How to Reduce Belly fat in Tamil | தொப்பை மற்றும் உடல் எடை குறைய என்ன செய்வது?
வணக்கம், Reduce belly fat, உடல் எடை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் இன்றைய காலகட்டத்தில் பெரிய பிரச்சினையாகவே உள்ளது.
உடல் எடை என்பது அதிகமாக இருப்பது தவறில்லை. ஆனால், தேவையில்லாத இடத்தில் எடைபோடுவது அல்லது,
தொப்பை போடுவது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. Reduce belly fat என்பது தேவைப்படுகிறது. அந்த காலத்தில் இருந்த உடலுழைப்பு,
வேலைகள் மற்றும் உணவுகள், தூக்க நேரங்கள், என இதில் எதுவுமே, இந்த காலத்தில் பின்பற்றுவது இல்லை.
இதுதான் உலகிலுள்ள மனிதர்களின் பிரச்சினையில் முதலாவதாக உள்ளது. இதனால் உடல் எடை குறைப்பது மற்றும்,
Reduce Belly Fat எனப்படும் தொப்பையை குறைப்பது எப்படி என்பது பற்றி 6 வழிமுறைகள், இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். முழுவதும் பார்த்து பயன் அடையுங்கள். வாங்க பார்க்கலாம்.
1) தண்ணீர் மற்றும் சுடுதண்ணீர்:
முதலில் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் மற்றும் குறைவாக இருப்பவர்கள் என்று இல்லாமல்,
அனைவரும் அதிலும் முக்கியமாக உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் அல்லது அதிக அளவில் தொப்பை உடன் இருப்பவர்கள்,
காலையில் எழுந்ததும், முதலில் செய்ய வேண்டியது, இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
உங்களால் முடிந்தால் காலையில் 2 டம்ளர் அளவில் தண்ணீரை சுட வைத்து சுடு தண்ணீராக குடிப்பது சிறந்தது.
இப்படி சுடு தண்ணீர் குடிப்பதால் நமது உடலில் உள்ள தேவையில்லாத கெட்ட நீரை வியர்வை மூலம் வெளியேற்றுகிறது. மற்றும்,
வயிற்றிலுள்ள தேவையில்லாத கொழுப்புகளை வெளியேற்றுகிறது. இதனால் தினமும் அதிகளவில் தண்ணீர் குடியுங்கள்,
மேலும் படிக்க: Best Tricks to see Whatsapp of Other’s Mobile without Touch | Tamil |
மேலும் காலை மற்றும் இரவு நேரங்களில் முடிந்த அளவு சுடுதண்ணீர் குடியுங்கள் நல்ல ஒரு மாற்றத்தை காண்பீர்கள்.
2) புரத சத்து உணவுகள்/ Protien Foods:
புரோட்டீன் உணவுகள் எனப்படும் புரத சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி எடுத்துக்கொள்வதால்,
நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் தினமும் அதிக அளவில் கிடைத்துவிடும். மேலும்,
பசி என்பது நமக்கு நீண்ட நேரத்திற்கு இருக்காது. இதனால் நாம் தேவையில்லாமல், நொறுக்குத்தீனிகள் அல்லது தேவையில்லாத உணவுகளை தவிர்க்க ஒரு வாய்ப்பாக அமையும்.
இதன் மூலம் தேவையில்லாத உணவுகளை ஒதுக்கி நல்ல சத்து நிறைந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்வோம். மேலும்,
உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் உணவுகள் உண்பதை தவிர்த்து ஆரோக்கியமுடன் வாழ முடியும்.
3) வைட்டமின் D சத்து:
நம் உடலில் அதிகப்படியான உடல் எடை கூடிக்கொண்டே போவதை கட்டுப்படுத்தும் ஆற்றல், இந்த vitamin D என்னும் சத்துக்கு உள்ளது.
Vitamin D சத்து என்றவுடனே நாம் என்னவென்று யோசிக்கலாம். ஆனால், எளிதான ஒன்று என்றால் சூரிய ஒளி என்பதில் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதாகும்.
இதனால், தினமும் காலையில் சூரிய ஒளி படும் வகையில் நாம் சிறிது நேரம் இருப்பது நல்லது. Vitamin D சத்துக்கள் நிறைந்த,
இந்த சூரியன் நமக்கு இயற்கையில் கிடைத்த வரப்பிரசாதம். வழக்கமாக இதுபோல் கிடைக்கும் வைட்டமின் டி சத்துக்களை நாம் தொலைத்து விட்டு,
காலை சூரியன் வரும் நேரத்தை விட்டு விட்டு, தாமதமாக எழுந்து, சரியான உணவு பழக்கம் இல்லாமல், இந்த வைட்டமின் D,
மேலும் படிக்க: கார் இன்சூரன்ஸ் பாலிசி வகைகள் | Types of car insurance policy in Tamil
சத்துக்காக நாம் வைட்டமின் D மாத்திரைகள் மற்றும் டானிக்குகள் போன்ற மருந்து பொருட்களை எடுத்துக் கொள்கிறோம்.
இதைவிட, சூரிய ஒளியில் இருப்பது உடல் எடையை குறைக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்று அஞ்சுபவர்கள், அல்லது
உடல் எடை அதிகம் இருப்பவர்கள் காலையில் தினமும், சூரிய ஒளியில் சிறிது நேரம் இருக்கலாம்.
முடிந்தால் சூரிய ஒளி படும் போது காலையில், ஏதேனும் உடற்பயிற்சிகள் செய்யலாம். யோகா செய்யலாம். இது மிகவும் சிறந்தது.
4) கொழுப்பு உணவு தவிர்த்தல்:
உடல் எடை அதிகம் கூடிக்கொண்டே இருப்பவர்கள், கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
மேலும், கொழுப்பு உணவுகளையும் முழுமையாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால், கார்போஹைட்ரேட்
உணவில், உடல் எடையை அதிகரிக்க கூடிய விஷயம் மட்டுமே உள்ளது. கொழுப்பு உணவுகள், மேலும் எடையை அதிகமாக்கி,
தேவையில்லாத கொழுப்பை வயிற்றில் உண்டாக்கி தொப்பையாக மாறுகிறது. பிறகு நாம் என்ன முயற்சி செய்தாலும் இந்த கொழுப்பு உணவுகளையும்,
கார்போஹைட்ரேட் உணவுகளையும் எடுத்துக் கொண்டே இருக்கும் பொழுது, அதில் முழுமையான பலன் கிடைக்காது.
இதனால், முதலில் நீங்கள் உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும். உடல் எடை குறைய வேண்டும் அல்லது,
மேலும் படிக்க: உடல் எடையை அதிகரிப்பது எப்படி? How to gain Weight in Tamil
உங்கள் வயிற்றில் உள்ள தொப்பையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் நீங்கள் உடற்பயிற்சி செய்வது,
யோகா செய்வது போன்ற விஷயங்களைத் தாண்டி முதலில் நீங்கள் அடியெடுத்து வைக்கக் கூடிய ஒரு விஷயம் என்றால் அது,
இந்த கொழுப்பு உணவுகளை தவிர்த்தல் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்து, புரோட்டீன் உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.
5) உடல் எடையை சரிபார்த்தல்:
நீங்கள் உடற்பயிற்சி செய்தால், யோகா போன்ற உடல் எடையை குறைக்கும் விஷயங்களில் ஈடுபட்டால்,
நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் பொழுது உங்கள் உடல் எடையை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மாதத்தில் 2 முதல் 3 முறை உங்களுடைய உங்கள் உடல் எடையை சரி பார்ப்பது அவசியம். ஏன் என்று நீங்கள் யோசிக்கலாம்.
நாம் உடல் எடையை அவ்வப்போது சரி பார்த்து கொண்டு வரும் பொழுது மட்டுமே, நம் உடல் எடையை குறைக்க அல்லது வயிற்றில் உள்ள கொழுப்புகளை குறைக்க நாம்,
சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறோம். இன்னும் இத்தனை நாட்களில் நம்மால் உடல் எடையை குறைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு பயணிக்க முடியும்.
மேலும் படிக்க: விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil
இதனால் நாம் உடல் எடையை சரி பார்த்துக் கொள்வது நல்லது. முடிந்தால் வாரம் ஒரு முறை சரி பார்த்துக் கொள்வது, இன்னும் உங்களுக்கு ஒரு ஆர்வத்தை தூண்டும்.
6) தியானம் செய்தல்:
தினமும் தியானம் செய்ய கற்றுக்கொள்வது, உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்.
உங்கள் மனதையும் எண்ணத்தையும் சுத்தப்படுத்தும் ஆற்றல் இந்த தியானம் ஒன்றுக்கு மட்டுமே உள்ளது. மேலும்,
தியானம் நாம் அவ்வப்போது செய்யும் பொழுது, அமைதியான இடத்தில் காலை நேரத்தில் செய்வது சிறப்பு. உங்களுக்கு முடியவில்லை என்றால்,
ஒரு நாளில் ஒரு முறையாவது அரை மணி நேரம் முடிந்தால், தினமும் தியானம் செய்ய வேண்டும். இது உங்கள் மூச்சு, உங்கள் நுரையீரல், உங்கள் இருதயம்,
உங்கள் இரத்தம் அனைத்தும் நல்ல முறையில் செயல்பட உதவும். மேலும் உங்கள் உடல் எடை தானாகவே இந்த தியானத்தின் மூலம் குறைய ஆரம்பிக்கும். இதனால்,
இத்தனை நன்மைகள் இந்த தியானத்தின் மூலம் கிடைக்கின்றது. மேலும் உங்களுடைய எடை குறைய, இந்த தியானம் செய்யுங்கள் மேலும், உங்களுக்கு இந்த தியானத்தின் மூலம்,
நல்ல ஒரு மன சூழல், நம்பிக்கை போன்றவை கிடைக்கும். நீங்கள் இதனால் தினமும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரமாவது, இந்த தியானம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.
மேலும் படிக்க: What is Crypto currency ? | கிருப்டோ கரன்சி என்றால் என்ன ? | Tamil
Q&A / வினா, விடை:
a) உடல் எடை குறைக்கும் போது ஆட்டுக்கறி சாப்பிடலாமா?
விடை: ஆட்டுக்கறி சாப்பிட வேண்டாம் இது உங்களுக்கு அதிகப்படியான கொழுப்பு மற்றும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
b) உடற்பயிற்சி செய்தால் கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்ளலாமா? உடல் எடை கூடுமா?
விடை: நீங்கள் உடற்பயிற்சி செய்தாலும், செய்யவில்லை என்றாலும், உடல் எடையை குறைக்க வேண்டுமெனறால், அல்லது கொழுப்பை குறைக்க வேண்டும். என்றால்,
கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்து கொழுப்பு உணவுகளை எடுத்துக்கொள்வதால், உடற்பயிற்சி செய்தும் பலன் இல்லாமல் ஆகிவிடும்.
c) புரத உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ளலாமா?
புரதம் நிறைந்த உணவுகளை இரவில் உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், புரதம் நிறைந்த உணவுகள் செரிமானம் அடைய,
அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் காலை மற்றும் மதிய நேரங்கள் புரத உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இரவு நேரங்களில் புரத உணவுகளை தவிர்ப்பது நல்லது.
மேலும் படிக்க: தலைமுடி உதிர்வதை தடுக்க 10 வழிமுறைகள் | 10 Tips to control Hair Fall permanently in Tamil