Best Foods for summer season in Tamil | Avoiding Foods in summer season in Tamil

வெயில் காலத்துக்கு தேவையான சிறந்த உணவுகளும், வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

வணக்கம், பொதுவாக Summer Season Foods எனப்படும், வெயில் காலத்தில் அதிக அளவில் நமது உடல் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

ஏனென்றால் வெயில் காலத்தில் நமது உடல் அதிக அளவில் சோர்வடைதல், அதிக அளவு வியர்த்தல், அம்மை நோய்,

மயக்கம் ஏற்படுதல், தலைவலி போன்ற பல பிரச்சினைகள் ஏற்படும். அதிக அளவில் நம்மால் வெளியில் கூட செல்ல முடியாது.

இது போல பல பிரச்சனைகள் இருக்க, நாம் வெயில் காலத்திற்கு ஏற்ப, நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுகள் என்று பார்க்கலாம்.

மற்றும் என்னென்ன உணவுகள் summer season foods எடுத்துக்கொள்ள கூடாது என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம். பார்த்து,

உங்கள் உடலை வெயில் காலத்தில் எளிதான முறையில் நல்ல உணவின் மூலம் ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். வாங்க பார்க்கலாம்.

1) இளநீர்:

இளநீரை வெயில் காலத்தில் தினமும் கூட எடுத்துக் கொள்ளலாம். அப்படி எடுக்கும்போது, நமது உடலில் உள்ள சூட்டை வெகுவாக குறைத்து விடுகிறது.

நமது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கிறது. மேலும் நமது உடலுக்கு தேவையான வைட்டமின், மினரல், போன்ற சத்துக்களை இந்த இளநீர் கொடுக்கிறது. மேலும்,

இளநீர் சாப்பிட்டு, அதிலுள்ள தேங்காயை சாப்பிட்டுவர வயிற்றுப்புண்ணும் சரியாகும். இதனால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் இதில் கொடுக்கிறது.

இதனால் முக்கியமாக வெயில் காலத்தில் summer season foods ஆக இந்த இளநீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

2) தண்ணீர்:

நமது உடல் வெயில் காலத்தில் எளிதில் Dehydrate ஏற்படக்கூடும். வெயிலின் தாக்கத்தினால், நமது உடலில் உள்ள நீர் தன்மையானது,

வற்றப்பட்டு காய்ந்து நீர்த் தன்மையை இழந்து டிஹைடிரேட் ஆகும். இப்படி ஆனால், நமது உடல் எளிதில் சோர்வடைந்து எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது.

இந்த நிலையை தடுக்க வெயில் காலத்தில் சாதாரண நாட்களை விட அதிக நீரை குடிக்க வேண்டும்.

சிறிது நேரத்திற்கு ஒரு முறை அதிக தண்ணீரை குடித்து, சிறுநீர் கழித்தல் போன்ற விஷயங்களை, அதற்கு ஏற்றார் போல் செய்து கொள்ள வேண்டும்.

இப்படி செய்து வருவதால், நமது உடல் டிஹைடிரேட் ஆகாமல் நீர் சக்தியின் மூலம் பாதுகாக்கப்பட்டு சோர்வடையாமல் தடுத்து,

ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பயன்படுகிறது. இதனால் நீரினை அதிக அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க : இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுகள் | Blood Purifying Foods in Tamil

3) தர்பூசணி பழம்:

தர்பூசணி பழத்தில் 90% நீர் சத்து நிறைந்துள்ளது. நீங்கள் வேறு எந்த பழங்களையும் விட இந்த பழத்தில் தான் நீர்சத்து அதிகம் நிறைந்து காணப்படுகிறது.

இதனால் வெயில் காலத்தில் அதிக அளவு தர்பூசணி பழங்களை எடுத்துக்கொள்ளுதல், உங்கள் உடலுக்கு,

அதிக அளவு சத்துக்களையும் கொடுத்து உடலையும், சோர்வடையாமல் பாதுகாத்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

4) கிர்ணி பழம்:

கிர்ணி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் கிர்ணிப் பழத்தை குறிப்பாக,

வெயில் காலத்தில் எடுத்துக்கொள்வது அதிக பலன்களை கொடுக்கும். இந்த கிர்ணி பழத்தில் அதிக குளிர்ச்சி தன்மை இருப்பதால் இதனை வெயில் காலத்தில் summer season foods ஆக எடுத்துக் கொள்வது,

உங்கள் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தந்து ஆரோக்கியமாக உடல்நிலையை வைத்துக் கொள்ளும். மேலும்,

இது அதிக குளிர்ச்சி தன்மை உடையது என்பதால் அதிக அளவு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். தேவையான அளவு சிறிது சிறிதாக சாப்பிட இந்த பழம் சிறந்ததாக இருக்கும்.

அதிக அளவு எடுத்துக் கொண்டால் சளி காய்ச்சல் இருமல் போன்ற பிரச்சினை வர வாய்ப்பு உண்டு இதனால் அளவாக எடுத்துக் கொள்ளவும்.

தீக்காயம் ஏற்பட்டால் முதல் உதவி செய்வது எப்படி? | First Aid For Fire Burns in Tamil

5) மாதுளை பழம்:

மாதுளைப்பழத்தில் Vitamin A, vitamin C, vitamin K போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இது மட்டுமல்லாமல்,

மாதுளை பழத்தில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இதனால் இந்த மாதுளை பழத்தை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் நமது உடல் அதிகம் வெயில் சூட்டினால் பாதிக்கப்படாமல் சாதாரணமான நிலையில் இருக்க உதவுகிறது.

மேலும் இந்த மாதுளை பழம் உடலிலுளள பலவகையான விஷயங்களுக்கு உதவுகிறது.

6) நீர் மோர்:

நீர் மோர் என்பது நமது முன்னோர்கள் காலம் தொன்று தொட்டு இப்போது வரை அனைவருக்கும் தெரிந்தது.

இது ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்த நீர் மோரில் நல்ல குளிர்ச்சி தன்மை உள்ளது. இதனால் வெயில் நேரத்தில் இந்த நீர்மோர் எடுத்துக்கள்வதால் எடுத்துக் கொள்வதால்,

நமது உடல் குளிர்ச்சி நிலையில் இருக்கும். வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபடும். மேலும்,

நமது உடலில் அவ்வப்போது ஏற்படும் செரிமானப் பிரச்சினைகளை சரி செய்யும் திறன் இயற்கையாகவே கொண்டது, இந்த நீர்மோர். இதனால் நீர்மோர் வெயில் நேரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

7) நுங்கு:

நுங்கு என்பதும், நுங்கு மரம் என்பதும், நமது முன்னோர்கள் நமக்கு கொடுத்துச் சென்ற மிகச்சிறந்த ஒரு மருந்து என்று கூட கூறலாம்.

ஆனால், காலப்போக்கில் நாம் இந்த நுங்கு மரங்களை பல இடங்களில் அழித்துவிட்டோம். முடிந்தால்,

இந்த நுங்கு மரங்களை அதிகம் வளர்ப்போம். நமது நிலத்தடி நீரையும் பாதுகாப்போம். மேலும், இதில் கிடைக்கும் நுங்கு,

பல சத்துக்களை உள்ளடக்கி வைத்துள்ளது. நுங்கு நாம் சாப்பிடும் போது, இந்த நுங்கில் உள்ள,

vitamin A, vitamin b, vitamin c, potassium, phosphorus, போன்ற பல சத்துக்கள் இந்த நூலில் இருந்து நமக்கு கிடைக்கின்றது.

இதனால் நுங்கு நாம் சாப்பிடும்போது வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட முடியும். மேலும்,

பல சத்துக்களை நாம் பெற முடியும். இதனால் நீங்கள் நுங்கை கிடைக்கும்போதெல்லாம் சாப்பிடுங்கள். மருந்து கூட தேவை இலலை.

மேலும் படிக்க : மார்பு பகுதியில் வலி வந்தால் மாரடைப்புக்கான அறிகுறியா ? What is Heart Attack Symptoms in Tamil

8) எலுமிச்சை ஆப்பிள் சாத்துக்குடி மற்றும் திராட்சை:

எலுமிச்சை பழம் ஒரு குளுக்கோஸ் தன்மை வாய்ந்தது. வெயில் நேரத்தில் குறிப்பாக,

எலுமிச்சை பழத்தை சாறாக எடுத்துக் கொள்ளும் பொழுது, நமக்கு உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியும்.

உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியாக உணர முடியும். இதனால் வெயில் காலத்தில் கண்டிப்பாக இந்த எலுமிச்சை பழச்சாறு கண்டிப்பாக நீங்கள் வாரத்தில் இரண்டு நாட்களாக கூட எடுத்துக்கொள்ளலாம். மேலும்,

ஆப்பிள் அதிகப்படியான ஒரு சத்து நிறைந்ததாக இருப்பதால், இதனையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். மேலும்,

திராட்சையிலும் நல்ல ஒரு சத்துக்கள் நிறைந்துள்ளது. நீர் தன்மையும் கொண்டது. இதனால் திராட்சையை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். மேலும்,

சாத்துக்குடி என்பது எலுமிச்சை பழம் போலவே நல்ல ஒரு சத்து நிறைந்தது. குறிப்பாக வெயில் காலத்தில் நீங்கள் சாத்துக்குடியை,

சாத்துக்குடி ஜூஸ் செய்து குடித்துவந்தால் உங்கள் உடலுக்கு நல்ல ஒரு புத்துணர்ச்சியும், உடல் சோர்வு,

மனச்சோர்வு நீங்கி, நல்ல ஆரோக்கியமாக இருக்க முடியும் உடலுக்கு அதிகப்படியான தெம்பு கிடைக்கும்.

வெயில் காலத்தில் எடுத்துக் கொள்ளக் கூடிய காய்கறிகள்:

a) வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காய் அதிக நீர் சத்து கொண்டிருப்பதால் நமது உடலுக்கு அதிகம் நன்மை விளைவிக்கும்.

இதனால், வெயில் காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய முக்கியமான காய்கறி என்றால் அதில் வெள்ளரிக்காயை எடுத்துக்கொள்ளலாம். மேலும்,

அதிகப்படியான நார்ச்சத்து கொண்டது இந்த வெள்ளரிக்காய். இதனால் மலம் கழிப்பதில் பிரச்சனை போன்றவை ஏற்பட வாய்ப்பு குறைவு.

இதனால் இந்த வெள்ளரிக்காயை சாப்பிட்டுவர பல பிரச்சனை சரியாகி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

b) சுரக்காய்:

சுரைக்காயை நீங்கள் எடுத்துக் கொள்ள உங்களுக்கு உடல் எடை குறைப்பு போன்ற விஷயங்களுக்கு உதவி செய்யும். மேலும்,

சுரைக்காயில் அதிகப்படியான நீர் சத்து உள்ளது. இந்த அதிகப்படியான சத்தால் நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது,

நமது செரிமான மண்டலத்தில் பெரிய கோளாறுகளை ஏற்படுத்தாமல் குடல் போன்ற உறுப்புகளையும் பாதுகாப்பு வளையத்தில் வைத்திருக்க உதவுகிறது.

இதனால் இந்த சுரைக்காயை நீங்கள் அவ்வப்போது வெயில் காலத்தில் குறிப்பாக எடுத்துக் கொள்வது நன்மை விளைவிக்கும்.

c) பூசணிக்காய்:

பூசணிக்காய் நமது உடலுக்கு நல்ல சத்துக்களை கொடுக்கக்கூடியது. வெண்பூசணி, மஞ்சள் பூசணி என்று இரு வகைகள் உள்ளது.

இந்த, இரு வகைகள் கொண்ட பூசணிக்காயை உணவாக நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது, வைட்டமின் சத்துக்களும் நமக்கு கிடைக்கிறது.

மேலும், நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியது. இதனால் இரண்டு பூசணிக்காய் வகையில்,

எந்த பூசணிக்காய் கிடைத்தாலும் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக வெயில் காலத்தில் உணவாக இதை எடுத்துக்கொள்ளும் பொழுது நல்ல மாற்றம் கொடுக்கும்.

மேலும் படிக்க : Kidney Failure Symptoms In Tamil – சிறுநீரக பாதிப்புக்கான 10 அறிகுறிகள்

d) பாகற்காய்:

பாகற்காயில் அதிகப்படியான iron, calcium, vitamin c, போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும், இதில் உள்ள கசப்புத் தன்மையால் உடலில் உள்ள நச்சு பூச்சிகள் அழிந்துவிடும். மேலும்,

இந்த பாகற்காயில் உள்ள சத்துக்கள் காரணமாக நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாடாக இருக்க உதவுகிறது. மேலும்,

நமது உடலுக்கு செரிமான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது. இது போல பல நன்மைகள் இந்த பாகற்காயில் உள்ளது. இதனால் கண்டிப்பாக முடிந்தவரை பாகற்காய் எடுத்துக் கொள்ளுங்கள்.

e) கேரட்:

கேரட்டில் vitamin b6, vitamin A, calcium, போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும், இந்த கேரட்டில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது.

இதனால் செரிமான மண்டலத்தை பாதுகாக்கிறது. மேலும், இந்த கேரட் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது.

கண்கள் போன்றவற்றிற்கும் கேரட் நல்லது. இதனால் கேரட்டை நீங்கள் அவ்வப்போது எடுத்துக் கொள்வது உங்கள் உடல்நலத்திற்கு நன்மை அளிக்கும்.

வெயில் காலத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகள்:

பொதுவாக வெயில் காலத்தில் அனைவரும் சரியாக புரிதல் இல்லாத காரணத்தால் வெயில் தாக்குதலில் இருந்து விடுபடலாம் என நினைத்து,

பல தவறான உணவு பழக்கங்களை மேற்கொள்கின்றனர். இதனால் பல உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இந்த நிலை ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், நாம் வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றை இப்போது பார்க்கலாம்.

i) icecream/ஐஸ்கிரீம்:

வெயில் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும் என நினைத்து,

பலரும் தவறாக புரிதல் கொண்டு ஐஸ்கிரீம் அதிக அளவில் சாப்பிடுகின்றனர். இதை முழுக்க முழுக்க தவிர்க்க வேண்டும்.

ஏனென்றால், வெயில் நேரத்தில் நாம் ஐஸ்கிரீம் அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது, நமது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தி,

சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பாக அமைகிறது இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட ஐஸ்கிரீம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மேலும் படிக்க : How to save our life from Heart Attack in Tamil | மாரடைப்பின் போது நமது உயிரை காப்பாற்றுவது எப்படி ?

ii) மசாலா உணவுகள்:

மசாலா உணவுகளை, அதிகம் காரம் சேர்க்கக் கூடிய உணவுகளை வெயில் நேரங்களில் தவிர்க்க வேண்டும். ஏனென்றால்,

அதிக காரம் உள்ள உணவுகள் நமது உடலில் மேற்கொண்டு சூட்டினை அதிகப்படுத்தும். மேலும் இதனால்,

எளிதில் நமது உடல் dehydrate ஆகும். இதனால் மசாலா உணவுகளை வெயில் காலத்தில் தவிர்ப்பது நல்லது.

iii) Junk Foods/ எண்ணெய் பொருள்கள்:

ஜங்க் புட்ஸ் அல்லது எண்ணெயில் பொரித்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை வெயில் நேரங்களில் தவிர்ப்பது நல்லது.

ஏனென்றால், அதிகப்படியான கொழுப்பு தன்மையும் நமது உடலில் சேர தொடங்கும். மேலும் இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

இதனால் செரிமானம் சரிவர நடக்காமல் மலம் கழிக்கும் பிரச்சினையும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால்,

இந்த எண்ணெய் பொரித்த உணவுகள், ஜங்க் புட்ஸ் போன்றவைகளை முழுவதும் எல்லா நேரங்களிலும் தவிர்த்துவிடுவது நல்லது.

Notes:

சம்மர் சீசனில், நாம் சொன்ன இந்த தகவல்களை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் உடல் நலத்தில் முன்பு இருந்ததை விட உயர்ந்த ஒரு மாற்றம் இருக்கும். மேலும்,

உடல் ஆரோக்கியமாகவும் வெயில் தாக்கத்தில் இருந்து விடுபட்டு நல்ல முறையில் வாழ முடியும்.

இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உங்கள் உறவினர்கள், குடும்பத்தார்கள் அனைவருக்கும் அனுப்பி அவர்களும் ஆரோக்கியமாக வாழ வகை செய்யுங்கள்.

ஒருவரின் ஆரோக்கியம் ஒரு குடும்பத்தின் ஆரோக்கியம், ஒரு குடும்பத்தின் ஆரோக்கியம், ஒரு ஊரின் ஆரோக்கியம் என்று நினைத்து செயல்படுவோம் நன்றி.

மேலும் படிக்க : விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *