இரத்தம் விரைவாக அதிகரிக்க உதவும் 6 பழங்கள் | Hemoglobin Increase foods in Tamil 

இரத்தம் விரைவாக அதிகரிக்க உதவும் 6 பழங்கள் | Hemoglobin Increase foods in Tamil:

வணக்கம், Hemoglobin food , நமது உடலில் இரத்தமானது சரியான அளவில் இருக்கும் பொழுது தான் நமது உடலுக்கு எல்லா இடத்திற்கும் இரத்தமானது சரியாக சென்று சேர முடியும்.

மேலும், நமது உடலில் எல்லா உறுப்புகளின் இயக்கமும் சரியான விதத்தில் இயங்கும். மேலும் உடலுக்கு தேவையான சக்தியை கொடுத்து எந்த நோய்களும் வராமல் தடுக்கவும் பயன்படுகிறது.

ஆகவே, நமது உடலுக்கு ஒரு அடிப்படை என்றால் அது இரத்தம் ஆகும். இதனால் அவ்வப்போது நமது உடலின் ரத்த அளவை சரிபார்த்துக் கொள்ளவும். இது நல்லது.

இந்த பதிவின் மூலம் நீங்கள் ரத்தத்தினை இயற்கையாக உங்கள் உடம்பில் எப்படி அதிகரிக்க செய்யலாம். என்பதை பற்றி பார்க்க போகிறோம். பார்த்து பயன் பெறுங்கள்.

இரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதற்கான காரணம்:

பொதுவாக நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளும் பொழுது, ரத்த உற்பத்தி சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.

நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து கொண்ட உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரும்பு சத்து குறைபாடு ஏற்படும்பொழுது தான், நமது உடலுக்கு தேவையான,

இரத்தத்தினை உற்பத்தி செய்வது சற்று குறைந்து விடுகிறது. மேலும் இது காலப்போக்கில் இரத்தம் குறைபாட்டுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

நமது உடலில் வைட்டமின் சி சத்துக்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்.

மேலும் படிக்க:தலைமுடி உதிர்வதை தடுக்க 10 வழிமுறைகள் | 10 Tips to control Hair Fall permanently in Tamil

இரத்த சோகை என்றால் என்ன?

பொதுவாக ரத்த சோகை என்பது இன்றைய காலகட்டத்தில் பலருக்கு ஏற்படுகின்றது இதற்கு காரணம் என்னவென்று அதிக பேர் சிந்திப்பதில்லை பொதுவாக,

i) ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 13.5 – 18 வரை இருக்க வேண்டும்.

ii) பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 12 – 16 என்ற அளவில் இருக்க வேண்டும்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு இந்த அளவிற்கு கீழ் குறையும் பொழுது சத்துக்கள் குறைந்து இரத்த சோக ஏற்படுகிறது.

இதனால் முறையாக நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்து அதற்கு ஏற்றார் போல் நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.

தற்போது என்னென்ன பழங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.

1) மாதுளை பழம்:

100 கிராம் மாதுளையில் 0.3 mG அளவில் இரும்பு சத்து உள்ளது. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சரியாக வைத்துக் கொள்வதற்கு மாதுளை பழம் ஒரு சிறந்த பழம் ஆகும்.

அவ்வப்போது மாதுளை பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நமது உடலில் ஹீமோகுளோபின் சம்பந்தப்பட்ட பிரச்சனை வர வாய்ப்பே இல்லை.

மாதுளை பழத்தில் iron, கால்சியம், கார்போஹைட்ரேட், நார்சத்து, போன்ற சத்துக்கள் கிடைக்கும். மேலும் இந்த மாதுளை பழம் பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு நல்ல முறையில் பயன் அளிக்கக் கூடியது.

மாதுளை பழத்தை எப்படி வாங்கலாம் என்றால் விதையுள்ள மாதுளை பழத்தை வாங்குவது சிறந்தது. விதையோடு நாம் சேர்த்து சாப்பிடும் பொழுது அதன் பயன் அதிகபட்சமாக கிடைக்கும்.

மேலும், இரத்த உற்பத்தியை சரியான முறையில் வைத்துக்கொள்ள இந்த பழம் உதவுகிறது. தினமும் ஒரு மாதுளை பழம் என்ற வீதம் கூட சாப்பிட்டு வரலாம்.

முடியாதவர்கள் வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறையாவது ஒரு மாதுளை பழத்தை சாப்பிட்டால் கூட போதுமானது.

மேலும் படிக்க : பாதாம் மற்றும் பிஸ்தா விட அதிக ஊட்டச்சத்து நிறைந்த விலை குறைவான உணவுகள் :

2) அத்திப்பழம்:

100 கிராம் அத்திப்பழத்தில் 2 mg அளவில் இரும்பு சத்து உள்ளது. இதனால் ரத்த உற்பத்திக்கு இது மிகவும் உதவுகிறது. மேலும் அத்திப்பழம் பலவிதமான நன்மைகளை உடலுக்கு கொடுக்கிறது.

தினமும் இரண்டு அல்லது மூன்று அத்திப்பழங்களை இரவில் ஊற வைத்து காலையில் எழுந்து சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டு வர விரைவில் ரத்த உற்பத்தி அதிகமாகும்.

சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரவில் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட விரும்பாதவர்கள், தேனில் ஊற வைத்த அத்திப்பழம் கடைகளில் கிடைக்கும்.

அதனை கூட தினமும் சாப்பிட்டு வரலாம். தினமும் சாப்பிட்டு வர அதிகமாக இரும்பு சத்து நமது உடலுக்கு கிடைக்கிறது. ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது நமது உடலுக்கு பலம் அதிகரிக்கிறது.

3) கொய்யாப்பழம்:

கொய்யா பழத்தில் இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.

மேலும், இந்த கொய்யாப்பழத்தில் 100 கிராம் அளவில் நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது 210 mg அளவில் Vitamin C சத்து கிடைக்கிறது. மேலும்,

இதில் 0.26 mg இரும்பு சத்து கிடைக்கிறது. இதனால் நமது உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இது மிகவும் பயன்படுகிறது.

நமது உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க, இந்த vitamin C சத்தும் தேவைப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இந்த கொய்யாப்பழத்தில் இருப்பதால் இதனை அனைவரும் எடுத்துக் கொள்வது நன்மை அளிக்கும்.

4) உலர் திராட்சை:

திராட்சை பொருத்தவரையில் நாம் இரண்டு விதம் பார்த்திருப்போம் கருப்பு திராட்சை மற்றொன்று பச்சை திராட்சை, இந்த இரண்டில் கருப்பு திராட்சை அதிக சத்து கொண்டது.

100 கிராம் கருப்பு திராட்சையில் 23% iron உள்ளது. அதாவது 2 mg அளவில் இரும்பு சத்து உள்ளது. கருப்பு திராட்சையில் Anthocyanin உள்ளது.

பச்சை திராட்சையில் catechin உள்ளது. விதை உள்ள திராட்சியாக எடுத்துக் கொள்வது அதிக சத்துக்களை நமக்கு கொடுக்கும்.

மேலும் படிக்க: Best 5 Drinks That Help You To Sleep Better | படுத்தவுடன் தூங்க என்ன செய்வது ?

5) பேரிச்சம்பழம்:

பேரிச்சம் பழத்தில் அதிகப்படியான vitamin C , மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளது. இதனால் நமது உடலில் ரத்த உற்பத்தியை அதிகப்படுத்த இது பயன்படுகிறது.

இதனால், ஹீமோகுளோபின் அளவு அதிகம் அதிகரிக்கும். 100 கிராம் பேரிச்சம் பழத்தில் 0.9 அளவு இரும்பு சத்து உள்ளது. இதனால்,

நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு அதிகம் கிடைக்கிறது. தினமும் இரவில் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழத்தை பாலில் ஊற வைத்து காலையில் அப்படியே சாப்பிடலாம்.

அல்லது காலையில் சாதாரணமாக கூட இரண்டு அல்லது மூன்று பேரிச்சம்பழத்தை சாப்பிடலாம் உடலுக்கு நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கும்.

6) தர்பூசணி பழம்:

தர்பூசணி பழத்தில் 90% நீ செத்துக் கொண்டது. அதே நேரம் 0.24mg அளவில் iron சத்துக்கள் உள்ளது. Iron மற்றும் vitamin சத்துக்கள் அதிகமாக இருப்பதால்,

இது நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை விரைவாக அதிகரிக்க செய்கிறது. இதில் vitamin A சத்துக்களும் அதிகம் கிடைக்கிறது.

இதனால் தர்பூசணி பழத்தை உங்க போது சாப்பிட்டு வாருங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதை நாம் உணர முடியும் மேலும் இரும்பு சத்துக்கள் அதிகரித்து ஆரோக்கியமாக வாழ வழி செய்யும்.

Conclusion/ முடிவுரை:

இந்த பதிவில் பார்த்த ஆறு பழங்களையும் சாப்பிட்டு வாருங்கள். இதில் ஏதாவது ஒன்றை மட்டும் கூட சாப்பிட்டு வரலாம்.

எந்தெந்த பழங்கள் உங்கள் கைகளுக்கு கிடைக்கிறது. அப்போது அதை சாப்பிட்டு விடுங்கள். இது பிடிக்கிறது இது பிடிக்கவில்லை, எனக்கு எந்த பழங்களையும் நாம் ஒதுக்கி விடக்கூடாது.

ஏனென்றால், ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு சத்துக்கள் உள்ளது. அதை நாம் நமது உடலுக்கு எடுத்துக் கொள்வது நமக்கு நன்மை மட்டுமே.

நாம் பார்த்த இந்த பழங்களை சரிவர தேவைக்கேற்ப எடுத்துக் கொண்டால் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து.

நாம் ஆரோக்கியமாக நல்ல முறையில் ஹீமோகுளோபின் அளவை வைத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும்.

மேலும் படிக்க: விந்து விரைவில் வெளியேறுகிறதா ? Erection Problem in Tamil

2 comments

    1. In the dynamic world of telecommunications, where technology constantly evolves and markets adapt to shifting landscapes, Verizon Communications Inc. stands tall as a trailblazer. With a market capitalization that commands attention and respect, Verizon has solidified its position as a telecommunications giant. In this article, we delve into the intricate details that underlie Verizon’s remarkable market cap and what sets it apart in the competitive industry. click here >>> read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *