாதம் இரண்டு முதல் மூன்று முறையாவது வாரம் 1 என்ற வீதம் கூட எடுத்துக் கொள்ளலாம்.

மாஸ்க் செய்முறையை செயல்படுபவர்கள், சொரியாசிஸ் போன்ற நோய்கள் எதுவும் இல்லாதவாறு இருக்க வேண்டும்.

எந்த ஒரு பக்கவிளைவும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களும், இல்லாதவாறு இருத்தல் முக்கியம்.

அப்படி நீங்கள் செய்ய வேண்டுமென்றால் உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று செய்வது சிறப்பு.

8. Vitamin supplement/ வைட்டமின் மருந்துகள்

நாம் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோல இன்று இருக்க காலத்தில் அனைவராலும், தேர்ந்தெடுத்து சாப்பிட முடியவில்லை.

எந்தெந்த உணவில் எந்தெந்த சத்துக்கள் இருக்கிறது, என்பதே பலருக்கும் தெரியவில்லை.

இதனால் வைட்டமின் சப்ளிமெண்ட் எனப்படும் சில மல்டி விட்டமின் டேப்லட்களை எடுத்துக்கொள்ளலாம். மருத்துவரை அணுகி எடுத்துக் கொள்ள வேண்டும்.

விட்டமின் மருந்து என்றவுடன் நாம் பொதுவாக ஏதோ ஒன்று என்று எடுத்து சாப்பிடக்கூடாது.

மேலும் படிக்க : Lungs Detox In Tamil | நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி ?

சிங்க், செலினியம், இரும்பு சத்து, வைட்டமின் இ, வைட்டமின் ஏ, போன்ற சத்துக்கள் அடங்கிய மல்டி விட்டமின் மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது. மருத்துவரை அணுகி மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

9. Consult Doctor/ மருத்துவரை அணுகுதல்

உங்களுக்கு தலைமுடி சார்ந்த பிரச்சினை இருந்தால், தோல் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகுவது சிறந்தது.

மருத்துவரை அணுகினால் அவர்கள் எதனால் உங்களுக்கு இந்த முடி கொட்டுதல் பிரச்சினை ஏற்படுகிறது. என்றும், மேலும் அதனை தடுக்க வழிவகை செய்வதும் செய்யவும் உதவுவார்கள்.

உரிய மருத்துவரை அணுகுவது நல்லது. அணுகிய பின்னர் நாம் கூறிய அனைத்தையும், நீங்கள் உங்களுக்கு ஏற்றவாறு,

ஏதாவது சில விஷயங்களை கடைபிடித்தால் மேலும் முடி உதிர்வைத் தடுத்து விட முடியும். பாதுகாப்பான முறையில் முடியை இயற்கையாக நல்லமுறையில் வலுவாக வளர்க்கவும் முடியும்.

10. செய்ய கூடியதும் செய்ய கூடாததும்

a. இரவில் விரைவில் தூங்க வேண்டும்.

b. நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

c. நல்ல ஷாம்புவை பயன்படுத்த வேண்டும் சரியான ஷாம்புவை பயன்படுத்தவில்லை என்றால் முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்படும்.

d. அடிக்கடி முடிக்கு ஹீட்டர் டிரையர் போன்றவை பயன்படுத்தக்கூடாது.

e. அதிகப்படியான சிந்தனைகள் தொடர்ச்சியாக செய்தல் தவிர்க்க வேண்டும்.

Notes:

இதில், நாம் பார்த்த அனைத்தும் உங்களுக்கு பயன்படும் என்று எண்ணி, அதிக அளவில் ஈடுபட்டு தயார் செய்து உள்ளோம்.

பயன்படுத்தி கொள்ளுங்கள். எதும் சந்தேகம் அல்லது உடல் சார்ந்த பிரச்சினை இருந்தால் மருத்துவர் அனுமதி பெற்று செய்யுங்கள்.

மேலும் படிக்க : விந்துவை அடக்கலாமா ? அடிக்கடி வெளியேற்றலாமா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *